யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போரின் போது எடுக்கப்பட்ட பழைய வீடியோவை, ஆபரேஷன் சிந்தூருக்கு பின் பாகிஸ்தானின் நிலை என்று கூறி தவறாகப் பரப்பி வருகின்றனர்.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா பாகிஸ்தான் இடையே பெரும் பதற்றமான சூழல் நிலவியது. இதனையடுத்து, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது எக்ஸ் பக்கத்தில், “அமெரிக்காவில் இரவு முழுவதும் நடந்த நீண்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, இந்தியாவும் பாகிஸ்தானும் முழுமையான மற்றும் உடனடி சமாதானத்திற்கு ஒப்புக்கொண்டனர்” என்று குறிப்பிட்டு பதிவு செய்துள்ளார்.
இந்நிலையில், ஆபரேஷன் சிந்தூருக்கு பின் பாகிஸ்தானின் நிலை என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. வீடியோவில் அனைத்து வீடுகளும் புகை மண்டலமாக சிதைந்து கிடைப்பதை தெளிவாகக் காண முடிகிறது.
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் தேடிப் பார்த்ததில், இது இந்தியா பாகிஸ்தானுக்கு இடையே நடந்த ஆபரேஷன் சிந்தூரோடு தொடர்புடைய வீடியோ அல்ல என்பதை அறிய முடிந்தது.
பரவி வரும் வீடியோ, கடந்த ஜனவரி மாதத்திலிருந்தே சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வந்துள்ளது என்பதை அறிய முடிந்தது.
வடக்கு காசா பகுதியை சார்ந்த ‘OSAMA A RABEA’ என்னும் இன்ஸ்டாகிராம் பயனர், தனது பக்கத்தில் ஜனவரி 23, 2025 அன்றே வைரலாகும் இவ்வீடியோ காசாவில் அமைந்துள்ள ஜபாலியா முகாமில் எடுக்கப்பட்டது என்று குறிப்பிட்டு பதிவு செய்துள்ளார்.
#c9c8cd#FFF
; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);">; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank">
வடக்கு காசாவை சேர்ந்த புகைப்படக் கலைஞரான இவருடைய பக்கத்தில், பரவி வரும் வீடியோவைப் போன்றே இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போர் தொடர்பான பல வீடியோக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதையும் காண முடிகிறது.
இதன் மூலம் இது பாகிஸ்தானில் எடுக்கப்பட்ட வீடியோ அல்ல, இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போரின் போது எடுக்கப்பட்ட பழைய வீடியோவை, ஆபரேஷன் சிந்தூருக்கு பின் பாகிஸ்தானின் நிலை என்று கூறி தவறாகப் பரப்பி வருகின்றனர் என்பது உறுதியாகிறது.
முடிவு:
நம் தேடலில், ஆபரேஷன் சிந்தூருக்கு பின் பாகிஸ்தானின் நிலை என்று கூறி பரவும் வீடியோ, இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போரின் போது எடுக்கப்பட்ட பழைய வீடியோ என்பதை அறிய முடிகிறது.