யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
‘மேடையில் ஜொலிக்கும் நட்சத்திரங்கள்’ என்று சிங்கள மொழியில் எழுதப்பட்டுள்ள பேஸ்புக் பக்கத்தில் தான் இந்த வீடியோ முதலில் பதிவிடப்பட்டுள்ளது.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
தமிழ்நாட்டில் பட்டாக்கத்தியுடன் ரவுடிகள் ஆட்டம் போடுவதைப் பாருங்கள் என்று கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. மேலும் பதிவுகளில் திமுக ஆட்சியின் அவலம் இது தான் என்று குறிப்பிடப்பட்டிருப்பதையும், வீடியோவில் ஆண்கள் பலர் ஆயுதங்களுடன் நடனம் ஆடுவதையும் தெளிவாகக் காண முடிகிறது.
முதல்வர் M. K. Stalin அரசு பள்ளி மாணவர்களை அலுவலகத்துக்கு அழைத்து, அவர்கள் போட்ட சோசியல் மீடியா ரீல்ஸைப் பாராட்டி ஊக்கப்படுத்தினார்.
இப்போ பட்டாகத்திகளுடன் துள்ளல் ரீல்ஸ் போடும் சில சென்னை “குடிமக்களையும்” அழைத்து சிறிய அட்வைஸ் கொடுக்கலாம் என மக்கள் நினைக்கிறார்கள்.
அலுவலக கதவு… pic.twitter.com/MDuVx482wc
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் தேடிப் பார்த்ததில், “වේදිකාවේ දිලෙන තරු“ என்ற ஃபேஸ்புக் பக்கத்திற்கு நம்மை அழைத்து சென்றது .
‘වේදිකාවේ දිලෙන තරු’ ஃபேஸ்புக் பக்கத்தில், “31 ஆம் தேதி இரவு சகோதரர்கள் மீன் கடையில் நன்றாக வாங்கினார்கள்“ என்று சிங்கள மொழியில் குறிப்பிட்டு, பரவி வரும் இதே வீடியோ ஜனவரி 2026 ல் பதிவு செய்யப்பட்டிருந்தது.
மேலும் இந்த ஃபேஸ்புக் பக்கத்தின் சுயவிவரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மொபைல் எண்ணை தொடர்பு கொண்டு பேசியதில், இவர்கள் இலங்கையை சேர்ந்தவர்கள் என்பதை உறுதி செய்ய முடிந்தது.
இதன் மூலம் "திமுக ஆட்சியில் பட்டாக்கத்தியுடன் இளைஞர்கள்" எனப் பரவும் வீடியோ தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டதல்ல. இலங்கையில் எடுக்கப்பட்டது என்பது உறுதியாகிறது.
‘மேடையில் ஜொலிக்கும் நட்சத்திரங்கள்’ என்று சிங்கள மொழியில் எழுதப்பட்டுள்ள பேஸ்புக் பக்கத்தில் தான் இந்த வீடியோ முதலில் பதிவிடப்பட்டுள்ளது.
முடிவு:
"திமுக ஆட்சியில் பட்டாக்கத்தியுடன் இளைஞர்கள்" எனப் பரவும் வீடியோ தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டதல்ல. இலங்கையில் எடுக்கப்பட்டது.