YouTurn

‘மதமாற்ற மாஃபியா’ பெண்களைத் துன்புறுத்தியதாகப் பரப்பப்படும் வள்ளிக்கும்மி வீடியோ!

‘மதமாற்ற மாஃபியா’ பெண்களைத் துன்புறுத்தியதாகப் பரப்பப்படும் வள்ளிக்கும்மி வீடியோ!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

மதமாற்ற மாஃபியா பல பெண்களைத் துன்புறுத்துகிறது. இது பல ஆண்டுகளாக நாடு முழுவதும் நடக்கிறது. இந்த முட்டாள்தனத்தை மக்கள் எவ்வளவு காலம் பொறுத்துக் கொள்ள வேண்டும்?



X link | Archive link

விரிவான விளக்கம்

கிறிஸ்தவத்திற்கு மதமாற்றம் செய்து பல பெண்கள் துன்புறுத்தப்படுவதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது. அதில், சில பெண்கள் சாமி வந்தது போல் ஆடுகின்றனர். அப்படி ஆடுபவர்களை ஆண்களும் பெண்களும் சேர்ந்து அடக்குகின்றனர். இந்தியா முழுவதும் இப்படி மதமாற்ற மாஃபியாவால் பெண்கள் துன்புறுத்தப்படுவதாக அப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 



உண்மை என்ன?

பரவக் கூடிய வீடியோவில் பின்னணியில் ’எட்டுப்பட்டி ராசா’ என்னும் திரைப்படத்தில் இடம்பெற்ற ’மேற்கு சீமையிலே வேக்காட்டு கோவிலில் கதை ஒன்னு நடக்குதம்மா’ என்னும் பாடல் இடம்பெற்று இருப்பதைக் கேட்க முடிகிறது. அது இந்து மத பெண் கடவுளை மையமாகக் கொண்ட பாடல். 

மேலும் அந்த வீடியோவில் ‘DHAYALAN.V1987’ என்கிற பெயர் உள்ளது. அதனைக் கொண்டு இன்ஸ்டாகிராமில் தேடியதில், பரவக் கூடியது போன்ற வேறு சில வீடியோக்கள் அப்பக்கத்தில் இருப்பதைக் காண முடிந்தது. 



Instagram link

அதில் ஒரு வீடியோவில் பரவக் கூடியதில் இருக்கக் கூடிய பெண்கள் உள்ளனர். அப்பதிவில் Valli kummi family… கொங்கு நாடு…’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்பக்கத்தில் பெரும்பாலும் வள்ளிக்கும்மி தொடர்பான வீடியோக்களே உள்ளன. 



வள்ளிக் கும்மியின் போது சாமி வந்தது போல் ஆடியவர்களை அங்கிருந்தவர்களோ அல்லது உறவினர்களோ கட்டுப்படுத்த முயன்றுள்ளனர். அதனைக் கிறிஸ்தவ மதத்துடன் தொடர்புப்படுத்தி தவறாக சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது. 

மேலும் படிக்க : ‘வள்ளிக்கும்மி’ என்ற பெயரில் நடத்தப்படும் சாதி அரசியலும், பின்னணியும் !

முடிவு : 

கிறிஸ்தவ மதமாற்றக் கும்பல் பெண்களைத் துன்புறுத்துவதாகப் பரப்பப்படும் வீடியோ குறித்த தகவல் உண்மை அல்ல. அது வள்ளிக் கும்மி ஆடக்கூடிய பெண்கள் சிலர் சாமி வந்தது போல் ஆடியபோது எடுக்கப்பட்டது. 
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க