YouTurn

திமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக திருமாவளவன் கூறினாரா ?

திமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக திருமாவளவன் கூறினாரா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

திமுக கூட்டணியிலிருந்து விலகுகிறோம். கனத்த மன வேதனையுடன் திமுக கூட்டணியிலிருந்து விலகுகிறோம் - விசிக தலைவர் திருமாவளவன்



Twitter link | Archive link 

விரிவான விளக்கம்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் திமுகவின் கூட்டணியில் இருந்து விலகுவதாக கூறினார் என புதிய தலைமுறை செய்தியின் நியூஸ் கார்டு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.





உண்மை என்ன ?

திருமாவளவன் திமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தாரா எனத் தேடுகையில் அப்படியொரு செய்தி எங்கும் வெளியாகவில்லை. அது பரபரப்பான செய்திகளுக்கும், விவாதத்திற்கும் வித்திட்டு இருக்கும்.



Facebook link 

ஆகையால், புதிய தலைமுறை செய்தியின் முகநூல் பக்கத்தை ஆராய்கையில், காவல்துறையின் போக்கை கண்டித்து செப்டம்பர் 29ம் தேதி மாவட்ட தலைநகரங்களில்  கண்டன ஆர்ப்பாட்டம். சேலத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கொடியை ஏற்றிய 15 பேர் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம்- விசிக தலைவர் திருமாவளவன் " என செப்டம்பர் 25-ம் தேதி அதே புகைப்படத்துடன் நியூஸ் கார்டு வெளியாகி இருக்கிறது.



Twitter link 

செப்டம்பர் 29-ம் தேதி எம்.பி திருமாவளவன் ட்விட்டர் பக்கத்தில், " மோரூர் கொடியேற்றத் தடை: செப்-30 சேலத்திலும் அக்-01 மதுரையிலும் நடைபெறவிருந்த விசிக ஆர்ப்பாட்டங்கள் தள்ளி வைக்கப்படுகின்றன. தனது இரண்டு நாள் சுற்றுப்பயணம் முடித்து சென்னைக்குத் திரும்பியதும் முதல்வர் @mkstalin அவர்கள் நேரில் பேச அழைத்திருப்பதால் இந்த முடிவு மேற்கொள்ளப்படுகிறது " எனப் பதிவிடப்பட்டுள்ளது.



செப்டம்பர் 29ம் தேதி காவல்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம் என திருமாவளவன் கூறியதால் அதை எடிட் செய்து திமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக போலியான செய்தியை பரப்பி வருகிறார்கள்.

முடிவு : 

நம் தேடலில், கனத்த மன வேதனையுடன் திமுக கூட்டணியிலிருந்து விலகுகிறோம் என விசிக தலைவர் திருமாவளவன் என திருமாவளவன் கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என அறிய முடிகிறது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் போலீஸ் தாக்குதலால் மாணவி உயிரிழந்தாரா? பரப்பப்படும் போலியான புகைப்படம்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி இறந்துவிட்டதாக AI தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பிவருகிற…

பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறு…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க