YouTurn

'நிக்கோலஸ் மதுரோவை விடுவிக்கக்கோரி மக்கள் பேரணி' எனப் பரவும் AI வீடியோ!

'நிக்கோலஸ் மதுரோவை விடுவிக்கக்கோரி மக்கள் பேரணி' எனப் பரவும் AI வீடியோ!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

நிக்கோலஸ் மதுரோவை விடுவிக்க வலியுறுத்தி பிரம்மாண்ட பேரணி நடத்திய வெனிசுவேலா மக்கள் எனப் பரவும் வீடியோ உண்மையானதல்ல. AI தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட வீடியோவை தவறாகப் பரப்பி வருகின்றனர்.

பரவிய செய்தி

வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவின் விடுதலைக்காக தலைநகர் காரகஸின் வீதிகளில் ஒரே உடலாக ஒன்றிணைந்துள்ள மக்கள். பெரிய ஊடகங்களில் வெளிவராத காட்சிகள்...



X Link | Archive Link

விரிவான விளக்கம்

போதைப் பொருள் கடத்தலுக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறி, வெனிசுவேலா நாட்டின் மீது அமெரிக்க படைகள் ஜனவரி 03, 2026 அன்று வான்வழித் தாக்குதலை நடத்தின. இந்த தாக்குதலைத் தொடர்ந்து, வெனிசுவேலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா ஃபுளோரஸ் ஆகியோரை அமெரிக்க படைகள் சிறைபிடித்தன. இந்த சம்பவத்துக்கு உலகத் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். 


இந்நிலையில் நிக்கோலஸ் மதுரோவை விடுவிக்க வலியுறுத்தி பிரம்மாண்ட பேரணி நடத்திய வெனிசுவேலா மக்கள் எனக் கூறி வீடியோ ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. வீடியோவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் சாலையில் பேரணி செல்வது போன்றும் உள்ளது.




உண்மை என்ன? 


வெனிசுவேலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவிற்கு ஆதராவாக அங்கு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனரா என்பது குறித்து தேடியதில், நிக்கோலஸ் மதுரோவை சர்வதேச விதிகளை மீறி அமெரிக்கா இராணுவ நடவடிக்கை மூலமாக கைது செய்ததைக் கண்டித்து வெனிசுவேலா நாட்டின் தலைநகரமான கராகஸில் மக்கள் பெருமளவில் ஊர்வலம் நடத்தியது உண்மை தான் என்பதை அறிய முடிந்தது.


ஆனால் சமூக ஊடகங்களில் தற்போது பரவி வரும் வீடியோவில், தேசியக்கொடியில் உள்ள நட்சத்திரங்களுள் ஒன்று தவறாக இருப்பதையும், பேரணியில் செல்பவர்கள் கைகளை உயர்த்தி கோஷமிடும் காட்சியில் விரல்கள் இல்லாத கை, கால் போன்ற தோற்றத்தையும் காண முடிந்தது. 



மேலும் வெனிசுவேலா நாட்டு தேசியக்கொடியில் உள்ள நட்சத்திரங்கள் சிவப்பு பக்கத்தைப் பார்த்தது போன்று அரை வட்ட வடிவில் இருக்கும். ஆனால், இந்த வீடியோவில் மஞ்சள் பக்கத்தைப் பார்த்தது போன்று உள்ளது. எனவே இதன் மூலம் பரவி வரும் வீடியோ AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டிருக்கலாமோ என்ற சந்தேகத்தை எழுப்பியது. 



எனவே பரவி வரும் வீடியோவின் காட்சிகளை புகைப்படங்களாக மாற்றி Google Reverse Image Search மூலம் தேடிப் பார்த்ததில், பரவி வரும் வீடியோ உண்மையானதல்ல என்பதை அறிய முடிந்தது. டிக்டாக் செயலி இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளதால், “Vesesueal0” டிக்டாக் பக்கத்தில் பரவி வரும் வீடியோ “AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது” என்று குறிப்பிட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை, வெளிநாட்டில் இருக்கும் ஊடக நண்பர்களின் உதவியோடு அறிய முடிந்தது. 



மேலும் “Hive Moderation” இணையதளப் பக்கத்தில் பரவி வரும் வீடியோவை பதிவேற்றி ஆய்வு செய்து பார்த்ததில், பரவி வரும் வீடியோ “AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது” தான் என்பதை நமக்கு உறுதிபடுத்தியது.


 

முடிவு: 


நம் தேடலில், நிக்கோலஸ் மதுரோவை விடுவிக்க வலியுறுத்தி பிரம்மாண்ட பேரணி நடத்திய வெனிசுவேலா மக்கள் எனப் பரவி வரும் இந்த வீடியோ உண்மையானதல்ல. AI தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட வீடியோவை தவறாகப் பரப்பி வருகின்றனர் என்பதை தெளிவாக அறிய முடிகிறது.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க