YouTurn

பங்களாதேஷில் புர்கா அணியாத இந்துப் பெண்ணை பேருந்தில் ஏற்றவில்லை எனப் பரவும் சித்தரிக்கப்பட்ட வீடியோ!

பங்களாதேஷில் புர்கா அணியாத இந்துப் பெண்ணை பேருந்தில் ஏற்றவில்லை எனப் பரவும் சித்தரிக்கப்பட்ட வீடியோ!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

பங்களாதேஷில் ரமலான் மாதத்தில் புர்கா அணியாத இந்து பெண்களை பஸ்ஸில் அழைத்து செல்ல மாட்டார்கள்..



Instagram Link:

விரிவான விளக்கம்

பங்களாதேஷில் ரமலான் மாதத்தில் புர்கா அணியாத இந்து பெண்களை பஸ்ஸில் அழைத்து செல்ல மாட்டார்கள் என்று கூறி 23 வினாடிகள் கொண்ட வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

பரவி வரும் வீடியோவில், புர்கா அணியாததால் பேருந்தினுள் ஏற்றமுடியாது என்று பேருந்து நடத்துனர் பெண் ஒருவரிடம் வாக்குவாதம் செய்வதையும், மினி பேருந்து போன்று உள்ள ஒரு தனியார் வாகனத்தில் ஏறி அமர்ந்த அந்த பெண்ணை, பேருந்தை விட்டு இறங்குமாறு கூறி, அந்த பெண்ணை கீழே இறக்கி விடுவதையும் வீடியோவில் காண முடிகிறது.





உண்மை என்ன?

பரவி வரும் வீடியோவின், முழு வீடியோ குறித்து அறிய வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்தோம். Carton Show என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் இதன் முழு வீடியோ மார்ச் 14 அன்று "ரமலான் மாதத்தில் புர்கா அணியாதப் பெண் பஸ் உதவியாளரை என்ன செய்கிறார்" என்ற தலைப்பில் பதிவு செய்யப்பட்டிருந்தது. 



6:26 நிமிடங்கள் கொண்ட அந்த வீடியோவில், புர்கா அணியவில்லை என்று கூறி ஒரு பெண்ணை பேருந்தில் ஏற்ற மறுப்பதையும், உடனே அந்த பெண் ஆட்டோ மற்றும் மற்ற வண்டிகளில் ஏற முயற்சி செய்வதையும், புர்கா அணியவில்லை என்று கூறி மற்ற வண்டிகளிலும் ஏற்ற மறுப்பதையும் காண முடிகிறது. உடனே அந்த பெண் மீண்டும் பேருந்து நடத்தினரிடம் வந்து, மன்னிப்பு கேட்டு தலை முடியை கருப்பு சால்வையால் மறைப்பதையும், உடனே அந்த பெண்ணை பேருந்தினுள் ஏற்றுவதையும் முழு வீடியோவில் பார்க்க முடிகிறது. இறுதியில் பேருந்து நடத்துனர் வீடியோ பதிவு செய்பவரை பார்த்தே சில நிமிடங்கள் தொடர்ந்து பேசிகிறார்.

எனவே இது குறித்து அறிய அதன் ஃபேஸ்புக் பக்கத்தை மேலும் ஆய்வு செய்து பார்த்தோம். இதே போன்று பல வீடியோக்கள் அப்பக்கத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தன. அவை அனைத்துமே சித்தரிக்கப்பட்டு எடுக்கப்பட்டவை.



மேலும் Carton Show ஃபேஸ்புக் பக்கத்தின் சுயவிவரத்தையும் ஆய்வு செய்து பார்த்தோம். அதில் "நான் ஒரு கேமரா கண்டன்ட் கிரியேட்டர் (Camera Content Creator), மேலும் அறிய என்னுடைய பக்கத்தை பின்தொடருங்கள்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 

இதன் மூலம் போலியாக சித்தரிக்கப்பட்ட ஒரு வீடியோவை உண்மையான வீடியோ என்று கருதி பலரும் சமூக ஊடகங்களில் தவறாகப் பரப்பி வருகின்றனர் என்பதை அறிய முடிகிறது. 

முடிவு:

நம் தேடலில், பங்களாதேஷில் புர்கா அணியாத இந்துப் பெண்களை பேருந்தில் ஏற்றமாற்றமாட்டார்கள் என்று கூறி பரவும் வீடியோ உண்மையானது அல்ல என்பதையும், இது போலியாக சித்தரிக்கப்பட்ட வீடியோ என்பதையும் அறிய முடிகிறது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

தவறானது

'மெரினாவில் வைக்கவிருந்த பேனா சிலை அகற்றப்படும் காட்சி' என்று பரவும் செய்தி! உண்மை என்ன?

கடந்த 2023 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பேனா வடிவிலான “முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தி” பயணம் மேற்கொண…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க