யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி
சமூக வலைதளம் வாயிலாக பழகிய ஆண்களை படுக்கைக்கு அழைத்ததாக ஊடக நெறியாளரும், விசிக பிரமூகருமான விக்ரமன் மீது பகிரங்க குற்றச்சாட்டு. விக்ரமன் மீது தொடரும் சர்ச்சை !

Facebook link

Facebook link
விரிவான விளக்கம்
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செய்தித்தொடர்பாளர் விக்ரமன், சமூக வலைதளம் வாயிலாக பழகிய ஆண்களை படுக்கைக்கு அழைத்ததாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளதாக புதியதலைமுறை செய்தியின் நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.
Archive link

உண்மை என்ன ?
விசிக விக்ரமன் பற்றி பரவி வரும் 2021 ஏப்ரல் 20-ம் தேதியிட்ட நியூஸ் கார்டு பற்றி புதியதலைமுறை சேனலின் முகநூல் பக்கத்தில் தேடுகையில், கடந்த ஆண்டு ஏப்ரல் 20-ம் தேதியில் விசிக விக்ரமன் பற்றி எந்த செய்தியும் வெளியாகவில்லை.
இதுகுறித்து, புதியதலைமுறை சேனலின் இணையதளப் பிரிவை தொடர்பு கொண்டு பேசுகையில், "இதை நாங்கள் வெளியிடவில்லை. போலியானது " எனத் தெரிவித்து இருந்தனர்.

கடந்த ஆண்டு ஏப்ரல் 20-ம் தேதி வெளியான புதியதலைமுறை சேனலின் நியூஸ் கார்டில் போலியான செய்தியை எடிட் செய்து பரப்பி இருக்கிறார்கள். அந்த நியூஸ் கார்டை தற்போது மீண்டும் பரப்பி கொண்டிருக்கிறார்கள்.
முடிவு :
நம் தேடலில், சமூக வலைதளம் வாயிலாக பழகிய ஆண்களை படுக்கைக்கு அழைத்ததாக ஊடக நெறியாளரும், விசிக பிரமுகருமான விக்ரமன் மீது பகிரங்க குற்றச்சாட்டு என பரவும் புதியதலைமுறை நியூஸ் கார்டு போலியானது என அறிய முடிகிறது.
சிறுத்தை குட்டி எங்கேயோ வசமாக சிக்கி விட்டது போல 😁😁😂😂
உண்மையா?? pic.twitter.com/74uuxdJKg1
— மா பிரபாகரன் ✌️ (@prabaha19285263) April 21, 2022