YouTurn

இஸ்லாமியர்கள் விற்பனைப் பண்டங்களில் எச்சில் துப்புகிறார்கள் என்று தவறாக பரப்பப்படும் வீடியோ!

இஸ்லாமியர்கள் விற்பனைப் பண்டங்களில் எச்சில் துப்புகிறார்கள் என்று தவறாக பரப்பப்படும் வீடியோ!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

இது சீனாவில் எடுக்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் பழமையான வீடியோ.

பரவிய செய்தி

மக்களே தீபாவளிக்கு உணவு  உடைகள் எதுவாக தேச பக்தியுள்ள கடையானு பார்த்து வாங்கவும் 

தேச விரோத கும்பல் கடைகளில் எதுவும் வாங்காதீர்கள்



X Link


விரிவான விளக்கம்

ஒரு நபர் தனது வாயில் தண்ணீரை ஊற்றி பெட்டியில் வைக்கப்பட்டுள்ள பழங்களின் மீது துப்பும் வீடியோவின் இறுதியில் ‘உணவு ஜிகாத், ஆண்மை ஜிகாத்’ என்றும் எழுதப்பட்டு, 'இஸ்லாமியர்களை உணவு விற்பதிலிருந்து தடை செய்யவேண்டும்' என்றும் குறிப்பிடபட்டிருந்தது. இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டு, இஸ்லாமியர்கள் பொருட்களில் எச்சில் துப்பி விற்பனை செய்கிறார்கள் (எச்சில் ஜிகாத்) என்ற கண்ணோட்டத்தில் வலதுசாரிகளால் பரப்பப்படுகிறது. 

https://x.com/i/web/status/1812465588020838766

உண்மை என்ன?

இந்த வீடியோவின் Key Frame-களைக் கொண்டு தேடுகையில், ’sohu.com’ என்ற வலைதளத்தில் இந்த வீடியோவை கொண்டு எழுதப்பட்ட சிறுசெய்தி ஒன்றை கண்டோம். அதன்படி, இந்த வீடியோவில் இருப்பது சீனாவின் ’ஸ்சினி செங்கன்’ என்னும் பழக்கடை தெரு என்பது தெரியவருகிறது. அங்கே  அடுக்கி வைக்கப்பட்டுள்ள ‘yellow peel’ என்னும் பழங்களின் மீது ஒருவர் வாயில் இருந்து தண்ணீரை துப்புகிறார். பழங்கள் மீது  sprayer மூலமாக தண்ணீர் தெளிக்கப்படுவது வழக்கம்தான். அதற்கு பதிலாக ஒருவர் வாயில் நீரை ஊற்றி துப்பியதால் சர்ச்சையானது. 



மேலும், இந்த செய்தி 2022ஆம் ஆண்டு ஜீலை மாதம்  sohu.com தளத்தில் வெளியாகி உள்ளதை வைத்து இந்த வீடியோ குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் பழமையானது என்பதை உறுதி செய்யமுடிகிறது. 


’இஸ்லாமியர்கள் கண்ட இடங்களில் எல்லாம் எச்சல் துப்பக்கூடியவர்கள்; அவர்கள் அசுத்தமான நாகரிமற்ற மனிதர்கள்’ என்ற பொய்பிம்பத்தை ‘எச்சில் ஜிகாத்’ என்ற பெயரைக்கொண்டு வலதுசாரிகள் பல ஆண்டுகளாக இப்படி பரப்பி வருகின்றனர்.


சீனாவில் எடுக்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் பழமையான வீடியோவை, இஸ்லாமியர்கள் விற்பனை செய்யும் பண்டங்களில் எச்சில் துப்புகிறார்கள் என்று வலதுசாரிகளால் தவறாக பரப்பப்படுகிறது.


முடிவு:


இந்த வீடியோ சீனாவில் இரண்டாண்டுகளுக்கு முன்னால் எடுக்கப்பட்டது. இஸ்லாமியர்கள் விற்பனை பண்டங்களில் எச்சில் துப்புகிறார்கள் என்று பரப்பப்படும் தகவல் பொய்யானது. 


பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க