YouTurn

இயக்குநர் மகிழ் திருமேனி 'விடாமுயற்சி' அப்டேட் கொடுத்ததாக போலி ட்விட்டர் ஐடி பதிவை வெளியிட்ட ஊடகங்கள் !

இயக்குநர் மகிழ் திருமேனி 'விடாமுயற்சி' அப்டேட் கொடுத்ததாக போலி ட்விட்டர் ஐடி பதிவை வெளியிட்ட ஊடகங்கள் !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

அஜித்குமாரின் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தின் முக்கிய அறிவிப்பு ஆகஸ்ட் 03-இல் வெளியாகும் என இயக்குநர் மகிழ் திருமேனி ட்வீட்

Twitter Link | Archive Link

விரிவான விளக்கம்

யக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் விடாமுயற்சி படத்தில் நடிக்கவுள்ளார். இந்நிலையில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு குறித்த அப்டேட் வருகின்ற ஆகஸ்ட் 03 அன்று அறிவிக்கப்பட உள்ளதாக இயக்குனர் மகிழ் திருமேனி தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்ததாகக் கூறி News7 தமிழ், தந்தி டிவி, IBC தமிழ், i தமிழ் நியூஸ், பத்திரிகை.com போன்ற ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.



Archive Link

Archive Link

உண்மை என்ன ?

சமூக ஊடகங்களில் பரவி வரும் ட்வீட் குறித்து தேடியதில், @MagizhDirector என்றும், @MagizhDiroffl என்றும் இயக்குனர் மகிழ் திருமேனியின் பெயரில் இரண்டு ட்விட்டர் பக்கங்கள் செயல்படுவதைக் காண முடிந்தது.



இதில் @MagizhDirector என்ற ட்விட்டர் பக்கத்தில் இருந்து தான் விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு குறித்த அப்டேட் வருகின்ற ஆகஸ்ட் 03 அன்று வெளியிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



Archive Link:

எனவே, இதுகுறித்து மேலும் தேடியதில், Done Channel என்ற அதிகாரப்பூர்வ சினிமா செய்தியின் ட்விட்டர் பக்கத்தில் இயக்குனர் மகிழ் திருமேனி குறித்த அறிவிப்பை காண முடிந்தது. அதில் "இயக்குநர் மகிழ் திருமேனி எந்தவொரு சமூக ஊடக பக்கத்திலும் இல்லை. அவர் பெயரில் இருக்கும் போலி கணக்குகளிலிருந்து வரும் செய்திகளைத் தவிர்க்குமாறு ஊடகங்கள், ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்களைக் கேட்டுக் கொள்கிறோம்." என்று குறிப்பிடப்பட்டிருந்தது.



அவர் பெயரில் தற்போது இருக்கும் இரண்டு கணக்குகள் குறித்து மேலும் ஆய்வு செய்து பார்த்ததில், அவை போலி கணக்குகள் என்பதை உறுதிபடுத்த முடிந்தது.



வைரல் செய்யப்படும் படத்தின் போஸ்டரில் @Manav Designz என வாட்டர் மார்க் உள்ளது. அதுகுறித்து தேடுகையில், @Itz_Manav_23 எனும் ட்விட்டர் ஐடி ஜூலை 11ம் தேதி இப்போஸ்டர் வெளியிடப்பட்டு இருக்கிறது.



Twitter link 

போலி ட்விட்டர் பக்கத்தில் வெளியான அறிவிப்பை உண்மை என்று நம்பி News7 தமிழ், தந்தி டிவி, IBC தமிழ், i தமிழ் நியூஸ், பத்திரிகை.com போன்ற தமிழ் ஊடகங்கள் தவறான செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் படிக்க: நடிகர் அஜித் குமாரின் எடிட் செய்யப்பட்ட படத்தை ட்விட்டரில் பதிவிட்ட அமர் பிரசாத் !

இதற்கு முன்பும் நடிகர் அஜித் குமார் குறித்து ட்விட்டரில் போலியாக பல செய்திகள் பரவின. அதனையும் ஆய்வு செய்து கட்டுரைகள் வெளியிட்டிருக்கிறோம்.

மேலும் படிக்க: நடிகர் அஜித் குமார் பகாசூரன் திரைப்படத்தை பாராட்டியதாகப் பரப்பப்படும் போலிச் செய்தி !

முடிவு: 

நம் தேடலில், விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு குறித்த அப்டேட் வருகின்ற ஆகஸ்ட் 03 அன்று அறிவிக்கப்பட உள்ளதாக இயக்குனர் மகிழ் திருமேனி அறிவித்ததாகப் பரவி வரும் ட்வீட் போலியானது என்பதை உறுதிப்படுத்த முடிந்தது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க