யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி
தலித் அணி தலைவர் வன்னியரசு. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகியான வன்னியரசுவை தி.மு.க கட்சியின் தலித் அணி தலைவராக நியமித்து கழகத்தலைவர் ஸ்டாலின் உத்தரவு

விரிவான விளக்கம்
விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த வன்னி அரசுவை திமுகவின் தலித் அணி தலைவராக மு.க.ஸ்டாலின் நியமித்ததாக எடிட் செய்யப்பட்ட போலியான செய்தி ஒன்று சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.

உண்மை என்ன ?
நியூஸ் 7 தமிழ் செய்தி சேனலின் பெயரில் பரவும் நியூஸ் கார்டை அந்நிறுவனம் வெளியிடவில்லை. பரவும் நியூஸ் கார்டை அந்நிறுவனமும் மறுத்து இருக்கிறது. இதையடுத்து, வன்னி அரசும் பரவும் தவறான செய்தி குறித்து தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு இருக்கிறார்.
Facebook link
" அண்ணே @SeemanOfficial சாதி வெறியர்களாக எப்படி பசங்கள வளக்குறீங்கன்னு பாருங்க. என்னை தலித் அணி என்று சொல்வதன் மூலம் சாதிய வன்மத்தையே கக்குறீங்க. நேர்மறையான அரசியலுக்கு வாங்க. பாமக,பாஜக போல வெறுப்பரசியல் பண்ணுவதை நிறுத்துங்க! " எனப் பதிவிட்டு இருக்கிறார்.
Twitter link
இதற்கு முன்பாக, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை கேலி செய்யும் விதத்தில் ஒரு வீடியோவை வன்னி அரசு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். இதையடுத்து, போலிச் செய்தி பரப்பப்பட்ட காரணத்தினால் நாம் தமிழர் கட்சி ஆதரவாளர்கள் இப்படி செய்ததாக சீமானை டக் செய்து வன்னி அரசு பதிவிட்டு இருக்கிறார்.
முடிவு :
நம் தேடலில், விசிகவின் வன்னி அரசு திமுகவின் தலித் அணி தலைவராக நியமிக்கப்பட்டதாக பரவும் செய்தி போலியானது என அறிய முடிகிறது.

அண்ணன் வடிவேலுக்கே
டஃப் ஃபைட் கொடுக்குறாரு பாருங்க @SeemanOfficial #RSSகைப்புள்ளசீமான் #நாம்சங்கிகள் pic.twitter.com/hdRCjMKPn0
— வன்னி அரசு (@VanniArasu_VCK) September 20, 2021