YouTurn

இந்தியாவில் செயற்கை மாம்பழம் தயாரிக்கப்படுவதைப் பாருங்கள் என்று கூறி பரவும் சித்தரிக்கப்பட்ட போலி வீடியோ!

இந்தியாவில் செயற்கை மாம்பழம் தயாரிக்கப்படுவதைப் பாருங்கள் என்று கூறி பரவும் சித்தரிக்கப்பட்ட போலி வீடியோ!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

பொழுதுபோக்கு மற்றும் சமூக விழிப்புணர்வு நோக்கங்களுக்காக எடுக்கப்பட்ட வீடியோவை உண்மையான வீடியோ என நினைத்து தவறாகப் பரப்புகின்றனர்.

பரவிய செய்தி

மாம்பழத்திலும் கலப்படம் செய்யப்படுகிறது.


Facebook Link:

விரிவான விளக்கம்

இந்தியாவில் செயற்கை மாம்பழங்கள் தயாரிக்கப்படுவதைப் பாருங்கள் என்று கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. மேலும் அந்த வீடியோவில் ஒருவர் மாம்பழத்தின் உள்ளே சிரஞ்சி பயன்படுத்தி மஞ்சள் நிற திரவத்தை பழத்தின் உள்ளே செலுத்துவதையும், வீடியோவில் காட்டப்படும் நபர் முகத்தை மூடி இருப்பதையும் காண முடிகிறது.



Facebook Link:


உண்மை என்ன?

பரவக் கூடிய வீடியோவை நன்கு ஆய்வு செய்ததில், வீடியோவின் மேற்புறத்தில், "இந்த வீடியோ முழுக்க முழுக்க கற்பனையே. வீடியோவில் உள்ள அனைத்து நிகழ்வுகளும் சித்தரிக்கப்பட்டவை மற்றும் விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே எடுக்கப்பட்டவை. இது இந்த மாதிரியான எந்த வகையான செயல்பாட்டையும் அல்லது எந்த வகையான சடங்குகளையும் ஊக்குவிக்கவில்லை" என்று குறிப்பிடப்பட்டிருந்தன.

மேலும் பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், அதன் முழு வீடியோ 'The social media junction' என்ற யூடியூப் பக்கத்தில் மாம்பழம் சாப்பிடுபவர்கள் ஜாக்கிரதை! எனக் குறிப்பிட்டு, கடந்த ஜுன் 21, 2024 அன்று பதிவிடப்பட்டிருந்தது.  

இந்த யூடியூப் பக்கத்தின் முகப்பிலும் (BIO), "என்னுடைய சேனலுக்கு வரவேற்கிறோம். எனது சேனலில் பொழுதுபோக்கு மற்றும் சமூக விழிப்புணர்வு வீடியோக்களை நீங்கள் பெறலாம்" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதே போன்று, தர்பூசணி பழங்களில் கலப்படம் செய்யப்படுவதாகவும் குறிப்பிட்டு இதற்கு முன்பே வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவின. அப்போதே இது குறித்து ஆய்வு செய்து, அவையும் போலியாக சித்தரிக்கப்பட்ட வீடியோக்கள் என்று குறிப்பிட்டு நம் பக்கத்தில் கட்டுரை வெளியிட்டிருந்தோம். 

மேலும் படிக்க: Video of a young boy injecting colour and sweetener into watermelons is scripted!

முடிவு: 


நம் தேடலில், மாம்பழத்தில் செயற்கை ரசாயன திரவம் செலுத்துவதாகப் பரவும் வீடியோவில் காட்சிப்படுத்தப்பட்ட சம்பவங்கள் அனைத்தும் சித்தரிக்கப்பட்டவை என்பதை அறிய முடிகிறது.


பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க