YouTurn

ஒன்றிய அரசானது வரிகளுடன் பெட்ரோலை ரூ.52க்கு தருவதாக பாலிமர் வெளியிட்ட தவறான செய்தி !

ஒன்றிய அரசானது வரிகளுடன் பெட்ரோலை ரூ.52க்கு தருவதாக பாலிமர் வெளியிட்ட தவறான செய்தி !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

மத்திய அரசிடம் 52 ரூபாய்க்கு பெட்ரோல் விலைக்கு வாங்கி 100 ரூபாய்க்கு விற்கும் மாநில அரசு. ஆதாரத்துடன் போட்டுடைத்த பாலிமர் டிவி



Facebook link

விரிவான விளக்கம்

பாலிமர் சேனலில் வெளியான பெட்ரோல் விலை உயர்வு தொடர்பான செய்தியின் 20 நொடிகள் கொண்ட வீடியோவில், " சனிக்கிழமை நிலவரப்படி பல்வேறு வரிகளுடன் மத்திய அரசு 52.75ரூபாயை ஒரு லிட்டர் பெட்ரோலுக்கான விலையாக நிர்ணயித்து உள்ளது. மாநில அரசின் வரிகளுடன் ஒரு லிட்டர் பெட்ரோல் 99.82 ரூபாய்க்கு வாகன ஓட்டிகளுக்கு விற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது " எனக் கூறப்பட்டுள்ளது. இந்த வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் ஆயிரக்கணக்கில் பகிரப்பட்டு வருகிறது.

[video width="256" height="144" mp4="https://d2y0rn4f1ve9hm.cloudfront.net/2021/07/WhatsApp-Video-2021-07-05-at-7.56.29-PM.mp4"][/video]



வைரல் செய்யப்படும் பாலிமர் செய்தியின் வீடியோ குறித்து தேடுகையில், ஜூலை 4-ம் தேதி பாலிமர் சேனலில் " பெட்ரோல் ரூ 100.. வாஜ்பாய் இருந்தால் என்ன செய்திருப்பார்? " எனும் தலைப்பில் வெளியான செய்தியில் வைரல் செய்யப்படும் பகுதி இடம்பெற்று இருக்கிறது.



Youtube link | Archive link 

உண்மை என்ன ?

பெட்ரோல், டீசல் விற்பனை விலையில் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் வரிகளே பாதிக்கும் அதிகமாக இருப்பதை சமீப காலங்களில் மக்கள் அறிந்து வருகிறார்கள். எந்த அரசு எவ்வளவு வரி விதிக்கிறது என நாம் தொடர்ந்து கட்டுரைகளின் வாயிலாக தெரிவித்து வருகிறோம்.

மேலும் படிக்க : தமிழ்நாடு அரசு பெட்ரோல் வாட் வரியை உயர்த்தியதா ? ஒரு லிட்டருக்கு 40ரூபாய் வரி விதிக்கிறதா ?

சில தினங்களுக்கு முன்பாக கூட, ஒன்றிய அரசு 59 ரூபாய்க்கு கொடுக்கும் ஒரு லிட்டர் பெட்ரோலை மாநில அரசு 40 ரூபாய் வரியுடன் விற்பனை செய்வதாக பரவிய தகவல் தவறானது என நாம் கட்டுரை வெளியிட்டு இருந்தோம். ஆனால், தற்போது அந்த விலையை விட குறைவான விலையை பாலிமர் செய்தியில் கூறப்பட்டுள்ளது.



இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் உடைய அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 2021 ஜூலை 1-ம் தேதிப்படி டெல்லியில் பெட்ரோல் விலை 98.81ரூபாய் ஆக உள்ளது. இதில், பெட்ரோலின் அடிப்படை விலை, கலால் வரி, டீலர் கமிஷன் என ஒரு லிட்டருக்கு 76.01 ரூபாயாகவே மாநில அரசிடம் வருகிறது என்பதை தெளிவாய் அறிய முடிகிறது.

டீலர் கமிஷனுக்கு முன்பாகவே அடிப்படை விலை மற்றும் ஒன்றிய அரசின் கலால் வரியை மட்டும் பார்த்தால் கூட 72ரூபாயைத் தாண்டுகிறது. ஆனால், மாநில அரசிற்கு 52.75ரூபாய்க்கு ஒரு லிட்டர் பெட்ரோல் அளிக்கப்படுவதாக தவறான செய்தியை பாலிமர் செய்தி வெளியிட்டு இருக்கிறது.



ஒரு லிட்டர் பெட்ரோல் மீது தமிழ்நாடு அரசு 15%+13ரூ வாட் வரி விதிக்கிறது, டீசல் மீது ஒரு லிட்டருக்கு 11% + 9.62ரூ வாட் வரி விதிக்கிறது. பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் ஒவ்வொரு மாநிலங்களின் வாட் வரியில் மட்டுமே வித்தியாசம் இருக்கும்.

முடிவு :

நம் தேடலில், பல்வேறு வரிகளுடன் ஒன்றிய அரசு 52.75ரூபாய் என ஒரு லிட்டர் பெட்ரோலுக்கான விலையாக நிர்ணயித்து மாநில அரசிற்கு வழங்குவதாக பாலிமர் வெளியிட்ட தகவல் தவறானது என அறிய முடிகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் போலீஸ் தாக்குதலால் மாணவி உயிரிழந்தாரா? பரப்பப்படும் போலியான புகைப்படம்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி இறந்துவிட்டதாக AI தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பிவருகிற…

பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறு…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க