YouTurn

உக்ரைன் மாணவி தன்னை வீட்டில் இறக்கி விடவில்லை என அரசைக் குறைக்கூறியதாக வதந்தி !

உக்ரைன் மாணவி தன்னை வீட்டில் இறக்கி விடவில்லை என அரசைக் குறைக்கூறியதாக வதந்தி !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

இந்திய தூதரகம் என்னை மும்பை விமான நிலையத்தில் இறக்கி விட்டது, அங்கு எந்த உதவியும் எனக்கு கிடைக்கவில்லை. அங்கு 3௦ நிமிடங்களுக்கு மேலாக காத்திருந்தேன், ஆனால் இந்திய தூதரகத்தில் இருந்து யாரும் வரவில்லை . நான் இந்திய தூதரகத்திற்கு போன் செய்தேன் யாரும் எடுக்கவில்லை. அதன் பின் கார் புக் செய்து வீட்டிற்கு சென்றேன். அதற்கு 234ரூ செலவாகியது - மாணவி



Twitter link | Archive link 

விரிவான விளக்கம்

உக்ரைன் மற்றும் அதன் அண்டை நாடுகளில் சிக்கியுள்ள பல்லாயிரக்கணக்கான இந்திய மாணவர்களை மீட்கும் பணி தாமதமாக இருப்பதாக இந்திய அரசின் மீது குற்றச்சாட்டுகள் எழுந்து கொண்டே இருக்கிறது.

இந்நிலையில், உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட மாணவி மும்பைக்கு வந்த பிறகு அரசு தன்னை வீட்டில் கொண்டு போய் விடவில்லை என இந்திய தூதரகத்தை குறைச் சொல்வதாக மீம் ஒன்று சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.

உண்மை என்ன ?



வைரல் செய்யப்படும் மீம் பதிவில் உள்ள மாணவியின் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், " உக்ரைன் நாட்டில் 3-ம் ஆண்டு மருத்துவம் படிக்கும் கர்நாடகாவைச் சேர்ந்த மாணவி ஞானஸ்ரீ சிங் 3 நாட்களாக ஓர் இடத்தில் பதுங்கி இருப்பதாகவும், அங்கிருந்து உதவி வேண்டி பேசிய வீடியோ பிப்ரவரி 28-ம் தேதி நியூஸ் 1 கன்னடா உள்ளிட்ட செய்திகளில் வெளியாகி இருக்கிறது.



உக்ரைனில் படிக்கும் ஞானஸ்ரீ சிங் கர்நாடகாவின் மைசூரைச் சேர்ந்தவர். அவர் எப்படி மும்பை விமான நிலையத்தில் இருந்து 234ரூபாயில் வீட்டிற்கு காரில் சென்று இருக்க முடியும். அவர் இந்தியா திரும்பியதாகவோ அல்லது இப்படியொரு கருத்தை தெரிவித்ததாகவோ எந்த தகவலும் இல்லை.

உக்ரைனில் இருந்து ஞானஸ்ரீ சிங் உதவி கேட்டு பேசிய வீடியோ வெளியான செய்திகளில் இருந்து அவரின் புகைப்படத்தை எடுத்து போலியான கருத்துடன் மீம் ஒன்றை உருவாக்கி உக்ரைனில் இருந்து வரும் மாணவர்களை தவறாக சித்தரிக்க முயன்றுள்ளனர்.

முடிவு : 

நம் தேடலில் , இந்திய தூதரகம் என்னை மும்பை விமான நிலையத்தில் இறக்கி விட்டது, அங்கு எந்த உதவியும் எனக்கு கிடைக்கவில்லை. அதன் பின் 234ரூபாய் செலவு செய்து கார் புக் செய்து வீட்டிற்கு சென்றேன என மாணவி கூறியதாகப் பரவும் தகவல் வதந்தியே என அறிய முடிகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் போலீஸ் தாக்குதலால் மாணவி உயிரிழந்தாரா? பரப்பப்படும் போலியான புகைப்படம்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி இறந்துவிட்டதாக AI தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பிவருகிற…

பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறு…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க