YouTurn

இவர் உபி முதல்வர் யோகியின் டீக்கடை நடத்தும் மூத்த சகோதரரா ?

இவர் உபி முதல்வர் யோகியின் டீக்கடை நடத்தும் மூத்த சகோதரரா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

உபி முதல்வரின் மூத்த சகோதரர் இன்னும் விளக்கமில்லாத தேநீர் கடையில் இருந்து குறைந்த வருமானத்தில் பிழைத்து வருகிறார்.



Facebook link 

விரிவான விளக்கம்

உத்தரப் பிரதேச மாநிலத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத் உடைய மூத்த சகோதரர் தேநீர் கடையை நடந்தி குறைந்த வருமானத்திலும் பிழைத்து வருவதாகக் கூறி காவி துண்டு உடன் கடை முன்பு நிற்கும் ஒருவரின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.



Archive link 



உண்மை என்ன ?

வைரல் செய்யப்படும் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், வைரல் செய்யப்படும் பதிவுகளே கிடைத்தன. புகைப்படத்தில் இருப்பவர் யார் என்கிற விவரங்கள் கிடைக்கவில்லை.

ஆகையால், உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் உடைய குடும்பம் பற்றி தேடுகையில், " 2017-ம் ஆண்டில் ABP News சேனல் யோகி ஆதித்யநாத் குடும்பத்தை பேட்டி எடுத்த வீடியோ கிடைத்தது.



யோகி ஆதித்யநாத்திற்கு மாவேந்த்ர மோகன் என்ற மூத்த சகோதரரும், ஷைலேந்திர மற்றும் மகேந்திர மோகன் என இரு இளைய சகோதரர்களும் உள்ளனர். இதில், இந்திய ராணுவத்தில் சுபைதாராக பணியாற்றும் சைலேந்திர மோகன் இந்திய-சீனா கட்டுப்பாட்டு பகுதியில் பணியமர்த்தப்பட்டதாக 2017-ல் செய்திகள் வெளியாகியது.

மாவேந்த்ர மோகன் என்ற மூத்த சகோதரர் மற்றும் மகேந்திர மோகன் என்ற இளைய சகோதரரையும் வீடியோவில் காணலாம். இருவருமே வைரல் செய்யப்படும் புகைப்படத்தில் உள்ளவரை போன்று இல்லை.



இதற்கு முன்பாக 2019-ல் டீக்கடை நடத்தும் யோகி ஆதித்யநாத் சகோதரர் என வேறொரு புகைப்படம் இந்தியில் வைரலாகிய போது, " யோகியின் சகோதரர்களில் யாருமே டீக்கடை நடத்தவில்லை என்றும், அவருக்கு 3 சகோதரர்கள் மற்றும் 3 சகோதரிகள் உள்ளனர் " என யோகி ஆதித்யநாத் சகோதரியின் கணவர் இந்தியா டுடேவிற்கு பதில் அளித்து இருக்கிறார்.

முடிவு : 

நம் தேடலில், உத்தரப் பிரதேசத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் மூத்த சகோதரர் தேநீர் கடை நடத்தி பிழைத்து வருவதாக பரப்பப்படும் புகைப்படத்தில் இருப்பவர் யோகி ஆதித்யநாத் உடைய சகோதரர் அல்ல, அவரது சகோதரர்களில் யாரும் டீக்கடை நடத்தவில்லை என்பதையும் என அறிய முடிகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் போலீஸ் தாக்குதலால் மாணவி உயிரிழந்தாரா? பரப்பப்படும் போலியான புகைப்படம்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி இறந்துவிட்டதாக AI தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பிவருகிற…

பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறு…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க