YouTurn

உத்தரப் பிரதேச அரசு "ஆரஞ்சு நிற ஹிஜாப்" தயாரிக்கும் பணியைத் தொடங்கியதா ?

உத்தரப் பிரதேச அரசு "ஆரஞ்சு நிற ஹிஜாப்" தயாரிக்கும் பணியைத் தொடங்கியதா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

நையாண்டி

பரவிய செய்தி

இருபக்கத்தினரின் பிரச்சனையைத் தீர்க்க உபி அரசு ஆரஞ்சு ஹிஜாபை தயாரிக்கும் பணியை தொடங்கி இருக்கிறது.

விரிவான விளக்கம்

கர்நாடகா மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகளில் முஸ்லீம் பெண்கள் ஹிஜாப், பர்தா அணிய தடை விதிக்கப்பட்ட விவகாரம் தொடர்ந்து எதிர்ப்பை பெற்று வரும் நிலையில், இருபக்கத்தினரின் பிரச்சனையைத் தீர்க்க உத்தரப் பிரதேச அரசு ஆரஞ்சு நிற ஹிஜாபைத் தயாரிக்கும் பணியைத் தொடங்கி உள்ளதாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.







உண்மை என்ன ?  

உத்தரப் பிரதேச மாநிலத்தில் பல கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. அப்படி இருக்கையில், இப்படியொரு அறிவிப்பு வெளியாக வாய்ப்பில்லை. வைரல் செய்யப்படும் செய்தி குறித்து தேடுகையில், பிப்ரவரி 14-ம் தேதி " The Fauxy " இணையதளம் எனும்" Up Govt. To Start Production Of Orange Hijabs, Says It Solves Issue Of Both Sides " எனும் தலைப்பில் வெளியிட்ட கட்டுரையே சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.



Twitter link| Archive link 

"The Fauxy" ஆனது நையாண்டிக் கட்டுரைகளை வெளியிடும் இணையதளமாகும். அந்த இணையதளத்தின் Disclaimer பிரிவில், " ஃபாக்சி ஒரு பொழுதுபோக்கு தளம். இந்த இணையதளத்தின் உள்ளடக்கம் முழுக்க முழுக்க பொழுதுபோக்கு நோக்கத்திற்காகவே. ஃபாக்சியின் கட்டுரைகளை நேர்மையானவை மற்றும் உண்மையானவை என குழப்பிக் கொள்ள வேண்டாம் என வாசகர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது " எனக் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

முடிவு : 

உபி அரசு ஆரஞ்சு நிற ஹிஜாபை தயாரிக்கும் பணியை தொடங்கி இருக்கிறது எனப் பரவும் தகவல் தவறானது. தி ஃபாக்சி எனும் இணையதளம் வெளியிட்ட நையாண்டிக் கட்டுரையை உண்மையென என நினைத்து தவறாகப் பரப்பப்பட்டு வருகிறது என அறிய முடிகிறது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் போலீஸ் தாக்குதலால் மாணவி உயிரிழந்தாரா? பரப்பப்படும் போலியான புகைப்படம்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி இறந்துவிட்டதாக AI தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பிவருகிற…

பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறு…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க