
யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி

X Link | Archive Link
விரிவான விளக்கம்
மேலும், அந்த வீடியோவின் ஆரம்பத்தில், மூச்சை உள்ளிழுத்துக் கொள்ளுமாறும் (Inhale), பின்னர் A முதல் B வரையிலான 28 வினாடிகளுக்கு மூச்சை இழுத்துப்பிடித்திருக்கும் படியாகவும் (Holding Breath), அதைத் தொடர்ந்து மூச்சை வெளியிடும் படியும் (Exhale) அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு நீங்கள் A முதல் B வரையிலான சில நொடிகளுக்கு மூச்சை இழுத்துப் பிடித்திருந்தால் உங்கள் நுரையீரல் ஆரோக்கியமாக உள்ளது என்று அர்த்தம் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
can u hold your breath from A to B ?
Repost with your score pic.twitter.com/tmi80myq1V
— Mohini Wealth Research (@MohiniWealth) January 18, 2024
can u hold your breath from A to B ?pic.twitter.com/DZ1GB6INcv
— X FUN FACTS (@lilgreat21) January 18, 2024
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோ குறித்து ஆய்வு செய்து பார்த்ததில், கொரோனா தொற்று காலத்திலிருந்தே இது போன்ற வீடியோக்கள் வைரலாகப் பரவி வந்துள்ளது. மேலும் இந்த வீடியோ குறித்து உலக சுகாதார நிறுவனம் (WHO) கடந்த 2020-லேயே தனது இணையதளத்தில் உள்ள “Myth Busters" என்ற பிரத்யேக பிரிவில், இது தவறான செய்தி என்று குறிப்பிட்டு கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தது.
மேலும் தனது ஃபேஸ்புக் மற்றும் எக்ஸ் பக்கங்களிலும், "இருமல் அல்லது எந்தவொரு அசௌகரியமும் இல்லாமல் உங்கள் மூச்சை 10 வினாடிகள் அல்லது அதற்கு மேல் இழுத்துப்பிடித்து வைத்திருக்க முடிந்தால், நீங்கள் கொரோனா வைரஸ் நோய் (COVID-19) அல்லது வேறு எந்த நுரையீரல் நோயின்றி உள்ளீர்கள் என்று அர்த்தமல்ல. இதனை சுவாசப் பயிற்சியின் மூலம் நீங்கள் உறுதிப்படுத்த முடியாது, இது ஆபத்தானது." என்றும் அதில் குறிப்பிட்டிருந்தது.
FACT: Being able to hold your breath for 10 seconds or more without coughing or feeling discomfort DOES NOT mean you are free from the #coronavirus disease or any other lung disease.
https://t.co/TdKoGmWrIr #COVID19 #KnowTheFacts pic.twitter.com/0Sd7yUqwts
— World Health Organization (WHO) (@WHO) March 29, 2020
இதே போன்று Science Direct வலைத்தளப் பக்கத்திலும், இது குறித்து கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டிருந்தது. அதில், "சுவாச முறைகள் எல்லோருக்கும் ஒரே போன்று இருப்பதில்லை. இவை ஒவ்வொரு தனிநபர்களுக்கிடையேயும் வேறுபட்டு காணப்படுகின்றன. மேலும் சுவாச முறைகள், ஒருவருக்கு ஏற்படும் வலி, உணர்ச்சிகள், உடல் வெப்பநிலை, தூக்கம், உடல் அமைப்பு, உடலின் செயல்பாடுகள் மற்றும் நுரையீரல், இதயம், வளர்சிதை மாற்ற அல்லது நரம்பு மண்டலங்களில் ஏற்படும் நோய்களின் இருப்பு ஆகியவற்றால் மாறுபடும்." என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: கார்பனேற்றப்பட்ட குளிர்பானங்கள் அருந்துவதால் செரிமானக் கோளாறுகள் குறையுமா ?
இதற்கு முன்பும் உடல்நிலை குறித்து பல வதந்திகள் சமூக ஊடகங்களில் தவறாகப் பரவி வந்தன. அது குறித்தும் ஆய்வு செய்து நம் பக்கத்தில் கட்டுரைகள் வெளியிட்டிருக்கிறோம்.
மேலும் படிக்க: இந்திய பிராண்டட் உப்பில் உள்ள ‘பொட்டாசியம் ஃபெரோசயனைடு’ ஒர் உயிர்க்கொல்லி என அமெரிக்க ஆய்வு தெரிவித்ததாகப் பரவும் வதந்தி !
மேலும் படிக்க: பால் குடிப்பதால் எலும்பு சார்ந்த ஆஸ்டியோபோரோசிஸ் நோய் ஏற்படுமா? உண்மை என்ன ?
முடிவு:
நம் தேடலில், சில நொடிகள் மூச்சை இழுத்துப் பிடித்திருப்பதன் மூலம் நுரையீரலின் ஆரோக்கியத்தை பரிசோதிக்கலாம் எனப் பரவும் தகவல்கள் தவறானவை என்பதையும், சுவாச முறைகள் ஒவ்வொரு தனிநபர்களுக்கிடையேயும் வேறுபட்டு காணப்படுவதால் நுரையீரலின் ஆரோக்கியத்தை மருத்துவப் பரிசோதனையின் அடிப்படையிலேயே தீர்மானிக்க வேண்டும் என்பதையும் உறுதிப்படுத்த முடிகிறது.