யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
சென்னை புதுப்பேட்டையில் உள்ள நாராயண நாயக்கன் தெருவில் புதுப்பேட்டை பள்ளிவாசலும், ஸ்ரீ பாலசுப்ரமணிய சுவாமி கோவிலும் அருகருகே அமைந்துள்ளதை கூகுள் வரைபடத்தில் தெளிவாக காண முடிகிறது.
பரவிய செய்தி
முருகன் கோவில் வாசலில் அசைவ உணவு விருந்து நடத்தி களங்கப்படுத்திய புதுப்பேட்டை முஸ்லீம்கள். இவனுங்க வேணும்ன்னு தான் இந்த கொழுப்பெடுத்த வேலையை செய்யறானுங்க. கலவரம் செய்து அமைதியை குலைக்க இந்த ஏற்பாடு.
விரிவான விளக்கம்
சென்னை புதுப்பேட்டை முருகன் கோவில் வாசலில் இஸ்லாமியர்கள் அசைவ விருந்து நடத்துவதாகக் கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. வீடியோவில் ஐம்பதுக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் வரிசையாக அமர்ந்து இரவு உணவு சாப்பிடுவதை தெளிவாகக் காண முடிகிறது.
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோவில் "முருகன் கோவில், நாராயண நாயக்கன் தெரு" என்று குறிப்பிட்டிருந்ததால் அது குறித்து கூகுள் வரைபடத்தில் (Google Map) ஆய்வு செய்தோம்.
அதன்படி, சென்னை புதுப்பேட்டையில் உள்ள நாராயண நாயக்கன் தெருவில் புதுப்பேட்டை பள்ளிவாசலும், ஸ்ரீ பாலசுப்ரமணிய சுவாமி கோவிலும் அருகருகே அமைந்துள்ளதை கூகுள் வரைபடத்தில் தெளிவாகக் காண முடிந்தது.

மேலும் புதுப்பேட்டை பள்ளிவாசல் என்று குறிப்பிட்டும் கூகுள் வரைபடத்தில் தேடினோம். அதன்படி அதில் பதிவேற்றப்பட்ட புகைப்படங்களில், பள்ளிவாசல் அருகே கோவில் அமைந்துள்ள புகைப்படமும் இடம்பெற்றிருந்தது. இதன் மூலம் இரண்டும் அருகருகே அமைந்துள்ளதை உறுதி செய்ய முடிகிறது.
இந்நிலையில் புதுப்பேட்டை பள்ளிவாசல் அருகே இஸ்லாமியர்கள் நோன்பு துறந்ததை, இஸ்லாமிய வெறுப்பை தூண்டும் நோக்கில் கோவில் வாசலில் அசைவு உணவு சாப்பிடுவதாகக் கூறி தவறாகத் திரித்து பரப்பி வருகின்றனர்.
முடிவு:
நம் தேடலில் சென்னை புதுப்பேட்டையில் உள்ள நாராயண நாயக்கன் தெருவில் புதுப்பேட்டை பள்ளிவாசலும், ஸ்ரீ பாலசுப்ரமணிய சுவாமி கோவிலும் அருகருகே அமைந்துள்ளதை தெளிவாக அறிய முடிகிறது. இந்நிலையில் வகுப்புவாதத்தை தூண்டும் நோக்கில் தவறாகத் திரித்துப் பரப்பி வருகின்றனர்.