YouTurn

உஜ்ஜைனியில் பாகிஸ்தான் கோசம் எழுப்பியதாக குற்றம்சாட்டப்பட்டவர்களின் வீடுகள் இடிக்கப்பட்டதா ?

உஜ்ஜைனியில் பாகிஸ்தான் கோசம் எழுப்பியதாக குற்றம்சாட்டப்பட்டவர்களின் வீடுகள் இடிக்கப்பட்டதா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

பாகிஸ்தான் ஜிந்தாபாத் இந்துஸ்தான் முர்தாபாத் என்ற கோஷங்களை எழுப்பியவர்களின் வீடுகளை இடித்து தள்ளிய சிவராஜ் சவுகான் பாகிஸ்தானுக்கு செல்லுங்கள் என்றார்.

விரிவான விளக்கம்

மத்தியப் பிரதேச மாநிலத்தின் உஜ்ஜைன் பகுதியில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் கோசங்களை எழுப்பியவர்கள் சட்டவிரோதமாக கட்டிய வீடுகளை சிவராஜ் சவுகான் அரசு இடித்து தள்ளி உள்ளதாக போலீஸ் பாதுகாப்புடன் கட்டிடங்கள், தகர கூடார கடைகள் அகற்றும் 2 நிமிட வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.





Twitter link | Archive link 

உண்மை என்ன ?

உஜ்ஜைனியில் பாகிஸ்தான் கோசங்களை எழுப்பியவர்களின் வீடுகள் இடிக்கப்பட்டதா எனத் தேடுகையில், உஜ்ஜைனியில் சட்டவிரோதமாக ஆக்கிரமித்து கட்டப்பட்ட 200-க்கும் மேற்பட்ட கடைகளை அகற்றியதாக ஆகஸ்ட் 27-ம் தேதி ஜி ஹிந்தி இணையதளத்தில் செய்தி வெளியாகி இருக்கிறது.



செய்தியின்படி, " உஜ்ஜைனி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், புகழ்பெற்ற மகாகல் கோவிலை 10 மடங்கு விரிவாக்கும் பணிகள் நடந்து வருகிறது. மகாகல் விரிவாக்க பகுதியில் வரும் அனைத்து சட்டவிரோத வீடுகள் மற்றும் கடைகளை இடிக்க உயர்நீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்து உள்ளது. ஆக்கிரமிப்பு பகுதியில் குடியேறியவர்களுக்கு முதலில் தகவல் தெரிவிக்க வேண்டும் மற்றும் வீட்டை காலி செய்ய 45 நாட்கள் அவகாசம் அளிக்க வேண்டும் என கூறி இருந்தது " எனக் கூறப்பட்டுள்ளது.

ஆனால், வைரல் செய்யப்படும் வீடியோ எந்த செய்தியிலும் வெளியாகவில்லை. ஆகையால், வைரல் வீடியோவில் இடம்பெற்ற ஹோட்டல் ப்ரெசிடென்ட் என்பதை வைத்து தேடுகையில், உஜ்ஜைனியின் இந்தூர் சாலையில் நியூ ஹரிபாதக் ஓவர் பிரிட்ஜ் பகுதியில் அமைந்து உள்ளதாகக் காண்பித்தது.



மொஹரம் விழாவில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் கோசங்களை எழுப்பியதாக குற்றம்சாட்டப்பட்ட பகுதி உஜ்ஜைனியின் கீதா காலனியில் இருந்து 2.5கி.மீ தொலைவில் ஆக்கிரமிப்புகள் இடிக்கப்படும் இப்பகுதி அமைந்துள்ளது.

மேலும் படிக்க : உஜ்ஜைனியில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் கோசமிட்டவர்களுக்கு எதிராகக் கூடிய இந்துக்களின் கூட்டமா ?

இதற்கு முன்பாக, உஜ்ஜைனியில் மொஹரம் விழாவில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் கோசம் எழுப்பியவர்களுக்கு எதிராக இந்துக்கள் பள்ளிவாசல் முன்பு கூடியதாக பழைய வீடியோ ஒன்றை எடிட் செய்து வைரல் செய்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முடிவு :

நம் தேடலில், உஜ்ஜைனியில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் கோசம் எழுப்பியவர்கள் சட்டவிரோதமாக கட்டிய வீடுகளை மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சவுகான் அரசு இடித்து அகற்றியதாக பரப்பப்படும் வீடியோ தவறானது.

உஜ்ஜைனியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெற உள்ள பணிக்காக ஆக்கிரமித்து கட்டப்பட்ட 200-க்கும் மேற்பட்ட கடைகள், வீடுகளை நீதிமன்ற உத்தரவின் பேரில் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்ட பணியின் போது எடுக்கப்பட்ட வீடியோ தவறான தகவல் உடன் பரப்பப்பட்டு வருகிறது என அறிய முடிகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் போலீஸ் தாக்குதலால் மாணவி உயிரிழந்தாரா? பரப்பப்படும் போலியான புகைப்படம்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி இறந்துவிட்டதாக AI தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பிவருகிற…

பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறு…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க