YouTurn

இந்துமத சாது கட்டாய மத மாற்றம் செய்யப்பட்டதாக பரப்பப்படும் வீடியோ! உண்மை என்ன?

இந்துமத சாது கட்டாய மத மாற்றம் செய்யப்பட்டதாக பரப்பப்படும் வீடியோ! உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

சரிபார்க்கப்பட்ட கூற்று

இந்த வீடியோவில் இருப்பது ரெஜவுல் கபீர் என்ற மனநலம் பாதிக்கப்பட்ட முஸ்லிம். அவருக்கு முடி திருத்தம் செய்து சேவை செய்யும் போது எடுக்கப்பட்ட வீடியோ இது.

பரவிய செய்தி

बांग्लादेश मे एक साधु जटाजुट को काटकर मुसलमान बना दिया हैं| In Bangladesh a sadhu has converted to Islam by cutting his matted locks

 X Link

விரிவான விளக்கம்

அழுக்கான கிழித்த உடையுடன் ஒருவர் தெருவில் நடந்து செல்கிறார்.  கருப்பு டீ சர்ட் அணிந்த நபர்கள் சிலர், அவரைப் பிடித்து அவரது சடை போன்ற நீண்ட அழுக்குப் படிந்த முடியை வெட்டி, குளிக்கவைத்து தூய்மை படுத்துகிறார்கள். இந்த வீடியோவை பதிவிட்டு, "வங்கதேசத்தில் இந்து சாதுவின் சடை முடியை வெட்டி அவரை இஸ்லாம் மதத்திற்கு மாற்றுகிறார்கள்" என்று 'எக்ஸ்' தளத்தில் பரப்புகிறார்கள்.

 


உண்மை என்ன?


பரப்பப்படும் வீடியோவின்  keyframe-களைக் கொண்டு தேடுகையில்,  யூட்யூப் தளத்தில் "இந்த மனநலம் பாதிக்கப்பட்டவருக்கு என்ன நேர்ந்தது!" என்று பங்களா மொழியில் எழுதப்பட்ட தலைப்பில் ஒரு  வீடியோவை காண முடிந்தது. பரப்பப்படும் சம்பவம் முழுவதையும் காட்சிப்படுத்தும் இந்த 5.27 நிமிடங்கள் நீண்ட வீடியோ கடந்த அக்டோபர் 26ஆம் தேதி பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த வீடியோவின் தலைப்பின் கீழ் "#safehumanity#help#haircut#cleaningmotivation​" போன்ற hashtag-களைக் காண முடிந்தது.



 இது குறித்து மேலும் தேடியதில், மேற்கண்ட வீடியோவில் நாம் காணும் சம்பவத்திற்கு விளக்கமளிக்கும் வகையில் ஒரு வீடியோ பேஸ்புக் தளத்தில் காணக்கிடைத்தது.


 

"நான் இந்து துறவிகளை இஸ்லாமிய மதத்திற்கு மதமாற்றம் செய்வதாக பிரச்சாரம் செய்வதற்கு இந்தியாவில்

எனது வீடியோவை  அவர்கள் பயன்படுத்துகிறார்கள். நான் இந்த பிரச்சாரத்தை கண்டனம் செய்கிறேன்" என்று அந்த வீடியோவில் உள்ள நபர் பேசியிருக்கிறார்.

 

மேலும்  தேடியதில், BOOM என்ற பத்திரிகையில் இது குறித்த செய்தி வெளியாகி இருப்பதை கண்டோம். அதன்படி, மேற்குறிப்பிட்ட வீடியோவை எடுத்தவரான ‘மஹ்பூப் சோர்கர்’ என்பவரை BOOM  பத்திரிகை அணுகி விசாரித்தது. "நாங்கள் தெருக்களில் படுத்துக் கிடக்கும் ஆதரவற்ற, ஏழை, மனநலம் பாதிக்கப்பட்ட மக்களை அவர்களது குடும்பத்தினரிடம் சேர்ந்து வைக்கும் பணியை செய்து வருகிறோம். அவர்கள் எந்த மதத்தை சேர்ந்தவர்கள் என்பதை கணக்கில் எடுத்துக் கொள்ளாமலே இதனை செய்து வருகிறோம்" என்று  மஹ்பூப் சோர்கர் பதிலளித்திருக்கிறார்.

 

மேலும் பரப்பப்படும் இந்த வீடியோவில் இருக்கும் நபர், சில காலத்திற்கு முன்பு காணாமல் போன ரெஜவுல் கபீர் என்ற முஸ்லிம் என்றும் அவருக்கு மனநலப் பிரச்சனை இருந்தது என்றும் அவரது அண்ணனின் மூலம் தெரியவந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

 

இதிலிருந்து, பரப்பப்படும் வீடியோவில் இருக்கும் நபர் ரெஜவுல் கபீர் என்ற முஸ்லிம் என்றும் அவருக்கு மனநிலை ரீதியான பிரச்சினை இருப்பதும் தெளிவாகிறது. ஆதரவற்றவர்களுக்கு முடி திருத்தி சேவை செய்யும் போது எடுக்கப்பட்ட வீடியோவை திரித்து 'இந்து சாதுவை மதமாற்றம் செய்வதாக' பரப்புகின்றனர்.

 

முடிவு:


இந்த வீடியோவில் இருப்பது ரெஜவுல் கபீர் என்ற மனநலம் பாதிக்கப்பட்ட முஸ்லிம். அவர் இந்து சாது அல்ல. ஆதரவற்றவர்களுக்கு சேவை செய்யும் போது எடுக்கப்பட்ட வீடியோவை 'மதமாற்றம் செய்யவதாக' திரித்து பரப்புகின்றனர்.

சுருக்கமாக


ஆதாரங்கள்


பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க