YouTurn

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் ஸ்ரீ ருத்ரம் ஸ்தோத்திரம் வாசிக்கப்பட்டதாகப் பரவும் பொய் !

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் ஸ்ரீ ருத்ரம் ஸ்தோத்திரம் வாசிக்கப்பட்டதாகப் பரவும் பொய் !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

அமெரிக்காவில் உள்ள வெள்ளை மாளிகையில் "ஸ்ரீ ருத்ரம் ஸ்தோத்திரம்" பாராயணம் செய்யப்பட்டது. அமெரிக்கர்கள் இவ்வளவு சுத்தமாக உச்சரிக்க முடியும் என்று கற்பனை செய்து பார்க்க முடியாது. பெரிய பெருமையா? "ஸ்ரீ ருத்ரம் ஸ்தோத்திரம்"ஜெஃப்ரி அர்ஹார்ட் அவர்களால் வெள்ளைமாளிகையில் வாசிக்கப்பட்டது.

விரிவான விளக்கம்

மெரிக்காவின் வெள்ளை மாளிகையில் "ஸ்ரீ ருத்ரம் ஸ்தோத்திரம்" பாராயணம் செய்யப்பட்டதாகக் கூறி 1 நிமிட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. அந்த வீடியோவில் வெளிநாட்டினர் பலரும் கலந்து கொண்டு இருப்பதை பார்க்க முடிகிறது. 



உண்மை என்ன ? 

வைரல் செய்யப்படும் வீடியோவின் கீஃப்ரேம்களை கொண்டு தேடுகையில், 2018ம் ஆண்டு ஏப்ரல் 19ம் தேதி MockingSkills எனும் எக்ஸ்(ட்விட்டர்) பக்கத்தில், குரோஷியாவில் 400க்கும் மேற்பட்ட ஐரோப்பியர்களால் ஸ்ரீ ருத்ரம் சமகம் வாசிக்கப்பட்டது எனப் பதிவிடப்பட்டு உள்ளது. 



X Post link 

மேலும், 2018ல் யூடியூப் சேனல் ஒன்றிலும் ‘Shri Rudram and Chamakam performed by 400+ Europeans’ எனும் தலைப்பில் இதே வீடியோ வெளியாகி இருக்கிறது.



குரோஷியாவில் நடந்த ருத்ரம் சமகம் நிகழ்ச்சி குறித்து தேடுகையில், அனைத்து ஐரோப்பிய வேத மந்திரக் குழுக்களையும் இணைக்கும் vedaunion எனும் இணையதளத்தில் 2018 மார்ச் 3ம் தேதி நடந்த ருத்ரம் 11 நிகழ்ச்சி குறித்தும், நிகழ்ச்சியின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் பதிவாகி இருக்கிறது. 





முடிவு : 

நம் தேடலில், அமெரிக்காவில் உள்ள வெள்ளை மாளிகையில் ஸ்ரீ ருத்ரம் ஸ்தோத்திரம் பாராயணம் செய்யப்பட்டதாகப் பரவும் வீடியோ தவறானது. அந்த வீடியோ கடந்த 2018ல் குரோஷியாவில் நடைபெற்ற ருத்ரம் சமகம் நிகழ்ச்சி என்பதை அறிய முடிகிறது. 

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

தவறானது

'மெரினாவில் வைக்கவிருந்த பேனா சிலை அகற்றப்படும் காட்சி' என்று பரவும் செய்தி! உண்மை என்ன?

கடந்த 2023 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பேனா வடிவிலான “முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தி” பயணம் மேற்கொண…

பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க