YouTurn

வருண் - வந்திதா ஐபிஎஸ் தம்பதி விவாகரத்து செய்ததாகப் பரவும் பொய் செய்தி!

வருண் - வந்திதா ஐபிஎஸ் தம்பதி விவாகரத்து செய்ததாகப் பரவும் பொய் செய்தி!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

அவர்கள் புகைப்படத்தின் மீது ‘Divorce’ என இருப்பது போன்று எடிட் செய்து பொய் செய்தி பரப்பப்படுகிறது.

பரவிய செய்தி

மனைவியை பிரிவதாக திருச்சி டிஐஜி வருண்குமார் Instagram Story

X link

விரிவான விளக்கம்

ஐபிஎஸ் தம்பதியினரான வருண் குமார் - வந்திதா விவாகரத்து செய்வதாக தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளனர் எனப் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் நாம் தமிழர் கட்சி ஆதரவாளர்களால் பரப்பப்படுகிறது.

#Updates | மனைவியை பிரிவதாக திருச்சி டிஐஜி வருண்குமார் Instagram Story
ரவி அறிவிப்பு!
#varunkumarips #VanditaPandey #tamilnews pic.twitter.com/je75CFdEso

— SanJeevan1721 (@Sanjeevan172) February 13, 2025

உண்மை என்ன?

பரவக் கூடிய தகவல் குறித்து அறிய வருண் குமாரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஆய்வு செய்தோம். தனது மனைவி வந்திதாவுடன் இருக்கும் இதே புகைப்படத்தைக் கடந்த 13ம் தேதி வருண் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். 


https://www.instagram.com/p/DF_BxLbz6jb/


அதில், ‘தளபதி’ என்ற ரஜினியின் திரைப்படத்தில் வரக்கூடிய ‘சுந்தரி கண்ணால் ஒரு சேதி’ என்ற பாடலின் வரிகளைப் பதிவிட்டுள்ளார். பரவக் கூடிய படத்தில் இருப்பது போன்று ‘Divorce’ என எந்த ஒரு இடத்திலும் குறிப்பிடப்படவில்லை.

மேற்கண்ட ஆதாரத்திலிருந்து வருண் குமார் ஐபிஎஸ் குறித்துப் பரவக் கூடிய தகவல் தவறானது என்பதை அறிய முடிகிறது. நாம் தமிழர் கட்சியினர் வருண் மற்றும் அவரது மனைவி வந்திதா குறித்து சமூக வலைத்தளத்தில் தவறாகப் பேசி வருகின்றனர். அதற்கு வருண் குமாரும் எதிர்வினையாற்றி வருகிறார். இந்நிலையில்தான் அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்துப் பொய் செய்தி பரப்புகின்றனர். 

முடிவு: 

வருண் -  வந்திதா தம்பதி விவாகரத்து செய்ததாகப் பரவும் தகவல் உண்மை அல்ல. வருண் குமார் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட படத்தில் ‘Divorce’ என இருப்பது போன்று எடிட் செய்து தவறான தகவல் பரப்பப்படுகிறது.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.

பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.

பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.