யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
இந்தச் சம்பவம் ஆந்திர பிரதேச மாநிலத்தின் பண்டப்பள்ளி பழங்குடி நலப் பள்ளியில் நடந்தது.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
வகுப்பறையில் ஆசிரியை நாற்காலியில் அமர்ந்திருக்கிறார். பள்ளிச் சீருடை அணிந்த மாணவிகள் அவரின் கால்களுக்கு மஜாஜ் செய்துகொண்டிருக்கும் வீடியோவை சமூக வலைத்தளத்தில் ஒருவர் பதிவிட்டுள்ளார். அந்த பதிவின் கீழ் இந்த சம்பவம் தமிழ்நாட்டில் நடந்ததாக எண்ணி பலரும் பின்னூட்டங்கள் (comments) எழுதியுள்ளனர்.
உண்மை என்ன?
பரப்பப்படும் வீடியோவின் Keyframe-களைக் கொண்டு தேடுகையில், ’INDIA TODAY’ செய்தித்தளத்தில் இது குறித்த செய்தி ஒன்றைக் காணமுடிந்தது. அதில், இந்தச் சம்பவம் ஆந்திர பிரதேச மாநிலத்தின் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள பண்டப்பள்ளி பழங்குடி நலப் பள்ளியில் நடந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இது தொடர்பாக ஒருங்கிணைந்த பழங்குடியினர் மேம்பாட்டு நிறுவனத்தின் (ITDA) அதிகாரி அந்த ஆசிரியைக்கு show-cause notice கொடுத்து, விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும், விசாரணை முடியும் வரை அந்த தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருப்பதாகவும் தெரியவருகிறது.
மேற்கூறிய விவரங்களிலிருந்து, இந்த சம்பவம் ஆந்திர பிரதேச மாநிலத்தில் நடந்தது என்பது உறுதியாகிறது.
முடிவு:
ஆந்திர பிரதேச மாநிலத்தில் பள்ளி மாணவிகளைக் கொண்டு கால்களை மஜாஜ் செய்ய வைத்த சம்பவத்தை தமிழ்நாட்டில் நடந்ததாக திரித்துப் பரப்புகிறார்கள்.