YouTurn

விஜய் இளம்ஜோடி காலில் விழுந்ததாக பரவும் போலியான நியூஸ் கார்ட்!

விஜய் இளம்ஜோடி காலில் விழுந்ததாக பரவும் போலியான நியூஸ் கார்ட்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

"விஜய் இளம்ஜோடி காலில் விழுந்ததாக தகவல்" எனப் பரவும் நியூஸ் கார்டு போலியானது. புதியதலைமுறை இது குறித்து நியூஸ்கார்டு எதுவும் வெளியிடவில்லை என்று உறுதிபடுத்தியுள்ளது.

பரவிய செய்தி

அட குருட்டு ஸ்கூட்டி எவன் என்னனு தெரியாம கால்ல விழுந்து இருக்கான்

image.png

X Link | Archived Link

விரிவான விளக்கம்

கரூர் வேலுச்சாமிபுரத்தில் செப்டம்பர் 27 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கலந்து கொண்ட பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் உயிரிழந்தனர். இதில் இறந்தவர்களின் குடும்பத்தினரை தவெக தலைவர் விஜய், மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலுக்கு அக்டோபர் 27 அன்று நேரில் அழைத்து ஆறுதல் கூறினார். அப்போது பாதிக்கப்பட்ட மக்கள் உள்ள அறைக்குள் தவெக தலைவர் விஜர் தவறுதலாக நுழைந்து அவர்கள் காலில் விழுந்ததால் சிறுது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டதாக புதிய தலைமுறையின் நியூஸ் கார்ட் ஒன்று வைரலாகி வருகிறது. 


உண்மை என்ன? 

பரவி வரும் இந்த நியூஸ் கார்ட்டில் 28-10-2025 என்று குறிப்பிடப்பட்டிருந்தது. எனவே, இப்படி ஏதேனும் நியூஸ் கார்டை புதிய தலைமுறை வெளியிட்டதா என அவர்களது அதிகாரப் பூர்வ பக்கங்களில் ஆய்வு செய்தோம். அப்படி எந்த செய்தியும் கிடைக்கவில்லை. 


மேலும் keywords கொண்டு இணையத்தில் தேடிய போதும், விஜய் இளம்ஜோடி காலில் விழுந்தது குறித்து எந்தவொரு செய்தி ஆதாரமும் கிடைக்கவில்லை.


மேலும் உறுதி செய்ய புதிய தலைமுறை ஊடகத்தை தொலைப்பேசியில் தொடர்புகொண்டு இதுபற்றி கேட்டபோது, ‘இதுபோன்ற செய்தி எதையும் நாங்கள் வெளியிடவில்லை’ என்று கூறினர்.


இதையடுத்து புதியதலைமுறை ஊடகப்பக்கத்தில் அக்டோபர் 28ஆம் தேதி, பரவி வரும் நியூஸ் கார்ட் போலியானது என்றும், இந்த செய்தியை புதிய தலைமுறை வெளியிடவில்லை என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளனர். 


முடிவு: 

எனவே, "விஜய் இளம்ஜோடி காலில் விழுந்ததாக தகவல்" எனப் பரவும் நியூஸ் கார்டு போலியானது. புதியதலைமுறை இது குறித்து நியூஸ்கார்டு எதுவும் வெளியிடவில்லை என்று உறுதிபடுத்தியுள்ளது. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க