யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
1893-ம் ஆண்டு அமெரிக்காவின் சிகாகோவில் சுவாமி விவேகானந்தர் ஆற்றிய உரை அனைத்து மக்களையும் கவர்ந்த நினைவு. தன்னுடைய உரையின் தொடக்கத்தில் சகோதர , சகோதரிகளே எனும் விவேகானந்தர் உடைய வார்த்தைகளுக்கு கரகோஷங்கள் எழுந்தன. Facebook post Archived link சிகாகோவில் சுவாமி விவேகானந்தர் உரையின் காணக்கிடைத்த...
பரவிய செய்தி
சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவில் ஆற்றிய உரை காணக்கிடைக்காத அரிய வீடியோ.......தயவுசெய்து பகிருங்கள்

விரிவான விளக்கம்
1893-ம் ஆண்டு அமெரிக்காவின் சிகாகோவில் சுவாமி விவேகானந்தர் ஆற்றிய உரை அனைத்து மக்களையும் கவர்ந்த நினைவு. தன்னுடைய உரையின் தொடக்கத்தில் சகோதர , சகோதரிகளே எனும் விவேகானந்தர் உடைய வார்த்தைகளுக்கு கரகோஷங்கள் எழுந்தன.
Facebook post Archived link

சிகாகோவில் சுவாமி விவேகானந்தர் உரையின் காணக்கிடைத்த காட்சி என ஓர் வீடியோ இந்திய அளவில் முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் மட்டுமல்ல கடந்த 2017-ம் ஆண்டில் இருந்தே இந்த காட்சிகள் பரவி வருகிறது. அதன் உண்மைத் தன்மையை ஆராய்ந்து பதிவிட முயன்றோம்.
விவேகானந்தர் வீடியோ :
சுவாமி விவேகானந்தர் ஆற்றிய உரை எனப் பரவும் 2.56 நிமிடங்கள் வீடியோ குறித்து ஆராய்ந்தோம். அத்தகைய வீடியோவில் இடம்பெற்று இருப்பது பழமையான காட்சிகள் போல் இல்லை என்பதை மேலோட்டமாக கண்டாலே புரிந்து கொள்ளலாம்.
மேலும் , திரைப்படத்தில் இடம்பெற்ற காட்சிகள் போல் இருப்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது. இதையடுத்து, " vivekananda movie " என்ற வார்த்தைகளை கொண்டு இணையத்தை ஆராய்ந்த பொழுது 2012-ல் வெளியான திரைப்படத்தின் வீடியோ நமக்கு கிடைத்தது.

அந்த திரைப்படத்தில் 13-வது நிமிடத்தில் விவேகானந்தர் சிகாகோவில் உரை ஆற்றுவது போல் காட்சிகள் இடம்பெற்று இருக்கின்றன. அந்த காட்சிகளை எடுத்தே சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.
முடிவு :
நமக்கு கிடைத்த ஆதாரத்தின் படி, விவேகானந்தர் வாழ்க்கை குறித்த திரைப்படத்தில் இருந்து சிகாகோ உரையை மட்டும் எடுத்து உண்மையான காட்சிகள் என தவறாக பகிர்ந்து வருகின்றனர் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது .