YouTurn

சென்னை வெள்ளத்தால் சூப்பர் மார்க்கெட்டில் மீன்கள் நீந்துவதாகப் பரவும் ஜார்ஜியா வீடியோ !

சென்னை வெள்ளத்தால் சூப்பர் மார்க்கெட்டில் மீன்கள் நீந்துவதாகப் பரவும் ஜார்ஜியா வீடியோ !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி


சென்னை வெள்ளத்தில் சூப்பர் மார்க்கெட்..




X Post Link | Archive Link

விரிவான விளக்கம்

மிக்ஜாம் புயல் காரணமாக, கடந்த டிசம்பர் 3 அன்று தொடங்கிய பெரும் மழை, கடந்த டிசம்பர் 4 இரவு வரை சென்னையைத் தாக்கி பலத்த சேதத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் சென்னை வெள்ளத்தால் சூப்பர் மார்க்கெட்டில் மீன்கள் மிதக்கின்றன என்று கூறி 30 வினாடிகள் கொண்ட வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.


மேலும் அந்த வீடியோவில் மீன்கள் சூப்பர் மார்கெட்டின் தரை தளத்தில் மிதப்பது போன்றும், அதை ஊழியர்கள் வலைகளைக் கொண்டு பிடிப்பது போன்றும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.





உண்மை என்ன ?

பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், இது சென்னையில் எடுக்கப்பட்ட வீடியோ அல்ல என்பதை அறிய முடிந்தது.

மேலும் இந்த வீடியோ ViralHog என்ற யூடியூப் பக்கத்தில் கடந்த 2018 பிப்ரவரி 5 "சூப்பர் மார்க்கெட் தளத்தில் மீன் நீச்சல் || வைரல்ஹாக்" என்ற தலைப்பில் வெளியிடப்பட்டிருந்தது. அந்த வீடியோவின் விளக்கத்தில் "பிப்ரவரி 2, 2018 அன்று இது ஜார்ஜியா நாட்டில் உள்ள திபிலிசியில் நடந்துள்ளது." என்று குறிப்பிடப்பட்டுள்ளது.



இதே போன்று பிரிட்டனைச் சேர்ந்த dailymail என்ற வலைத்தளப் பக்கத்திலும் இந்த வீடியோ குறித்து கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. அதில், "ஜார்ஜியாவின் திபிலிசி நகரில் அமைந்துள்ள கேரிஃபோர் சூப்பர் மார்க்கெட்டில் மீன் தொட்டி ஒன்று உடைந்ததால், மீன்கள் தரையைச் சுற்றி உதவியற்ற நிலையில் ஓட ஆரம்பித்தன. பின்னர் ஊழியர்கள் வலைகளில் அவற்றைப் பிடிக்க தீவிரமாக முயன்ற போது எடுக்கப்பட்ட வீடியோ இது."என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


மேலும் படிக்க: சென்னையில் 2015-ல் தான் அதிக மழை பெய்தது என தவறான தகவலைப் பரப்பும் ரெட்பிக்ஸ் பெலிக்ஸ் !

இதற்கு முன்பும், சென்னை வெள்ளம் குறித்து பல செய்திகள் தவறாகப் பரவின. அது குறித்தும் ஆய்வு செய்து நம் பக்கத்தில் கட்டுரைகள் வெளியிட்டிருக்கிறோம்.

மேலும் படிக்க: சென்னையில் 2023ம் ஆண்டை விட 2015ல் இரண்டு மடங்கு அதிக மழை பெய்ததாக அதிமுகவினர் பரப்பும் தவறான தகவல் !

மேலும் படிக்க: மிக்ஜாம் புயலில் நிலநடுக்கம் எனப் பரவும் மியான்மரில் மோச்சா புயலில் எடுத்த வீடியோ!

முடிவு:


நம் தேடலில், சென்னை வெள்ளத்தால் சூப்பர் மார்க்கெட்டில் மீன் நீந்துகின்றன எனப் பரவும் வீடியோ, ஜார்ஜியா நாட்டில் உள்ள சூப்பர் மார்கெட்டில் கடந்த 2018-ன் போது எடுக்கப்பட்ட பழைய வீடியோ என்பதை அறிய முடிகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க