YouTurn

எடப்பாடியாராக மாறிய கிங் கோலி எனப் போலி நியூஸ் கார்டை பரப்பும் பாஜகவினர்

எடப்பாடியாராக மாறிய கிங் கோலி எனப் போலி நியூஸ் கார்டை பரப்பும் பாஜகவினர்

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

எடப்பாடியாராக மாறிய 'கிங்' கோலி!

Archive Link

விரிவான விளக்கம்

விராட் கோலி தன்னுடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், இதயம் இன்னும் இளமையாக தான் இருக்கிறது (Dil toh baccha hai Ji) என்றுப் பதிவிட்டு குழந்தைகளுக்கான Climbing Games விளையாடுவதைப் போன்ற புகைப்படங்களைப் பதிவிட்டு இருந்தார். இதில் அவர் குனிந்து விளையாடுவதைப் போன்று அந்த புகைப்படங்கள் உள்ளது.

https://twitter.com/imVkohli/status/1647505653831983105

Archive link

எனவே இத்தோற்றத்தை கேலிச் செய்யும் விதமாக எடப்பாடியாராக மாறிய கிங் கோலி எனக் குறிப்பிட்டு சன்டிவி நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. அதில் "ஏய்.. ஈனா மீனா டீகா..!” எடப்பாடியாராக மாறிய 'கிங்' கோலி!" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.





உண்மை என்ன?

பரவக்கூடிய "சன்டிவி" நியூஸ் கார்டு குறித்து அவர்களது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தள பக்கங்களில் தேடியதில், "குழந்தையாக மாறிய விராட் கோலி!" என்ற தலைப்பில் நியூஸ் காடு ஒன்று பதிவிடப்பட்டுள்ளது.



Archive Link

அதில் '"ஏய்.. ஈனா மீனா டீகா..!” குழந்தையாக மாறிய 'கிங்' கோலி!' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மாறாக 'எடப்பாடியாராக மாறிய 'கிங்' கோலி!' என்று குறிப்பிட்டு எந்த நியூஸ் கார்டும் அவர்களது பக்கத்தில் பதிவிடப்படவில்லை. அது எடிட் செய்யப்பட்டது. 



மேலும் படிக்க: விராட் கோலியைத் தொடர்ந்து ஷாருக்கான் தனது பட்டப்படிப்பு சான்றிதழை வெளியிட்டதாகப் பரவும் பழைய புகைப்படம் !

சமீபத்தில் விராட் கோலியைத் தொடர்ந்து ஷாருக்கான் தனது பட்டப்படிப்பு சான்றிதழை வெளியிட்டதாகப் பழைய புகைப்படம்  ஒன்று பரப்பப்பட்டது குறித்தும் கட்டுரை வெளியிட்டு இருந்தோம்.

மேலும் படிக்க: பெப்சி உடனான ஒப்பந்தத்தை கோஹ்லி நிறுத்திக் கொண்டார்.

முடிவு:

நம் தேடலில் "எடப்பாடியாராக மாறிய கிங் கோலி" எனப் பரப்பப்பட்ட சன் டிவி நியூஸ் கார்டு போலியானது. 'குழந்தையாக மாறிய கிங் கோலி' என்றுப் பதிவிட்ட நியூஸ் கார்டை எடிட் செய்து பரப்பி வருகின்றனர் என்பதை அறிய முடிகிறது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க