YouTurn

" பிரதமர் வித்யலட்சுமி கார்யகிரம் " மாணவர்களுக்கு பயனுள்ளதா ?

" பிரதமர் வித்யலட்சுமி கார்யகிரம் " மாணவர்களுக்கு பயனுள்ளதா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

உண்மை

சரிபார்க்கப்பட்ட கூற்று

2015 ஆம் ஆண்டின் இந்திய சுதந்திர தினத்தில் வித்யலட்சுமி ( http//www.vidyalakshmi.co.in) என்ற இணையம் சார்ந்த தளமானது மாணவர்கள் கல்விக்கடன் நன்மை பெற அறிமுகப்படுத்தப்பட்டது. நிதியியல் சேவைத் துறை, நிதிஅமைச்சகம், உயர்க்கல்வித் துறை,மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் இந்திய வங்கிகளின் கூட்டமைப்பு...

பரவிய செய்தி

+2 முடித்த பிறகு எந்தவொரு மேற்படிப்பிற்கு செல்வதாக இருந்தாலும் மத்திய அரசின் " பிரதமர் வித்யா லட்சுமி கார்யகிரம் " http//www.vidyalakshmi.co.in " என்ற முகவரிக்கு சென்று தங்களுடைய விபரங்களை பதிவு செய்வதன் மூலம் மத்திய அரசின் உதவி கொண்டு எந்த தடையும் இன்றி கல்வி உதவித்தொகை பெற முடியும்.

விரிவான விளக்கம்

2015 ஆம் ஆண்டின் இந்திய சுதந்திர தினத்தில் வித்யலட்சுமி ( http//www.vidyalakshmi.co.in) என்ற இணையம் சார்ந்த தளமானது மாணவர்கள் கல்விக்கடன் நன்மை பெற அறிமுகப்படுத்தப்பட்டது.

நிதியியல் சேவைத் துறை, நிதிஅமைச்சகம், உயர்க்கல்வித் துறை,மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் இந்திய வங்கிகளின் கூட்டமைப்பு ஆகியவற்றின் வழிகாட்டுதலின்படி NSDLe-Gov மூலம் உருவாக்கப்பட்டது மற்றும் பராமரிக்கப்படுகிறது.



பிரதான் மந்திரி வித்யலட்சுமி கார்யகிரம் மூலம் மாணவர்களுக்கு கல்விக் கடன்களுக்கு வழிவகை செய்வதன் மூலம் நிதி இல்லாமல் மாணவர்கள் மேற்படிப்பை தொடராமல் இருக்க கூடாது என்பதை நோக்கமாக கொண்டுள்ளனர் .

வித்யலட்சுமி தளத்தின் மூலம் மாணவர்கள் எளிதாக வங்கிகளின் கல்விக்கடன் திட்டங்களின் விவரங்களை அறியவும், விண்ணப்பங்களை பெறவும் முடியும். மேலும் அரசு உதவித் தொகையை பெற அணுக முடியும்.



இந்த வித்யலட்சுமி தளத்தில் 39 வங்கிகளின் 70 கல்விக்கடன் திட்டங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இத்தகைய தளத்தில் பல வங்கிகளின் கல்விக்கடன் பற்றிய விவரங்கள்,விண்ணப்பம், விண்ணப்பித்த பின்னான கல்விக்கடனின் நிலை, அரசு உதவித்தொகை உள்ளிட்ட பலவற்றை பெற முடிகிறது.

http//www.vidyalakshmi.co.in என்ற தளத்திற்கு மாணவர்கள் சென்று விவரங்களை பூர்த்தி செய்து கல்விக்கடன் மற்றும் கல்வி உதவித்தொகை பற்றிய விவரங்களை அறிந்து கொள்ளவும்.

சுருக்கமாக

மாணவர்களின் மேற்படிப்பிற்கு வங்கிகளில் எளிதாக கல்விக்கடன் பெறுவதற்கான வாய்ப்புகள் மற்றும் முழுமையான விவரத்தை மத்திய அரசின் அமைச்சரவைகளின் கீழ் இயங்கும் வித்யலட்சுமி என்ற தளத்தின் மூலம் பெற முடியும். உடன் கல்வி உதவித் தொகை பற்றியும் அறிய முடிகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

ஹைட்ரஜன் ரயில் மீது கரப்பான் பூச்சி கட்சியினர் கல் வீசியதாக பொய் பரப்பும் பாஜகவினர்!

பீகார் காவல்துறை பணிக்கான தேர்வில் கலந்துக்கொள்ள சென்ற மாணவர்களுக்கு போதுமான ரயில் இல்லாததால் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது எடுக்கப்பட்ட பழைய வீட…

தவறானது

டெல்லி போராட்டத்தின் போது காருக்கு தீவைக்க முயன்றார்களா முஸ்லிம்கள்? உண்மை என்ன?

பீகாரில் சாலை விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து மக்கள் அந்தக் காரை தீ வைத்து எரிக்க முயன்ற போது எடுக்கப்பட்ட வீடியோ இது.

பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.