YouTurn

மேற்கு வங்க பாஜகவில் வெற்றி பெற்ற 72 பேரும் பிற கட்சியைச் சேர்ந்தவர்களா ?

மேற்கு வங்க பாஜகவில் வெற்றி பெற்ற 72 பேரும் பிற கட்சியைச் சேர்ந்தவர்களா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

பாஜக மேற்கு வங்க தேர்தலில் வெற்றி பெற்ற இடங்கள் 75. அதில் திரிணாமூல் காங்கிரஸ்லிருந்து வாங்கப்பட்டவர்கள் 35, இடதுசாரி கட்சிகளிடமிருந்து 25, காங்கிரஸிடம் இருந்து 12, மூன்று பேர் ஏற்கனவே பாஜகவில் இருந்தவர்கள்.

விரிவான விளக்கம்

2021 மேற்கு வங்க தேர்தலில் பாஜக கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 75 எம்எல்ஏக்களில் 72 பேர் பிற கட்சிகளில் இருந்து வாங்கப்பட்டவர்கள் என்றும், 3 பேர் கடந்த முறை வென்ற எம்எல்ஏகள் எனும் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருப்பதை பார்க்க முடிந்தது. ஆகையால், இதன் உண்மைத்தன்மை குறித்து அறிந்து கொள்ள ஆராய்ந்து பார்த்தோம்.



Facebook link | Archive link 

உண்மை என்ன ?

2021 மேற்கு வங்க தேர்தலில் பாஜக வென்றது 77 இடங்கள், 75 இடங்கள் அல்ல. 2016-ம் ஆண்டு தேர்தலில் 3 இடங்களை மட்டுமே வென்ற பாஜக இம்முறை 77 இடங்களை வென்று எதிர்க்கட்சியாக உருவெடுத்து இருக்கிறது.

கடந்த சில ஆண்டுகளாக மேற்கு வங்க அரசியலில் கட்சி தாவல்கள் அதிகரித்தன.  திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளில் இருந்து பலரும் பாஜகவில் இணைந்தனர். குறிப்பாக, ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், முக்கியத் தலைவர்கள் பலரும் பாஜகவில் இணைந்தது நாடு முழுவதும் கவனம் பெற்றது.

எனினும், 2021 தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக எம்எல்ஏக்கள் அனைவருமே பிற கட்சியில் இருந்து தாவியவர்கள் அல்ல. மேற்கு வங்கத்தில் அதிக அளவில் கட்சி தாவியவர்கள் எனப் பார்த்தால், முதலிடம் பிடித்தது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியாகத் தான் இருக்கும்.



2020 டிசம்பர் டிசம்பரில் வெளியான ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தியில், திரிணாமுல் காங்கிரசைச் சேர்ந்த சுவேந்து அதிகாரி உள்பட 6 எம்எல்ஏக்கள், இடதுசாரி மற்றும் காங்கிரசைச் சேர்ந்த 4 எம்எல்ஏக்கள் அமித்சா முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர் என வெளியாகி இருக்கிறது.



" திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து 34 மேற்கு வங்க சட்டமன்ற உறுப்பினர்கள் பாஜகவிற்கு சென்றனர். அவர்களில் 13 பேருக்கு மட்டுமே அக்கட்சி சார்பில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தது " என 2021 மார்ச் மாதம் பிசினஸ் இன்சைடர் செய்தியில் வெளியாகி இருக்கிறது.



" திரிணாமுல் காங்கிரஸ்லிருந்து பாரதிய ஜனதாவுக்கு மாறிய பெரும்பாலான எம்எல்ஏக்களுக்கு இந்த தேர்தல் முடிவு நல்ல முடிவு இல்லை என்பதை காண்பித்து இருக்கிறது. டி.எம்.சி, இடதுசாரி, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 19 எம்எல்ஏக்கள் 2019 முதல் பாஜகவில் சேர்ந்து 2021 தேர்தலில் போட்டியிட வாய்ப்பு பெற்றனர். ஆனால் அவர்களில் 6 பேர் மட்டுமே வெற்றிப் பெற முடிந்தது. இதில், டி.எம்.சி 4, காங்கிரஸ் மற்றும் இடதுசாரி தலா 1 அடங்கும் " என மே 5-ம் தேதி தி வொயர் செய்தியில் வெளியாகி இருக்கிறது.



2021 மேற்கு வங்க தேர்தலில் வெற்றிப் பெற்ற பாஜக எம்எல்ஏக்களின் பட்டியலில் உள்ள முதல் 20 பேரை எடுத்து அவர்களின் பின்னணி குறித்து தேடிப் பார்க்கையில், ஒரு சிலரே பாஜக கட்சியில் எம்.பி, எம்எல்ஏ பதவியில் இருந்த, போட்டியிட்ட அரசியல்வாதியாக இருக்கின்றனர். மீதமுள்ளவர்களின் அரசியல் பின்னணி குறித்த விவரங்கள் இல்லை, அவர்கள் புதுமுகங்களாக இருக்கின்றனர். முதல் 20 இடங்களில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய முன்னாள் எம்எல்ஏ மிஹிர் கோஸ்வாமி பெயர் இடம்பெற்று இருக்கிறது. அவரின் பெயர் மேலே உள்ள தி வொயர் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பல மாநிலங்களில் பிற கட்சியில் இருந்து பாஜகவிற்கு தாவுவது அதிகம் நிகழ்வதை பார்க்க முடிகிறது. அவர்களுக்கு தேர்தலில் சீட்களும் வழங்கப்படுகின்றன. அதேபோல், மேற்கு வங்கத்தில் பிற கட்சியில் இருந்து பலரும் பாஜகவிற்கு தாவி இருக்கிறார்கள். ஆகையால், மேற்கு வங்க பாஜக வென்ற இடங்கள் அனைத்துமே பிற கட்சியில் இருந்து விலைக்கு வாங்கப்பட்டவர்கள் என கிண்டல் செய்யும் நோக்கத்தில் இப்பதிவுகள் பரப்பி இருக்கக்கூடும் எனத் தோன்றுகிறது.

முடிவு :

நம் தேடலில், மேற்கு வங்க தேர்தலில் பாஜக சார்பில் வெற்றிப் பெற்ற 72 பேரும் திரிணாமுல் காங்கிரஸ், இடதுசாரிகள், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலைக்கு வாங்கப்பட்டவர்கள் எனக் கூறும் தகவல் தவறானது. அப்படி எந்த தகவல்களும் வெளியாகவில்லை.

மேற்கு வங்கத்தில் பாஜக வென்றது 77 இடங்கள், 75 இல்லை. பிற கட்சியில் இருந்து பாஜகவிற்கு மாறிய எம்எல்ஏக்களில் 19 பேருக்கு மட்டுமே சீட் வழங்கப்பட்டது. அவர்களிலும் 6 பேர் மட்டுமே வெற்றி பெற்று இருக்கிறார்கள் என அறிய முடிகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் போலீஸ் தாக்குதலால் மாணவி உயிரிழந்தாரா? பரப்பப்படும் போலியான புகைப்படம்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி இறந்துவிட்டதாக AI தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பிவருகிற…

பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறு…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க