YouTurn

சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் இரண்டு ரயில்கள் ஒரே நடைமேடையில் நிறுத்தப்பட்டதா?

சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் இரண்டு ரயில்கள் ஒரே நடைமேடையில் நிறுத்தப்பட்டதா?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

சரிபார்க்கப்பட்ட கூற்று

சென்னை சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் இரண்டு ரயில்கள் ஒரே நடைமேடையில் நிற்பதற்கு எழும்பூர் ரயில் நிலை​யத்​தில் மேற்​கொள்​ளப்​படும் மறுசீரமைப்பு பணி​யே காரணம். இதன் உண்மைத் தன்மை அறியாமல் தவறான தகவலை திரித்துப் பரப்பி வருகின்றனர்.

பரவிய செய்தி

திமுக ஆட்சியில் பாருங்க சென்னை  சேத்துப்பட்டு ரெண்டு ரயிலும் ஒரே தாண்டவத்துல விடுறாங்க. அந்த அளவுக்கு இருக்கு இந்த அரசு. யார் செத்துப்போன நமக்கு என்ன நம்ப கொள்ளை அடிச்சு தமிழ்நாட்டை நாசம் ஆக்கணும். 



X Link | Archive Link 

விரிவான விளக்கம்

"சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் ஒரே நடைமேடையில் இரண்டு மின்சார ரயில்கள் எதிர் எதிரே நிற்கிறது. இந்த அளவுக்கு இந்த திமுக அரசு இருக்கிறது" என்று கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. வீடியோவில் இரண்டு ரயில்கள் ஒரே நடைமேடையில் நிறுத்தப்பட்டிருக்கும் காட்சியை ஒருவர் வீடியோ எடுப்பது போன்றும் உள்ளது. 



உண்மை என்ன? 


பரவி வரும் செய்திகள் குறித்து இந்திய ரயில்வேயின் அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கங்களில் ஆய்வு செய்து பார்த்தோம். 


அதன்படி, “சென்னை எழும்​பூர் ரயில் நிலை​யத்​தில் மேற்​கொள்​ளப்​படும் மறுசீரமைப்பு பணி​கள் காரண​மாக, நடைமேடை 10 மற்றும் 11-ல் இருந்து இயக்கப்​படும் புறநகர் மின்​சார ரயில்​கள் பிப்ரவரி  20-ம் தேதி நள்​ளிரவு முதல் ஏப்​. 5-ம் தேதி நள்​ளிரவு வரை நடைமேடை 5 மற்​றும் 6-ல் இருந்து இயக்​கப்​படும் எனவும், சென்னை கடற்​கரை​யில் இருந்து தாம்​பரம் மற்​றும் செங்கல்பட்டுக்கு இயக்​கப்​படும் புறநகர் மின்​சார விரைவு ரயில்​கள் 6-வது நடைமேடை​யிலும், செங்​கல்​பட்​டு, தாம்​பரத்​தில் இருந்து கடற்கரை வரை இயக்​கப்​படும் மின்​சார ரயில்​கள் 5-வது நடைமேடை​யிலும் இயக்​கப்​படும். இந்த 45 நாட்​களி​லும் தற்​காலிக அட்​ட​வணைப்​படி மட்டுமே மின்​சார ரயில்​கள் இயக்​கப்​படும்” எனவும்  தெற்கு ரயில்வே (சென்னை கோட்டம்) அறிவித்துள்ளது. 


#FFF
; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);">; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank">
#F4F4F4
; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;">
#F4F4F4
; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;">
#F4F4F4
; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;">
#3897f0
; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram
#F4F4F4
; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);">
#F4F4F4
; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;">
#F4F4F4
; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);">
#F4F4F4
; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;">
#f4f4f4
; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)">
#F4F4F4
; border-right: 8px solid transparent; transform: translateY(16px);">
#F4F4F4
; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);">
#F4F4F4
; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);">
#F4F4F4
; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;">
#F4F4F4
; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;">

#c9c8cd

; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;">#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Southern Railway (@southernrailway_sr)


மேலும் இது குறித்து பல்வேறு ஊடகங்களில் "சென்னை எழும்பூர் ரயில் நிலையப் பணிகள் காரணமாக மேலும் 49 புறநகர் ரயில் சேவைகள் இன்றுமுதல் ரத்து செய்யப்பட்டுள்ளன" என்று குறிப்பிட்டு செய்தியாக வெளியிடப்பட்டுள்ளதையும் காண முடிகிறது. 



மேலும் இந்திய ரயில்வே துறை ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் இரண்டு மின்சார ரயில்கள் ஒரே நடைமேடையில் நிறுத்தப்பட்டதற்கு தமிழ்நாடு அரசு தான் காரணம் என்றும் கூறி தவறாகப் பரப்பி வருகின்றனர்.


முடிவு: 


நம் தேடலில்,  சென்னை சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் இரண்டு ரயில்கள் ஒரே நடைமேடையில் நிற்பதற்கான காரணம் எழும்பூர் ரயில் நிலை​யத்​தில் மேற்​கொள்​ளப்​படும் மறுசீரமைப்பு பணி​யே என்ற உண்மைத் தன்மை அறியாமல் தவறான தகவலை பலரும் திரித்துப் பரப்பி வருகின்றனர். 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க