
யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி

Facebook link | Archive link
விரிவான விளக்கம்
உண்மை என்ன ?
சமீபத்தில் கொரோனாவால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு ரூ.10 லட்சம் வைப்பு நிதியாக வழங்கப்படும். அந்த வைப்பு நிதியில் இருந்து மாதந்தோறும் ஊக்கத் தொகை அளிக்கப்பட்டு 23வது வயதில் முதிர்வு தொகை அளிக்கப்படும் என பிரதமர் அலுவலகம் தரப்பில் செய்தி அறிக்கை வெளியானது. இதேபோல், தமிழக அரசும் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு 5 லட்சம் வைப்பு நிதி வழங்கப்படும் என அறிவித்தது.
ஆனால், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.4 லட்சம் SDRF கீழ் நிதி அளிப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் இல்லை. இப்படி பரவும் தகவலை அரசின் அதிகாரப்பூர்வ PIB ட்விட்டர் பக்கத்தில் வைரலாகும் படிவத்துடன் பரவும் தகவல் வதந்தி எனக் கூறப்பட்டுள்ளது.
Claim: Under a provision of the State Disaster Response Fund (SDRF), families of those who died due to #COVID19 are entitled to a compensation of ₹ 4 Lakh.#PIBFactCheck: This claim is #Fake. No such provision exists under the approved items and norms of expenditure for #SDRF. pic.twitter.com/ztZ8yUJpPu
— PIB Fact Check (@PIBFactCheck) May 29, 2021
Twitter link
ஒரு பதிவில், வைரல் செய்யப்படும் படிவத்துடன் SDRF பற்றியும், இழப்பீடு நிதி வழங்குவது தொடர்பான சுற்றறிக்கை போன்ற பக்கமும் இணைக்கப்பட்டு இருந்தது.

அது குறித்து தேடுகையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் குடும்பங்களுக்கு 4 லட்சம் இழப்பீடு வழங்குவதாக அறிவித்த உள்துறை அமைச்சகம் சில மணி நேரங்களில் அதை நீக்கி விட்டு புதிய அறிக்கையை வெளியிட்டதாக 2020 மார்ச் மாதம் தி பிரிண்ட், பிசினஸ் லைன் உள்ளிட்ட செய்திகளில் வெளியாகி இருக்கிறது.
Attached is a modification of the order quoted in the tweet below, for kind information.#COVID2019 #COVID19India https://t.co/uNSiKOZTs4 pic.twitter.com/r6ePtc2AHs
— Spokesperson, Ministry of Home Affairs (@PIBHomeAffairs) March 14, 2020
Twitter link
முடிவு :
நம் தேடலில், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இந்திய ஒன்றிய அரசு SDRF கீழ் 4 லட்சம் நிதி அளிப்பதாக வைரல் செய்யப்படும் தகவல் தவறானது. ஒன்றிய அரசு தரப்பில் அப்படி எந்தவொரு நிதியும் அளிக்கப்படவில்லை என அறிய முடிகிறது.