YouTurn

ரஷ்ய ராணுவ வீரரை உக்ரைன் சிறுமி விரட்டுவதாக தவறாக பரவும் பழைய வீடியோ !

ரஷ்ய ராணுவ வீரரை உக்ரைன் சிறுமி விரட்டுவதாக தவறாக பரவும் பழைய வீடியோ !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

உக்ரையின் சிறுமி ரஷ்ய இராணுவ வீரரை விரட்டும் காட்சி. இதுதான் உண்மையான நாட்டுப்பற்று.



Facebook link 

விரிவான விளக்கம்

உக்ரைன் நாட்டில் ரஷ்யாவின் ராணுவப் படையினர் நுழைந்து தாக்குதல் நடத்தி வருகையில், அந்நாட்டைச் சேர்ந்த சிறுமி ரஷ்ய ராணுவ வீரருக்கு எதிராக குரல் எழுப்பி விரட்டுவதாக சமூக வலைதளங்களில் இவ்வீடியோ பரவி வருகிறது.





உண்மை என்ன ?

வைரல் செய்யப்படும் வீடியோ குறித்து தேடுகையில், பாலஸ்தீன பெண் குழந்தை அஹெத் தமிமி என் சகோதரன் எங்கே எனக் கேட்டு இஸ்ரேலிய ராணுவ வீரரை பார்த்து கேள்வி எழுப்புவதாக இவ்வீடியோ 2012-ல் யூடியூப் சேனல் ஒன்றில் பதிவாகி இருக்கிறது.



மேற்கொண்டு தேடுகையில், 2018-ல் பிபிசியில் அஹெத் தமிமி தொடர்பாக பிரத்யேக கட்டுரையே வெளியாகி இருக்கிறது தன்னுடைய 11 வயதில் அஹெத் தமிமி இஸ்ரேலிய ராணுவ வீரரை தாக்க கை ஓங்கியதாக இதே காட்சி புகைப்படமாக இடம்பெற்று இருக்கிறது.



2018-ல் இஸ்ரேலிய ராணுவ வீரரை அறைந்ததைப் படம் பிடித்த பாலஸ்தீன இளம்பெண் 17 வயதான அஹெத் தமிமி மீது பாதுகாப்புப் படையினரைத் தாக்கியது மற்றும் வன்முறையத் தூண்டியது உட்பட 12 குற்றங்கள் சுமத்தப்பட்டது. அவரை விடுதலை செய்யக்கோரி போராட்டங்களும் நிகழ்ந்து இருக்கிறது.

முடிவு :

நம் தேடலில், உக்ரையின் சிறுமி ரஷ்ய இராணுவ வீரரை விரட்டும் காட்சி எனப் பரவும் வீடியோ உக்ரைனைச் சேர்ந்தது அல்ல , 2012-ல் பாலஸ்தீன சிறுமி இஸ்ரேலிய ராணுவ வீரரைப் பார்த்து கேள்வி எழுப்பிய வீடியோ என அறிய முடிகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் போலீஸ் தாக்குதலால் மாணவி உயிரிழந்தாரா? பரப்பப்படும் போலியான புகைப்படம்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி இறந்துவிட்டதாக AI தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பிவருகிற…

பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறு…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க