YouTurn

100 கோவில் சிலைகளையாவது உடைத்தெறிவோம் என கி.வீரமணி கூறியதாக வதந்தி !

100 கோவில் சிலைகளையாவது உடைத்தெறிவோம் என கி.வீரமணி கூறியதாக வதந்தி !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

ஒரு பெரியார் சிலை அகற்றப்பட்டால் பதிலடியாக 100 கோவில் சிலைகளையாவது உடைத்தெறிவோம் - கி.வீரமணி சூளுரை



Facebook link | archive link 

விரிவான விளக்கம்

திராவிடர்க் கழகத்தின் தலைவர் கி.வீரமணி, " ஒரு பெரியார் சிலை அகற்றப்பட்டால் பதிலடியாக 100 கோவில் சிலைகளையாவது உடைத்தெறிவோம் " எனக் கூறியதாக போலியான புதியதலைமுறை நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.

பெரியார் சிலை அகற்றப்பட்டதற்கு கி.வீரமணி கண்டனம் மற்றும் ஒரு பெரியார் சிலை அகற்றப்பட்டால் பதிலடியாக 100 கோவில் சிலைகளையாவது உடைத்தெறிவோம் ஆகிய வாக்கியங்களை கொண்டு தேடுகையில் புதியதலைமுறை மட்டுமின்றி எந்தவொரு ஊடகத்திலும் அவ்வாறான எந்தவொரு செய்தியும் வெளியாகவில்லை.



பரப்பப்படும் போலியான நியூஸ் கார்டில் 04-03-2019 என கடந்த ஆண்டு தேதி குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அந்த தேதிலோ அல்லது பிற தேதிலோ அப்படியொரு நியூஸ் கார்டு நமக்கு கிடைக்கவில்லை. புதிய தலைமுறை நியூஸ் கார்டில் ஃபோட்டோஷாப் செய்து வதந்தியை பரப்பி வருகிறார்கள் என தெளிவாய் தெரிகிறது.

மேலும் படிக்க : கி.வீரமணி நடத்தி வைத்த பேத்தி திருமணம் என வைரலாகும் வீடியோ உண்மையா ?

அரசியல் கட்சித் தலைவர்கள், பிரபலங்கள் உள்பட பலரும் கூறாத கருத்துக்களை கூறியதாக போலியான நியூஸ் கார்டுகள் சமூக வலைதளங்களில் வைரல் செய்யப்படுகின்றன என்பதை தொடர்ந்து எடுத்துரைத்து வருகிறோம். கி.வீரமணி சார்ந்து போலிச் செய்திகள் சமூக வலைதளத்தில் வைரல் செய்யப்பட்டன. அதேபோல், செய்தி நிறுவனங்களின் நியூஸ் கார்டுகள் அதிகம் ஃபோட்டோஷாப் செய்யப்படுகின்றன என்பது குறித்த புரிதல் மக்களிடம் உண்டாக வேண்டும்.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

அசாம் வெள்ளப் பெருக்கின் போது எடுக்கப்பட்ட வீடியோ? தவறாக வெளியிட்ட ‘இந்து தமிழ் திசை’!

சமீபத்தில் ஜம்மூ காஷ்மீரில் வெள்ளம் ஏற்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோவை தற்போது அசாம் வெள்ளப் பெருக்கின் போது எடுக்கப்பட்டதாக ‘இந்து தமிழ் திசை’ பத்திரிகை தவறாக…

பொய்

மகளிர் உரிமைத்தொகையை 2500 ரூபாயாக உயர்த்துகிறதா தவெக அரசு? ’One India’ ஊடகம் வெளியிட்ட அதிகாரப்பூர்வமற்ற செய்தி!

மகளிர் உரிமைத்தொகையை 2500 ரூபாயாக உயர்த்தி வழங்கிவது குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் தமிழ்நாடு அரசு வெளியிடவில்லை. ’OneIndia தமிழ்’ ஊடகம் ஆதாரப்ப…

பொய்

மயிலாடுதுறை மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் நிறத்தை தீட்டவிடாமல் தடுத்தார்களா முஸ்லிம்கள்?

கடந்த 2023ஆம் ஆண்டிலே மயிலாடுதுறை நகரத்தின் கடைவீதியில் உள்ள மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் மூவர்ண நிறம் பூசப்பட்டுவிட்டது.

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க