YouTurn

இஸ்ரேல் சிறையில் சித்தரவதைக்கு உள்ளாக்கப்படுவது ஹமாஸ் அமைப்பினரா?

இஸ்ரேல் சிறையில் சித்தரவதைக்கு  உள்ளாக்கப்படுவது ஹமாஸ் அமைப்பினரா?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

சரிபார்க்கப்பட்ட கூற்று

இஸ்ரேல் சிறையில் பாலஸ்தீன கைதிகள் சித்தரவதை செய்யப்படும் வீடியோ, ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலிடம் கைதிகளாக உள்ளதாக தவறான தகவலுடன் பரப்பப்படுகிறது.

பரவிய செய்தி

ஹமாஸ் கைதிகள் இஸ்ரேல் கஸ்டடியில்



X Link | Archive Link

விரிவான விளக்கம்

பல ஆண்டுகளாக இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்கு எதிராக பாலஸ்தீன மக்கள் போராடி வந்தாலும், கடந்த ஓராண்டாக இஸ்ரேலின் காஸா மீதான இடைவிடாத தாக்குதல்களால் இதுவரை 41,689 இறந்திருக்கிறார்கள். 96,625 காயமடைந்திருக்கிறார்கள். மேலும் இஸ்ரேலின் மனிதத்தன்மையற்ற போர்க்குற்றங்கள் பற்றி கடந்த ஓராண்டாக செய்திகள் வந்துகொண்டே இருக்கின்றன.


இஸ்ரேலுக்கு ஆதரவாக இருப்பவர்கள் பலர் இந்த மனித உரிமை மீறல்களை சரியென சமூக வலைதளங்களில் பேசி வருகிறார்கள். அந்த வகையில், இஸ்ரேலிய காவலர்களால் கைதிகள் சித்தரவதை செய்யப்படும் வீடியோவை பதிவிட்டு, அந்த கைதிகள் ஹமாஸ் அமைப்பினர்தான் என்று சிலாகித்து பரப்பப்படுகிறது.


உண்மை என்ன?


அந்த வீடியோவின் Keyframe -களைக் கொண்டு தேடுகையில் 'அல் ஜசீரா' பத்திரிகை வெளியிட்ட செய்தி ஒன்றை காணமுடிந்தது. அதன் படி அந்த வீடியோ இஸ்ரேல் நாட்டின் மெகிடோ சிறை நிர்வாகத்தின் பாதுகாப்பு பிரிவில் இருந்து கசிந்தது என்பதை அறியமுடிகிறது. இந்த வீடியோ ஹீப்ரு செய்தித்தாளான "ஹாரெட்ஸ்" வெளியிட்டிருந்தது.



அதில் பாலஸ்தீன கைதிகளின் கைகளை பின்புறமாக கட்டி, அவர்கள் வயிறு தரையில் அழுத்துமாறு படுக்க வைத்து நாயைக்கொண்டு அச்சுறுத்துகிறார்கள் இஸ்ரேலிய காவலர்கள்.


அல் ஜசீரா செய்தித்தளம் சித்தரவதைக்கு உள்ளாக்கப்பட்டவர்களை 'பாலஸ்தீன கைதிகள்' என்று தான் குறிப்பிட்டிருக்கிறது. பாலஸ்தீன கைதிகள் இதுபோன்ற சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுவது 'வழக்கமானது தான்' என்றும் இஸ்ரேலிய சிறைத்துறை ஒரு பத்திரிகையிடம் கூறியுள்ளது. மேலும் இது கடந்த செப்டம்பர் மாதம் வெளியான வீடியோ என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மனிதத்தன்மையற்ற செயலை கண்டித்து Popular Front for the Liberation of Palestine அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் 'கைதிகளை சித்தரவதை செய்து சிறிது சிறிதாக மரணத்தை ஏற்படுத்தும் தந்திரம் இது' என்று சாடியுள்ளது.


கைதிகள் ஹமாஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று செய்திகளில் எங்கேயும் குறிப்பிடப்படவில்லை.


இதிலிருந்து, அப்பாவி பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் சிறைத்துறை சித்தரவதை செய்கிறது என்றும், சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுவது ஹமாஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் அல்ல என்றும் தெரிகிறது.


முடிவு:


இஸ்ரேல் சிறையில் பாலஸ்தீன கைதிகள் சித்தரவதை செய்யப்படும் வீடியோ, ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலிடம் கைதிகளாக உள்ளதாக தவறான தகவலுடன் பரப்பப்படுகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க