யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி
கூட்டமா இருக்கு பாதிக திரும்ப பொய்ட்டாருனு சொன்னாங்க ஆனா பாருங்க நேத்து வேற எங்கையோ போய்ருக்கான் இப்பவே பின அரசியல் பண்ண ஆரமிச்சிட்டான் சல்லிப்பய. 

விரிவான விளக்கம்
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி விலங்குகளைப் புகைப்படம் எடுப்பதற்காக, தனது நண்பருடன் இமாச்சல் பிரதேச மாநிலத்துக்குச் சென்றிருந்தார். கசாங் நளா பகுதியில் சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையை ஒட்டி இருந்த சட்லெஜ் ஆற்றில் கவிழ்ந்தது. சுமார் 9 நாட்களுக்குப் பிறகு அவரது உடல் மீட்கப்பட்டது. சி.ஐ.டி. நகரில் உள்ள சைதை துரைசாமியின் வீட்டில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் அஞ்சலி செலுத்தினர்.
நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய் அஞ்சலி செலுத்த வரும் போது கூட்டம் அதிகம் இருந்ததால் பாதியில் திரும்பிச் சென்றதாகவும், இது குறித்து புஸ்ஸி ஆனந்த் சைதை துரைசாமியிடம் தெரிவித்ததாகவும் ஊடகங்களில் கடந்த 13ம் தேதி செய்தி வெளியாகியுள்ளது.
Archive link
இந்நிலையில் கூட்டம் அதிகமாக உள்ளது எனத் திரும்பிச் சென்ற விஜய் வேறொரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகிறது.
உண்மை என்ன ?
பரவக் கூடிய வீடியோவில் ’AVinthehousee’ என்கிற எக்ஸ் பக்க பெயர் இருப்பதைக் காண முடிந்தது. அப்பக்கத்தில் பரவக் கூடிய வீடியோ கடந்த (பிப்) 13ம் தேதி பதிவிடப்பட்டுள்ளது. அன்றைய தேதிதான் வெற்றி துரைசாமியின் அஞ்சலிக்குச் சென்ற நடிகர் விஜய் பாதியில் திரும்பியதாகச் செய்திகள் வெளியாகியுள்ளது.
மேற்கொண்டு பரவக் கூடிய வீடியோவின் கீஃப்ரேம்களை கொண்டு இணையத்தில் தேடியதில், ’Bingoo Box’ யூடியூப் பக்கத்தில் விஜய் கலந்து கொண்ட அந்நிகழ்ச்சியின் வேறொரு வீடியோ பதிவிடப்பட்டுள்ளதைக் காண முடிந்தது.
2023, நவம்பர் 23 தேதி பதிவிட்டுள்ள அந்த வீடியோவின் தலைப்பில் லியோ படத்தின் தயாரிப்பாளர் லலித் அவர்களின் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடிகர் விஜய் கலந்து கொண்டார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. பரவக் கூடிய வீடியோவில் விஜய் கருப்பு வெள்ளை சட்டை அணிந்துள்ளார். அதே சட்டையை Bingoo Box வீடியோவிலும் காணலாம்.
அதேபோல் பரவக் கூடிய வீடியோவில் விஜய் காரில் ஏறும் போது அவருக்கு வலது பக்கத்தில் ஊதா நிற சட்டை அணிந்த நபர் இருப்பதைக் காண முடிகிறது. இவர் Bingoo Box பதிவிடப்பட்டுள்ள வீடியோவிலும் உள்ளார்.

2023, நவம்பரில் நடைபெற்ற தயாரிப்பாளர் லலித் அவர்களுடைய மகனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் விஜய் கலந்து கொண்டது தொடர்பாக ’நியூஸ் 18 தமிழ்நாடு’, ’விகடன்’ ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளது.

இவற்றில் இருந்து வெற்றி துரைசாமியின் அஞ்சலியில் கலந்து கொள்ளாமல், வேறொரு நிகழ்ச்சியில் விஜய் கலந்து கொண்டதாகப் பரவும் தகவல் உண்மை அல்ல என்பதை அறிய முடிகிறது.
மேலும் படிக்க : ‘விஜய்க்கு ஓட்டு போட மாட்டேன்’ என அரவிந்த்சாமி கூறியதாக மாலை மலர் வெளியிட்ட தவறான செய்தி!
இதற்கு முன்னர் விஜய் மற்றும் அவரது தமிழக வெற்றி கழகம் குறித்துப் பரப்பப்பட்ட போலி செய்திகள் பற்றிய உண்மைகள் யூடர்னில் செய்தியாக வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க : நடிகர் விஜய்க்கு துணை முதல்வர் பதவி தருவதாகச் சீமான் கூறினார் எனப் பரவும் போலி செய்தி!
முடிவு :
நம் தேடலில், வெற்றி துரைசாமியின் இறுதி அஞ்சலியில் கலந்து கொள்ளாமல் வேறொரு நிகழ்ச்சியில் நடிகர் விஜய் கலந்து கொண்டதாகப் பரவும் வீடியோ குறித்த தகவல் உண்மை அல்ல. அது 2023, நவம்பர் மாதம் தயாரிப்பாளர் லலித்தின் மகன் திருமண நிகழ்ச்சியில் எடுக்கப்பட்டது என்பதை அறிய முடிகிறது.

கூட்டமா இருக்கு பாதிக திரும்ப பொய்ட்டாருனு சொன்னாங்க ஆனா பாருங்க நேத்து வேற எங்கையோ போய்ருக்கான்
இப்பவே பின அரசியல் பண்ண ஆரமிச்சிட்டான் சல்லிப்பய @actorvijay
pic.twitter.com/7G1B5th5r0
— (@AjithBruceOffl) February 14, 2024
Archive link
இந்நிலையில் கூட்டம் அதிகமாக உள்ளது எனத் திரும்பிச் சென்ற விஜய் வேறொரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகிறது.
உண்மை என்ன ?
பரவக் கூடிய வீடியோவில் ’AVinthehousee’ என்கிற எக்ஸ் பக்க பெயர் இருப்பதைக் காண முடிந்தது. அப்பக்கத்தில் பரவக் கூடிய வீடியோ கடந்த (பிப்) 13ம் தேதி பதிவிடப்பட்டுள்ளது. அன்றைய தேதிதான் வெற்றி துரைசாமியின் அஞ்சலிக்குச் சென்ற நடிகர் விஜய் பாதியில் திரும்பியதாகச் செய்திகள் வெளியாகியுள்ளது.
Fan : Anna Bye Naa @actorvijay : Bye pa ♥️♥️♥️ #ThalapathyVijay pic.twitter.com/1zkvaxSUGS
— Arun Vijay (@AVinthehousee) February 13, 2024