YouTurn

வாணியம்பாடி முஸ்லீம் கல்வி சங்கம் கட்டாய தமிழ் மொழித் தேர்வை ரத்து செய்யக் கோரியதா? உண்மை என்ன?

வாணியம்பாடி  முஸ்லீம் கல்வி சங்கம் கட்டாய தமிழ் மொழித் தேர்வை ரத்து செய்யக் கோரியதா? உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

சரிபார்க்கப்பட்ட கூற்று

கட்டாய தமிழ் மொழித் தேர்வு நடைமுறைக்கு உட்படுத்திக் கொள்ள அவகாசம் வேண்டும் என்று கோரியதைத் திரித்து, கட்டாயத் தமிழ் மொழித் தேர்வை ரத்து செய்யக் கோரியதாகத் தவறாகப் பரப்புகிறார்கள்.

பரவிய செய்தி

Vaniyambadi Town of Tamil Nadu is known as "Aligarh of South India". Vaniyambadi Muslim Educational Society organises National Urdu Book Fair every year. They even demand removal of Tamil as compulsary language and demand Urdu as 1st language.
(Never saw any so called proud Tamil having problem with Urdu)


image.png


X Link


விரிவான விளக்கம்

வாணியம்பாடியில் முஸ்லீம் கல்வி சங்கம் நடத்திய 25ஆவது தேசிய உருது புத்தகக் கண்காட்சியின் பின்னணியில் எடுக்கப்பட்ட புகைப்படத்தைப் பகிர்ந்து, ‘தமிழ்நாட்டில் உள்ள நகரமான வாணியம்பாடி ”தென்னிந்தியாவின் அலிகர்”. வாணியம்பாடி முஸ்லீம் கல்வி சங்கம் ஒவ்வொரு ஆண்டும் தேசிய உருது புத்தகக் கண்காட்சியை ஒருங்கிணைத்து நடத்துகிறது. மேலும் இவர்கள், தமிழ் கட்டாய மொழிப்பாடமாக இருப்பதை ரத்து செய்யக் கோருவதுடன், உருது மொழியை முதல் மொழியாக மாற்றவும் கோரிக்கை வைக்கிறார்கள்’ என்று சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது. 

https://x.com/i/web/status/1894603077212410211

உண்மை என்ன?


’25ஆவது தேசிய உருது புத்தகக் கண்காட்சி’ பற்றி இணையத்தில் தேடுகையில் அது குறித்து யூட்யூப் தளத்தில் ஒரு வீடியோவைக் காணமுடிந்தது. அந்த வீடியோவின் Discriptional-ல் ’உருது மொழி மேம்பாட்டுக்கான தேசிய கவுன்சில்’ வாணியம்பாடி முஸ்லிம் கல்விச் சங்கத்துடன் இணைந்து 25வது உருது தேசிய புத்தகக் கண்காட்சியை வாணியம்பாடி இஸ்லாமியா கல்லூரியில் (தன்னாட்சி) நடத்த இருப்பதாகவும், ஜனவரி 3 முதல் 11 ஆம் தேதி வரை இந்த புத்தகக் கண்காட்சி நடைபெரும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.  இந்த புத்தகக் கண்காட்சி ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு இந்திய நகரத்தில் நடத்தப்படுகிறது. அந்தவகையில் 25ஆவது தேசிய உருது புத்தகக் கண்காட்சி முதல்முறையாக வாணியம்பாடியில் நடத்தப்பட்டது.


image.png


இது தொடர்பாக முஸ்லீம் சங்கத்தின் இணை செயலாளரை தொடர்புகொண்டு ’You Turn’ சார்பாக பேசினோம்.


