YouTurn

UPI பணப்பரிமாற்றம் தோல்வியடைந்தால் 100ரூ அபராதம் யாருக்கு ?

UPI பணப்பரிமாற்றம் தோல்வியடைந்தால் 100ரூ அபராதம் யாருக்கு ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

பரவிய செய்தி

UPI பணப்பரிமாற்றம் தோல்வியடைந்தால் ரூ.100 அபராதம் - ரிசர்வ் வங்கி புதிய அறிவிப்பு



Facebook link | Archive link

விரிவான விளக்கம்

யுபிஐ பணப்பரிமாற்றம் செய்யப்படும் போது தோல்வியடைந்து பணம் செல்லவில்லை என்றால் ரூ.100 அபராதம் என ரிசர்வ் வங்கி அறிவித்ததாக சமூக வலைதளங்களில் ஒர் தகவல் பரவத் தொடங்கியது.





இதனால் யுபிஐ பணப்பரிமாற்றம் பயனர்களுக்கு பாதிப்பு என்பது போன்றும், எளிய மக்களிடம் இருந்தே அரசாங்கம் பணத்தை எடுப்பதாக மீம்ஸ் மற்றும் பதிவுகள் பதிவாகி வருகின்றன. இதன் உண்மைத்தன்மை குறித்து வாசகர்கள் தரப்பிலும் கேட்கப்பட்டு வருகிறது.

உண்மை என்ன ?

2021 ஏப்ரல் -ம் தேதி யுபிஐ பணப்பரிமாற்றம் தோல்வியடைந்தால் ரூ.100 அபராதம் - ரிசர்வ் வங்கி அறிவிப்பு எனும் தலைப்பில் நியூஸ்18 இணையதளத்தில் செய்தி ஒன்று வெளியாகி இருக்கிறது.



அதில், " ரிசர்வ் வங்கியின் விதிமுறைப்படி, ஒரு டிஜிட்டல் பரிவர்த்தனை தோல்வியடைந்துவிட்டால் அடுத்த நாளே அந்தப் பணம் வாடிக்கையாளருக்கு திருப்பிச் செலுத்தப்பட வேண்டும். அதாவது பரிவர்த்தனை செய்த நாளில் இருந்து ஒரே நாளில் பணம் திரும்ப வர வேண்டும். அப்படி வராவிட்டால் சம்பந்தப்பட்ட வங்கி அந்த வாடிக்கையாளருக்கு நாள் ஒன்றுக்கு 100 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். அவ்வாறு பணம் வந்து சேராவிட்டால் அதற்கு புகார் அளிக்கலாம் " என்றேக் கூறப்பட்டுள்ளது.



பணப்பரிமாற்றம் தோல்வி அடைந்து பணம் திரும்ப வரவில்லை என்றால் நாளொன்றுக்கு இழப்பீடாக ரூ.100 வீதம் வழங்க வேண்டும் என்பது தொடர்பான அறிக்கை ஒன்றை 2019 செப்டம்பரில் ரிசர்வ் வங்கி இணையதளத்தில் வெளியாகி இருக்கிறது.

2019-ம் ஆண்டிலேயே ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பில் இழப்பீடு குறித்து இடம்பெற்று இருந்தது என்றாலும், தற்போது நிகழ்ந்த யுபிஐ பணப்பரிமாற்றங்களின் தோல்விகள் குறித்து ட்விட்டரில் எழுந்த கேள்விக்கு இந்திய தேசிய பேமெண்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்தில் இருந்து இழப்பீடு 100ரூ குறித்து பதில் அளித்து இருந்ததாக நியூஸ்18 தமிழ் செய்தி வெளியிட்டு இருக்கிறது. அவற்றின் தலைப்பை வைத்தே தவறாக புரிந்து கொண்டு உள்ளனர்.

முடிவு :

நம் தேடலில், யுபிஐ பணப்பரிமாற்றம் தோல்வியடைந்தால் ரூ.100 அபராதம் என ரிசர்வ் வங்கி புதிய அறிவிப்பை வெளியிட்டது தவறாக புரிந்து கொள்ளப்பட்டு இருக்கிறது. அபராதம் தொகை பயனர்களுக்கு இல்லை, வங்கிகளுக்கு தான்.

யுபிஐ பணப்பரிமாற்றம் தோல்வி அடைந்து ஒரே நாளுக்குள் பணம் மீண்டும் வங்கி கணக்கிற்கு வரவில்லை என்றால் அந்த பயனருக்கு நாளொன்றுக்கு இழப்பீடாக ரூ.100 அளிக்க வேண்டும் என்பதே விதிமுறை என அறிய முடிகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் போலீஸ் தாக்குதலால் மாணவி உயிரிழந்தாரா? பரப்பப்படும் போலியான புகைப்படம்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி இறந்துவிட்டதாக AI தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பிவருகிற…

பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறு…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க