YouTurn

தந்தையை காதலன் காலில் விழ வைத்த மகள் என பரவும் வீடியோ போலியானது.

தந்தையை காதலன் காலில் விழ வைத்த மகள் என பரவும் வீடியோ போலியானது.

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

சாய் விஜய் என்ற நபர் யூடியூப் பக்கத்திற்காக, தனது தந்தையை எதிர்த்து காதலுனடன் மகள் செல்வது போல், வீடியோ ஒன்றை SHOOT செய்து பதிவேற்றம் செய்துள்ளார். அந்த வீடியோ, தற்போது சமூகவலைதளங்களில் உண்மை போல் பரவி வருகிறது.

பரவிய செய்தி

அடி பாவி!! கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாம்ம பெத்து உன்ன வளர்த்த தகப்பனை கண்டவன் காலுல வில வச்சிட்டியேடி, இந்த அப்பாக்கு பிறக்காம பிச்சைக்காரனுக்கு பிறந்து இருந்தால் இவன் உன்ன ஏறு எடுத்து கூட பாத்துருக்க மாட்டான்டி..

image.png

X link  | Archive Link

விரிவான விளக்கம்

தான் வளர்த்த மகள் காதலனுடன் செல்லும் போது, அவர்களை வழிமறித்து வீடுக்கு வரும்படி தந்தை கெஞ்சும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து, 'இந்த அப்பாவுக்கு பிறக்காமல் பிச்சைக்காரனுக்கு பிறந்திருந்தால், அவன் உன்னை காதலித்திருக்க மாட்டான்' என்றும், 'வளர்த்த தந்தையை இன்னொருவன் காலில் விழ வைத்து விட்டாயே' எனவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். 


உண்மை என்ன ?

பரவி வரும் வீடியோவில் உள்ள இன்ஸ்டாகிராம் watermark-ஐ வைத்து தேடி பார்த்தோம். அப்போது  சாய் விஜய் என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு கொண்டுச் சென்றது. அதில் மார்ச் 21ஆம் தேதி அந்த வீடியோ பதிவிடப்பட்டிருந்தது. அந்த வீடியோ குறித்த முழுவிவரம் கிடைக்குமா என்று தேடி பார்க்கையில்,  அந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தின் bioவில் ஒரு யூடியூப் லிங் கொடுக்கப்பட்டிருந்தது. 

image.png

அதற்குள் சென்று பார்க்கும் போது சாய் விஜய் என்ற யூடியூப் பக்கத்திற்கு அழைத்து சென்றது. அதில் இந்த வீடியோ கிடைக்குமா என்று தேடி பார்க்கையில், மார்ச் 19ஆம் தேதி 'காலில் விழுந்து கதறி அழுத அப்பா | மணம் இறங்காத பெண்' என்ற தலைப்பில் 13:30 நிமிடங்கள் கொண்ட வீடியோ ஒன்று வெளியிடப்பட்டிருந்தது. அதில் பார்க்கையில், சரியாக 10:18வது நிமிடத்தில் பரவி வரும் வீடியோவின் காட்சிகள் இடம்பெற்றிருந்தது.

மேலும் இது குறித்து தேடி பார்க்கையில், யூடியூப்பிற்காக, தந்தையை எதிர்த்து காதலுனடன் மகள் செல்வது போன்ற வீடியோக்கள் SHOOT செய்து, 7 பாகங்களாக பதிவேற்றம் செய்துள்ளார் சாய் விஜய். அந்த வீடியோவின்  DISCLAIMERல், இந்த காணொளி பொழுதுபோக்கு நோக்கத்திற்காக மட்டுமே என்றும் மேலும் இந்த வீடியோ சம்பந்தப்பட்ட நபர்களின் அனுமதியுடன் பதிவேற்றப்படுகிறது எனவும் குறிப்பிட்டுள்ளார். இதே போல் பல வீடியோக்கள் பொழுதுபோக்கு நோக்கத்திற்காக shoot செய்யப்பட்டு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

image.png

முடிவு : 

தந்தையை காதலன் காலில் விழ வைத்த மகள் என பரவும் வீடியோ போலியானது.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.

பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.

பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.