
யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள மருத்துவக் கல்லூரியின் முதல்வர் முஸ்லீம்கள் தீவிரவாதிகள், அவர்களுக்கு பணத்தை வீணாக்க வேண்டாம் என்பதால் முஸ்லீம் கொரோனா நோயாளிகளை விஷம் கொடுத்து கொன்றோம் எனக் கூறியதாக 2 நிமிட வீடியோ வைரலாகிக் கொண்டிருகிறது. Facebook link | archive link அதே தகவல் மீம் வடிவிலும் IRA...
பரவிய செய்தி
Facebook link | archive link
விரிவான விளக்கம்
Facebook link | archive link
அதே தகவல் மீம் வடிவிலும் IRA அநீதிக்கு எதிரான குரல் எனும் முகநூல் பக்கத்திலும் வெளியாகி இருக்கிறது. இந்த வீடியோ மற்றும் மீம் ஆகிய இரண்டிலும் கூறப்பட்டுள்ள தகவலின் உண்மைத்தன்மை குறித்து ஃபாலோயர்கள் தரப்பில் கேட்கப்பட்டு வருகிறது.
உண்மை என்ன ?
உபி-யின் கான்பூரில் உள்ள ஜிஎஸ்விஎம் மருத்துவக் கல்லூரி முதல்வர் ஆர்த்தி லால்சந்தானி முஸ்லீம்களை அவதூறாக பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது. ஆர்த்தி லால்சந்தானி தன் வீட்டில் சில பத்திரிகையாளர்களிடம் சகஜமாக பேசிய பொழுது அதை பத்திரிக்கையாளர் பதிவு செய்து இருக்கிறார்கள். ஆர்த்தி லால்சந்தானியின் வைரல் வீடியோ செய்தி ஊடகங்களிலும் வெளியாகி இருக்கிறது.

இந்தியா டுடே செய்தியில் வைரலான வீடியோவில், " இந்த மக்கள் தீவிரவாதிகள், நாங்கள் அவர்களுக்கு உணவு மற்றும் தண்ணீர் வழங்குவதன் மூலம் விஐபி சிகிச்சை அளிக்கிறோம். நாங்கள் எங்கள் வளங்களையும், ஆற்றலையும் இழக்கிறோம். நாங்கள் ஹோட்டல் பில்களை செலுத்துகிறோம். எங்கள் கருவிகள், உணவு, மருந்துகள் ஆகியவற்றை வீணடிக்கிறோம். எங்கள் கல்லூரியின் முன்னாள் மாணவரான மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஸ் வர்தனிடம் பேச திட்டமிட்டுள்ளேன். சிறையில் தள்ளப்பட வேண்டியவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்கள். தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் வைப்பதற்கு பதிலாக தனிமை சிறையில் அடைக்கப்பட வேண்டும். உத்தரப் பிரதேச முதல்வர் ஜமாதிகளுக்கு சிகிச்சை அளிக்கக் கூடாது என உத்தரவுபிறப்பிக்க வேண்டும். இந்த 30 கோடி மக்களை திருப்திப்படுத்த 100 கோடி மக்களின் பொருளாதாரம் செலவு செய்யப்படுகிறது " என ஆர்த்தி லால்சந்தானி கூறியதாக வெளியாகி இருக்கிறது.
எந்தவொரு செய்தியிலும் முஸ்லீம் கொரோனா நோயாளிகளுக்கு விஷம் வைத்துக் கொன்றதாக ஆர்த்தி லால்சந்தானி கூறினார் என இடம்பெறவில்லை. ஒருவேளை அவர் அப்படி கூறியிருந்தால் செய்தியின் தலைப்பாக அதுவே அமைந்து இருக்கும். வைரல் செய்யப்படும் வீடியோவில் ஹிந்தியில் பேசுவதால் யூடர்ன் குழுவில் ஹிந்தி தெரிந்தவரிடம் அனுப்பி கேட்ட பொழுது, விஷம் தொடர்பாக எதுவும் பேசவில்லை எனக் கூறி இருந்தார்.
ஆர்த்தி லால்சந்தானி பேசிய வீடியோ வைரலான பிறகு பதில் அளித்தவர், அந்த வீடியோ 70 நாட்களுக்கு முன்பு எடுக்கப்பட்டது மற்றும் மார்ஃபிங் செய்யப்பட்டுள்ளது எனக் கூறியதாக செய்திகளில் வெளியாகி இருக்கிறது. தன்னிடம் பணத்தைக் கேட்டு மிரட்டிய பத்திரிக்கையாளர் இப்படி செய்துள்ளார் எனக் குற்றம்சாட்டி இருந்தார். ஆனால், அவர் அதற்கான எந்தவொரு ஆதாரத்தையும் வெளியிடவில்லை.
The principal of Kanpur Medical College Arati Lalchandani allegedly calls Tablighi Jamaat members terrorists, says they should be sent to dungeons, jungles & solitary confinement rather than being treated in isolation wards. She told @the_hindu that she made the comment in anger pic.twitter.com/vfM2tVnTaV
— Omar Rashid (@omar7rashid) May 31, 2020
Twitter link | archive link
தி ஹிந்து நாளிதழைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் ஓமர் ரஷீத் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ஆர்த்தி லால்சந்தானி கோபத்துடன் கருத்து தெரிவித்ததாக தி ஹிந்து நாளிதழுக்கு கூறியதாக இரண்டு வீடியோக்களை வெளியிட்டு இருந்தார்.
முடிவு :
நம்முடைய தேடலில், உத்தரப் பிரதேச மருத்துவக் கல்லூரி முதல்வர் ஆர்த்தி லால்சந்தானி தப்லீக் ஜமாத் கொரோனா நோயாளிகளை தீவிரவாதிகள், அவர்களுக்காக பணத்தை வீணாக்கக்கூடாது எனக் கூறியது உண்மை. முஸ்லீம் மக்கள் மீது அவதூறு பரவியதாக ஆர்த்தி லால்சந்தானி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் , வழக்குகளும் பதியப்பட்டு உள்ளதாக செய்திகளில் வெளியாகி இருக்கிறது.
ஆனால், முஸ்லீம் கொரோனா நோயாளிகளுக்கு விஷம் கொடுத்து கொன்றதாக கூறவில்லை. அதற்கான செய்திகளோ, ஆதாரங்களோ இல்லை. உண்மை செய்திகளை மட்டும் பகிரவும், தவறான செய்திகளை பகிர வேண்டாம்.