YouTurn

உ.பி-யில் எரிக்கப்பட்ட பெண் பாஜக எம்எல்ஏவால் வன்புணர்வு செய்யப்பட்டவரா ?

உ.பி-யில் எரிக்கப்பட்ட பெண் பாஜக எம்எல்ஏவால் வன்புணர்வு செய்யப்பட்டவரா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள உன்னாவ் மாவட்டத்தில் இளம்பெண் எரிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி இறந்த சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளது. அவ்வாறு தீயிட்டு எரிக்கப்பட்ட பெண் உன்னாவ் மாவட்டத்தின் பாஜக எம்எல்ஏ குல்தீப் செங்காரால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட பெண் என முகநூல், ட்விட்டர்...

பரவிய செய்தி

உத்தரப் பிரதேசத்தில் பாஜக எம்எல்ஏ குல்தீப் செங்காரால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட இளம்பெண்ணை நடுத்தெருவில் தீயிட்டு கொளுத்தியுள்ளார். அவர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார்.



Facebook link

விரிவான விளக்கம்

உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள உன்னாவ் மாவட்டத்தில் இளம்பெண் எரிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி இறந்த சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளது. அவ்வாறு தீயிட்டு எரிக்கப்பட்ட பெண் உன்னாவ் மாவட்டத்தின் பாஜக எம்எல்ஏ குல்தீப் செங்காரால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட பெண் என முகநூல், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.



மேலும், மாலை முரசு செய்திலும் " பாஜக எம்எல்ஏவால் பலாத்காரம் செய்யப்பட்ட இளம்பெண்ணை நடுத்தெருவில் தீ வைத்துக் கொளுத்திய கயவர்கள் " என்ற தலைப்பில் நடந்த சம்பவத்தை செய்தியாக வெளியிட்டு உள்ளனர். இதன் உண்மைத்தன்மை குறித்து கூறுமாறு ஃபாலோயர்கள் தரப்பிலும் கேட்கப்பட்டு வருகிறது.

உன்னாவ் மாவட்டத்தில் பாஜக எம்எல்ஏவால் இளம்பெண் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டது மற்றும் இளம்பெண் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவங்கள் உண்மையே. ஆனால், இரண்டும் வெவ்வேறு சம்பவங்கள். இரண்டும் உன்னாவ் மாவட்டத்தில் நிகழ்ந்தவை என்பதால் ஒரே பெண் என நினைத்து பதிவிட்டு வருகின்றனர்.

உன்னாவ் சம்பவம் 1 : 

உன்னாவ் மாவட்டத்தைச் சேர்ந்த 23 வயதான இளம்பெண் ஒருவர் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக இரண்டு பேர் மீது கடந்த மார்ச் மாதம்(2019) புகார் அளித்து இருந்தார். இது தொடர்பான வழக்கின் விசாரணைக்காக நீதிமன்றம் செல்லும் வழியில் ஐந்து பேர் அப்பெண்ணை தூக்கிச் சென்று பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர். 90 சதவீத உடல் எரிந்த நிலையில் அப்பெண்ணுக்கு டெல்லி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், இறுதியாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் முக்கிய குற்றவாளியாக கூறப்படும் நபர் அப்பெண்ணுடன் முன்பே நண்பராக இருந்தவர் என பிபிசி கட்டுரையில் வெளியாகி இருக்கிறது. இறந்த பெண்ணின் குடும்பத்தினர் உயிருடன் உள்ளனர். இறந்த பெண்ணின் தந்தை, குற்றவாளிகளை தூக்கிலிடுங்கள் அல்லது சுட்டுக் கொல்லுமாறு கோரிக்கை வைத்ததாக தி ஹிந்து செய்தியில் வெளியாகி இருக்கிறது.



உன்னாவ் சம்பவம் 2 : 

உன்னாவ் மாவட்டத்தின் பாஜக எம்எல்ஏ குல்தீப் செங்கார் மற்றும் கூட்டாளிகள் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக ஏப்ரல் 2017-ல் புகார் அளித்தார். இதையடுத்து, 2018 ஏப்ரல் 8-ம் தேதி அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் வீட்டிற்கு முன்பாக பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரின் தயார் தீக்குளிக்க முயன்றனர்.

விரிவாக படிக்க : பாஜக எம்எல்ஏ மீதான உன்னாவ் பெண் பாலியல் வன்புணர்வு வழக்கு | தொடரும் மரணங்கள் !

விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை போலீஸ் காவலில் இருக்கும் பொழுதே இறந்தார். விசாரணைக்காக எம்எல்ஏ செங்கார் கைது செய்யப்பட்டு இருந்தார். ஏப்ரல் 2019-ல் ரே பரேலியில் உள்ள மாவட்ட சிறையில் இருந்த உறவினரை பார்க்க பாதிக்கப்பட்ட பெண், வழக்கறிஞர் மற்றும் உறவினர் பெண்கள் சென்ற கார் லாரியால் விபத்துக்குள்ளாக்கியது. அதில், பாதிக்கப்பட்ட பெண் மற்றும் வழக்கறிஞர் படுகாயம் அடைந்தனர், உறவினர் பெண்கள் சம்பவ இடத்தில் இறந்து விட்டனர்.



பாதிக்கப்பட்ட பெண் சம்பவம் தொடர்பாக குல்தீப் செங்கார் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. சில மாதங்களுக்கு முன்பாகவே, குல்தீப் சிங் செங்கார் மற்றும் அவரது கூட்டாளி சாக்சி சிங் ஆகியோரை திகார் சிறைக்கு மாற்ற டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டதாக செய்திகளில் வெளியாகி இருக்கிறது .

முடிவு : 

உ.பி-யின் உன்னாவ் மாவட்டத்தில் இளம்பெண் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தையும், பாஜக எம்எல்ஏவால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்ணையும் ஒரே பெண் என தவறாக நினைத்துள்ளனர். இரண்டும் வெவ்வேறு பெண்கள், வெவ்வேறு சம்பவங்கள். தவறான தகவல்களை பகிர வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம்.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

’ஜனநாயகன்’ திரைப்படத்துடன் தொடர்புபடுத்தி தவறாக பரப்பப்படும் பழைய வீடியோக்கள்!

2023ஆம் ஆண்டு ‘மாவீரன்’ திரைப்படம் பார்க்க வந்த சங்கீதாவின் பழைய வீடியோவையும், 2018ஆம் ஆண்டு அவரது உறவினர் தீக்குளித்தது பற்றிய செய்தியாளர் சந்திப்பில் வைகோ அழ…

பொய்

CJP-ன் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்கள் பாகிஸ்தானியர்களா?

CJP-யின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்களில் 94.7% பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். அதனைத் தொடர்ந்து அமெரிக்கா 1%, ஐக்கிய இராச்சியம் (UK) 0.…

பொய்

டெல்லி மாணவர்கள் போராட்டத்தை ஆதரிப்பாக ‘வங்கதேச ஜமாஅத்-இ-இஸ்லாமி’ கட்சி அறிக்கை வெளியிட்டதா?

‘வங்கதேச ஜமாத்-இ-இஸ்லாமி’ பெயரில் பரப்பப்படும் இந்த அறிக்கை போலியாக உருவாக்கப்பட்டது என்று அக்கட்சி அதிகாரப்பூர்வமாக விளக்கமளித்துள்ளது.