YouTurn

இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பசு மாடுகள் எனப் பரவும் தவறான வீடியோ!

இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பசு மாடுகள் எனப் பரவும் தவறான வீடியோ!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

அட படுபாவிகளா.. Tata Ace ல ரெண்டு மாட்டை ஏத்திக்கிட்டு போனா... கோமாதா னு கூவிக்கிட்டு கலவரம் பண்ற சங்கீப் பயலுகளா... இதென்னடா நூறு லாரிய வச்சு கப்பல்ல ஏத்திக்கிட்டு இருக்கானுக பாஜக அரசு அனுமதியோட... இனிமே எவனாவது மாடு, கோமியம் னு கூவுங்க.. செல்லைல விழும் 


X link

விரிவான விளக்கம்

பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு மாட்டுக்கறி தொடர்பான சர்ச்சைகள் நாடு முழுவதும் நிகழ்ந்த வண்ணம் உள்ளது. மாட்டுக்கறி வைத்திருந்ததற்காகவும் மாட்டுக்கறி வைத்திருந்ததாகச் சந்தேகப்பட்டும் பல இஸ்லாமியர்களும் தலித்துக்களும் இந்துத்துவாவினரால் அடித்துத் துன்புறுத்திய மற்றும் கொல்லப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளன. 



மேற்கண்ட சம்பவங்கள் ஒரு பக்கம் இருக்க, பாஜக அரசின் அனுமதியுடன் நூற்றுக்கணக்கான லாரிகளில் மாடுகள் வெளிநாடுகளுக்குக் கப்பல் மூலம் ஏற்றுமதி செய்யப்படுகிறது என வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது. 



உண்மை என்ன?

பரவக் கூடிய வீடியோவின் கீஃப்ரேம்களை கொண்டு இணையத்தில் தேடியதில் இதே வீடியோ கடந்த ஏப்ரல் 19ம் தேதிHamed ELhagary’ என்னும் பேஸ்புக் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. மேற்கொண்டு அவரது பேஸ்புக் பக்கத்தில் தேடுகையில், எகிப்தில் உள்ள அவர் இறைச்சி மொத்த வியாபாரம் செய்வதாகக் குறிப்பிடப்பட்டிருப்பதைக் காண முடிந்தது. 



இதே வீடியோ அரபிக் மொழியில் ‘Meat market’ (سوق اللحوم) என்ற பெயரில் இயங்கக்கூடிய பேஸ்புக் பக்கத்திலும் பதிவிடப்பட்டுள்ளது. அப்பக்கத்தில் உள்ள தொலைப்பேசி எண்ணின் country காடே-ஐ (+20) வைத்துப் பார்த்ததில் இதுவும் எகிப்தை மையமாகக் கொண்டு செயல்படும் பேஸ்புக் பக்கம் என்பதை அறிய முடிந்தது. 



மேற்கொண்டு தேடியதில் ஈராக் 'Umm Qasr Port' என்ற இடத்தில் எடுக்கப்பட்ட வீடியோவில் உள்ள பகுதிகளும் பரவக் கூடிய வீடியோவில் உள்ள பகுதிகளும் ஒத்து போவது போல் தெரிகிறது. ஆனால், பரவக் கூடிய வீடியோ எந்த இடத்தில் எடுக்கப்பட்டது என சரியாக கண்டறிய முடியவில்லை. கண்டறியும் பட்சத்தில் கூடுதல் தகவலாக இக்கட்டுரையில் சேர்ப்போம்.

மேலும், இந்தியாவில் இருந்து எருமை மாடுகள் தான் இறைச்சிக்காக ஏற்றுமதி செய்யப்படுகிறது. இது குறித்து விரிவான கட்டுரையினை இதற்கு முன்னர் யூடர்ன் வெளியிட்டுள்ளது. இவற்றிலிருந்து இந்த வீடியோ இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல என்பதை அறிய முடிகிறது. 

மேலும் படிக்க : இந்தியாவில் மாட்டிறைச்சி ஏற்றுமதி நிறுவனங்கள் அனைத்தும் இந்துக்களுக்கு சொந்தமானதா ?

முடிவு : 

பாஜக அரசின் அனுமதியுடன் நூற்றுக்கணக்கான லாரிகளில் கொண்டு வரப்பட்ட பசு மாடுகள் கப்பல்கள் மூலம் ஏற்றுமதி செய்யப்படுவதாகப் பரவும் வீடியோ குறித்த தகவல் உண்மை அல்ல. இதற்கு முன்னர் இந்த வீடியோ எகிப்தில் எடுக்கப்பட்டது எனப் பலர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளதைக் காண முடிகிறது. 
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

தவறானது

'மெரினாவில் வைக்கவிருந்த பேனா சிலை அகற்றப்படும் காட்சி' என்று பரவும் செய்தி! உண்மை என்ன?

கடந்த 2023 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பேனா வடிவிலான “முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தி” பயணம் மேற்கொண…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க