”வாணியம்பாடி முஸ்லீம் சங்கம் மூலம் கடந்த 2023 ஆம் ஆண்டு உருது மேளா என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் ஒரு பகுதியாக உருது புத்தகக் கண்காட்சியும் நடத்தப்பட்டது. மேலும், இந்த வருடம் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ் மொழி கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் உருது மொழி பயிலும் மாணவர்கள் தமிழில் எழுதுவது சிரமமாக உள்ளது. எனவே இக்கட்டாய தமிழ் மொழி தேர்விற்குக் கால அவகாசம் தேவை என்பதே எங்களின் கோரிக்கை. தமிழ் மொழியை நீக்க வேண்டும் என நாங்கள் யாரும் கோரவில்லை” என்று முஸ்லீம் சொசைட்டி இணைச் செயலாளர் தெரிவித்தார்.



தெலுங்கு, கன்னடம், உருது, மலையாளம் ஆகிய மொழிகளைத் தாய் மொழியாகக் கொண்ட மொழிச் சிறுபான்மை மாணவர்களுக்குத் தமிழ் மொழி தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில், தமிழைக் கட்டாய பாடமாக்குவதிலிருந்து ஓராண்டு (2024) மட்டும் விலக்கு அளித்தது உச்ச நீதிமன்றம். 


இந்த ஓராண்டு விலக்கு முடிந்ததை அடுத்து கடந்த 2024 செப்டம்பர் 2 அன்று ’சிறுபான்மை மொழி மாணவர்களும் தமிழ் தேர்வு கட்டாயமாக எழுத வேண்டும்’ என்று தேர்வுத்துறை  உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 


சென்னை உயர் நீதிமன்றம் 2020 முதல் 2022 கல்வியாண்டு வரையில் மொழிவாரி சிறுபான்மை பள்ளிகளில் படிக்கு மாணவர்களுக்குத் தமிழ் மொழித் தாள் எழுதுவதிலிருந்து விலக்கு அளித்துத் தீர்ப்பளித்துள்ளது. இதே போன்ற உத்தரவை உச்ச நீதிமன்றம் 2023ம் கல்வியாண்டுக்கும் வழங்கியுள்ளது. கடந்த கல்வியாண்டுகளில் தமிழ் மொழி தேர்விற்கு விலக்கு அளித்து நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்கியது பற்றி ஏற்கனவே ’YouTurn’ தளத்தில் எழுதியுள்ளோம்.


கட்டாய தமிழ் மொழி தேர்வு எழுதுவதற்காக வாணியம்பாடி முஸ்லீம் கல்வி சங்கம் கேட்கும் கால அவகாசம் என்பது இதுபோன்ற தற்காலிக விலக்குதான். அவர்கள் நிரந்தரமாகத் தமிழ் கட்டாய மொழிப்பாடமாக இருப்பதை ரத்து செய்யச் சொல்லி கோரிக்கை ஏதும் வைக்கவில்லை என்பது நிரூபணமாகிறது.


மேலும் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அலிகர் என்னும் நகரத்தில் ‘அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம்’ அமைந்துள்ளது. 2019ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு (CAA) எதிராக இந்த பல்கலைக்கழக மாணவர்கள் போராடினர் என்பது குறிப்பிடத்தக்கது. முஸ்லீம் அதிகமாக வாழும் இடங்கள் மீது வெறுப்புணர்வு கொண்டு ”வாணியம்பாடி நகரம் தென்னிந்தியாவின் அலிகர்” என்று மதவாத கண்ணோட்டத்தில் பரப்புகிறார்கள். 


முடிவு:


கட்டாய தமிழ் மொழித் தேர்வு நடைமுறைக்கு உட்படுத்திக் கொள்ள அவகாசம் வேண்டும் என்று கோரியதைத் திரித்து, கட்டாயத் தமிழ் மொழித் தேர்வை ரத்து செய்யக் கோரியதாகத் தவறாகப் பரப்புகிறார்கள். மேலும் ”வாணியம்பாடி நகரம் தென்னாட்டின் அலிகர்” என்று மதவாத கண்ணோட்டத்தில் பரப்புகிறார்கள்.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க