YouTurn

நல்ல நேரம் பார்த்து உதயநிதி கையெழுத்திட்டதாகத் தினமலர் வெளியிட்ட பொய் செய்தி !

நல்ல நேரம் பார்த்து உதயநிதி கையெழுத்திட்டதாகத் தினமலர் வெளியிட்ட பொய் செய்தி !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

நேரம் பார்த்து கோப்பில் கையெழுத்திட்ட உதயநிதி 



Twitter link | twitter archive link | News archive link

விரிவான விளக்கம்

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினரும் திமுகவின் இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் டிசம்பர் 14ம் தேதி அமைச்சராகப் பதவியேற்க உள்ளதாக 2022, டிசம்பர் 12ம் தேதி ஆளுநர் மாளிகை செய்தி அறிக்கை வெளியிட்டது.

இதனைத் தொடர்ந்து கடந்த 14ம் தேதி உதயநிதி ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். அவருக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அளிக்கப்பட்டுள்ளது.

https://twitter.com/KathirNews/status/1602966900178571270

Archive link | News archive link 

https://twitter.com/amgeminigirl/status/1602953056311988224

Archive link

அவர் அமைச்சராகப் பதவியேற்று முதல் கோப்பில் நேரம் பார்த்துக் கையெழுத்திட்டதாகத் 'தினமலர்' நியூஸ் கார்ட் ஒன்றினை டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதேபோல் “நல்ல நேரம் பார்த்து முதல் கோப்பில் கையெழுத்திட்ட உதயநிதி” என்ற தலைப்பில் தினமலர் மற்றும் 'கதிர் நியூஸ்' இணையதளமும் செய்தி வெளியிட்டுள்ளது.

https://twitter.com/ashok777_kalam/status/1603421457802936320

Archive link 

https://twitter.com/avaraipaul/status/1603288954106572802

Archive link 

தினமலரின் நியூஸ் கார்டினை பாஜக மற்றும் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த பலரும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு  வருகின்றனர். 

உண்மை என்ன ? 

உதயநிதி ஸ்டாலின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராகப் பதவியேற்று முதல் கையெழுத்திட்ட வீடியோ குறித்து இணையத்தில் தேடினோம். கலைஞர் செய்திகள் யூடியூப் பக்கத்தில் Minister Udhayanidhi Stalin கையெழுத்துப் போட்ட திட்டம் என்ன? | First Sign | Exclusive | Youth Welfare” என்ற தலைப்பில் 2022, டிசம்பர் 14ம் தேதி வீடியோ பதிவிடப்பட்டுள்ளது.



சுமார் 6 நிமிடம் கொண்ட அந்த வீடியோவில் 1 நிமிடம் 35வது வினாடியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் கையெழுத்து இடுவதற்காகக் கோப்புகள் அளிக்கப்படுகிறது. நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தனது பேனாவை உதயநிதியிடம் அளிக்கிறார்.  

அதனைத் தொடர்ந்து உதயநிதி கோப்பில் கையெழுத்து இடுகிறார். அந்த கையெழுத்தினை சுட்டிக்காட்டி கே.என்.நேரு உதயநிதியிடம் ஏதோ சொல்கிறார். பிறகு உதயநிதி தனது கை கடிகாரத்தினை பார்த்து கோப்பில் தேதியினை குறிப்பிடுகிறார். அதற்கு அடுத்து அளிக்கப்படக் கோப்பில் கையெழுத்து மற்றும் தேதி இடுவதைக் காண முடிகிறது.



மேலும், இது குறித்துத் தேடியதில், Mobile Journalist என்ற யூடியூப் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ள வீடியோவின் 19 வினாடியிலும் இதனை உறுதிசெய்ய முடிகிறது. 

முடிவு : 

நம் தேடலில், உதயநிதி ஸ்டாலின் அமைச்சராகப் பதவியேற்று நல்ல நேரம் பார்த்து முதல் கையெழுத்து இட்டதாகத் தினமலர் வெளியிட்டிருக்கும் செய்தி உண்மை அல்ல. கையெழுத்திட்ட பிறகு தேதியைக் குறிப்பிடவே தனது கை கடிகாரத்தைப் பார்த்துள்ளார் என்பதை அறிய முடிகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தூய்மை பணியாளர்களுக்கு ஓய்வு அறை ஏற்படுத்தி கொடுத்துள்ள முதலமைச்சர் விஜய் என்று பொய் செய்தி பரப்பும் தவெகவினர்!

சென்னையில் தூய்மைப் பணியாளர்களுக்கு 300 சதுர அடியில் கழிப்பறை வசதியுடன் ஓய்வு அறைகள் அமைக்கப்படும் என்று முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் நவம்பர் 15, 2025 அன்ற…

தவறானது

கர்நாடகாவில் கல்லூரி மாணவர்களில் 7000 பேருக்கு HIV தொற்று ஏற்பட்டுள்ளதா? தமிழ் ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

கர்நாடகாவில் தற்போது 7000 மாணவர்கள் HIV வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுவது திரிக்கப்பட்ட தவறான செய்தி என்று கர்நாடக AIDS தடுப்பு அமைப்பு விளக்…

தவறானது

தனது பாஸ்போர்ட் முடக்கப்பட்டதால் போலீஸ் காலில் விழுந்து கெஞ்சினாரா CJP தலைவர் அபிஜீத் தீப்கே?

ஜந்தர் மந்தரில் உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்களுக்கு கூடாரங்கள் அமைக்க அனுமதிக்குமாறு டெல்லி போலீஸ் காலில் விழுந்து அபிஜீத் தீப்கே கெஞ்சிய போது எடுக்கப்பட்ட வீட…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க