YouTurn

'அதிமுக தலைவர்களுக்கு விஜய் ரசிகர்கள் கொலை மிரட்டல்’ எனத் தந்தி டிவி வெளியிட்ட பழைய செய்தி!

'அதிமுக தலைவர்களுக்கு விஜய் ரசிகர்கள் கொலை மிரட்டல்’ எனத் தந்தி டிவி வெளியிட்ட பழைய செய்தி!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

இது 2018ஆம் ஆண்டு சர்கார் திரைப்படத்தின்போது வெளியான வீடியோ. அப்போதே அவர்கள்மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பரவிய செய்தி

அரிவாளை காட்டி ஆபாசமாக பேசி அதிமுக தலைவர்களுக்கு விஜய் ரசிகர்கள் கொலை மிரட்டல்


image.png


X link

விரிவான விளக்கம்

நடிகர் விஜய் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ளார். அக்கட்சியின் சார்பில் முதல் மாநில மாநாடு அக்டோபர் 28ஆம் தேதி விக்கிரவாண்டி அடுத்துள்ள வி.சாலையில் நடைபெற்றது.


https://x.com/i/web/status/1850360879109558509


இந்நிலையில் இரண்டு விஜய் ரசிகர்கள் கத்தியுடன் ஆபாசமாகப் பேசி அதிமுக தலைவர்களுக்குக் கொலை மிரட்டல் விடுத்து வீடியோ பதிவிட்டதாக ‘தந்தி டிவி’ செய்தி வெளியிட்டுள்ளது.


உண்மை என்ன?


தந்தி டிவி வெளியிட்ட செய்தி குறித்து தேடியதில், இதுதொடர்பாக ’நியூஸ் 18’ தளத்தில் 2018, டிசம்பர் 7ஆம் தேதி செய்தி வெளியிட்டுள்ளதைக் காணமுடிந்தது. அந்த செய்தியின் தலைப்பில் ‘சர்கார் சர்ச்சையின்போது மிரட்டல் வீடியோ வெளியிட்ட விஜய் ரசிகர்கள் கைது’ என்றுள்ளது. 



தற்போது தந்தி டிவி வெளியிட்டுள்ள செய்தியில் உள்ள அதே வீடியோவுடன் ’பாலிமர்’ தொலைக்காட்சி 2018-ல் செய்தி வெளியிட்டுள்ளது.



ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் 2018ஆம் ஆண்டு சர்கார் திரைப்படம் வெளியானது. அப்படத்தின் ஒரு காட்சியில் அரசின் இலவசத் திட்டங்களை விமர்சித்தும் இலவச மிக்ஸி, கிரைண்டர் போன்ற பொருட்களை தீயிலிட்டு எரிப்பது போன்றும் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கும். இதற்கு அதிமுக தரப்பிலிருந்து கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.


இந்நிலையில் லிங்கதுரை, சஞ்சய் என்ற விஜய் ரசிகர்கள் கத்தியுடன் ஆபாசமாகப் பேசிய வீடியோவை அனிஷேக் என்பவர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். இந்த வீடியோ தொடர்பாக 2018ஆம் ஆண்டே சைபர் க்ரைம் காவல் துறை வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கையும் எடுத்துள்ளது. மேற்கண்ட செய்திகளில் இந்த தகவலும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இந்த சம்பவம் தற்போது நடந்ததாகத் தந்தி டிவி தவறாகச் செய்தி வெளியிட்டுள்ளது.


முடிவு: 


விஜய் ரசிகர்கள் கத்தியுடன் அதிமுகவினரை மிரட்டி வீடியோ பதிவிட்டதாகத் தந்தி டிவி வெளியிட்ட செய்தி தற்போது நடந்தது கிடையாது. இது 2018ஆம் ஆண்டு சர்கார் திரைப்படம் வெளியானபோது வந்த வீடியோ. அப்போதே அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.

பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.

பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.