யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
வைகை ஆறு, வருச நாடு பகுதியில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரின் கிழக்கு சரிவில் உருவாகி, கிழக்கு மற்றும் தென்கிழக்கு திசைகளில் பாய்ந்து இறுதியாக வங்காள விரி குடாவில் கலக்கிறது
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
வைகை ஆறு குறித்து 50 விநாடிகள் கொண்ட காணொளி ஒன்று வைரலாகி வருகிறது. அதில் எல்லா ஆறுகளும் கடலில் கலக்கும் என்றும், வைகை ஆறு மட்டும் கடலில் கலக்காது நிலப்பரப்பிலேயே முடிந்துவிடும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.
மாபெரும் மகிழ்ச்சிக்குரிய.பெருமைக்குரிய. மதுரை வைகை ஆறு வரலாறு.👌 pic.twitter.com/GHGPaJQpJD
உண்மை என்ன?
பரவி வரும் இந்த தகவலின் உண்மைத் தன்மை குறித்து ஆய்வு செய்தோம். அப்போது National Water Mission இணையதளப்பக்கத்தில் Vaigai Basin என்ற PDF கோப்பு ஒன்று கிடைத்தது. அதில் வைகை ஆற்றுப் படுக்கை சுமார் 7009.13 சதுர கி.மீ பரப்பளவைக் கொண்டுள்ளது என்றும், மலைப்பாங்கான பகுதி 2,101.68 சதுர கி.மீ வரை நீண்டுள்ளது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் நிலப்பரப்பிலேயே முடிந்துவிடாது என்பது தெரியவந்தது.

இது குறித்து மேலும் அதில் தேடிப் பார்த்தோம். அப்போது வைகை ஆறு, வருச நாடு பகுதியில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரின் கிழக்கு சரிவில் உருவாகி, கிழக்கு மற்றும் தென்கிழக்கு திசைகளில் பாய்ந்து இறுதியாக வங்காள விரி குடாவில் கலக்கிறது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

எனவே வைகை ஆறு மட்டும் கடலில் கலக்காமல் நிலத்திலேயே சேர்ந்து விடுவதாகத் தவறான தகவலைப் பரப்பி வருவது தெரியவந்தது.
முடிவு :
நம் தேடலில், “கடலில் சென்று கலக்காத ஒரே ஆறு என்றால் அது வைகை ஆறு தான்” என்று கூறி பரவி வரும் செய்திகள் முற்றிலும் தவறானவை.
