YouTurn

மிஷ்கின் மகள் எனப் பரவும் நிகழ்ச்சி தொகுப்பாளர் புகைப்படம்!

மிஷ்கின் மகள் எனப் பரவும் நிகழ்ச்சி தொகுப்பாளர் புகைப்படம்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

மிஷ்கினின் மகள் என சமூக வலைத்தளத்தில் பரவும் புகைப்படம் குறித்த தகவல் உண்மை அல்ல. அவர் நிகழ்ச்சி தொகுப்பாளர் சுபா ராஜேந்திரன்.

பரவிய செய்தி

என் மனைவிக்கு எனுக்கு பாலமாக என் மகள் தான் இருக்கறாள், என் மகளிடம் நான் என் மனைவியை கைவிட்டது போல் நீ உன் அம்மாவை கைவிட்டு விடாதே என்று சொல்லி தான் வளர்த்தேன் - இயக்குனர் மிஷ்கின்


mysskin daughter

Facebook link

விரிவான விளக்கம்

இயக்குநர் மிஷ்கின் தனது மனைவி மற்றும் மகளைப் பிரிந்து வாழ்கிறார். இதுபற்றி பல நேர்காணல்களில் அவர் குறிப்பிடுவதுண்டு. 



இந்நிலையில் மிஷ்கின் தன் மகளிடம் ’நான் என் மனைவியை கை விட்டது போல் நீ உன் அம்மாவை கைவிட்டு விடாதே’ எனக் கூறியதாக ‘5 Min Tamil Cinema’ என்ற பேஸ்புக் பக்கத்தில் நியூஸ் கார்டு ஒன்று பதிவிடப்பட்டுள்ளது. அதில் மிஷ்மின் ஆரஞ்சு நிற புடவை கட்டிய பெண்ணுடன் இருக்கும் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. அவர்தான் மிஷ்கினின் மகள் எனப் பொருள்படும்படி அந்த நியூஸ் கார்டு அமைந்துள்ளது.


உண்மை என்ன?


பரவக்கூடிய நியூஸ் கார்டில் உள்ள புகைப்படத்தைக் Google Reverse Image Search மூலம் தேடினோம். இந்த படத்தை ’சுபா ராஜேந்திரன்’ என்ற நிகழ்ச்சி தொகுப்பாளர் கடந்த ஜனவரி 15ஆம் தேதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ‘pongal2024 with sir’ என்று குறிப்பிட்டுள்ளார். 


https://www.instagram.com/p/C2HrDDTtn9d/


இந்த புகைப்படம் பதிவிட்டபோதே ‘Times Of India’ உட்படப் பல ஊடகங்கள் இவர்தான் மிஷ்கினின் மகளா எனச் செய்திகளை வெளியிட்டுள்ளனர். ஆனால், அப்படி வெளியிடப்பட்ட செய்திகளில் அவர் மகளா இல்லையா? என்பது குறித்து தெளிவான விளக்கம் இல்லை.


mysskin daughter


எனவே இதுதொடர்பாக யூடர்னில் இருந்து சுபாவை தொடர்புகொண்டு பேசினோம். ’சினிமா நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கும்போது மிஷ்கின் சாரை தெரியும். இந்த புகைப்படம் கடந்த ஜனவரி மாதம் ஒரு நிகழ்ச்சியில் எடுக்கப்பட்டது. நான் அவரின் மகள் அல்ல’ எனக் கூறினார். 



மேற்கொண்டு பரவக்கூடிய நியூஸ் கார்டில் உள்ள தகவல் குறித்துத் தேடினோம். 2017ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ’புதுயுகம்’ தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் மிஷ்கின் இதே கருத்தைப் பேசியுள்ளார். இந்தக் கருத்தை நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஒருவர் மிஷ்கினுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்துடன் தொடர்புப்படுத்தி, இவர்தான் மிஷ்கினின் மகள் எனத் தவறான தகவலைப் பரப்புகின்றனர். 


முடிவு: 


இவர்தான் மிஷ்கினின் மகள் எனப் பரவும் புகைப்படம் குறித்த தகவல் தவறானது. இந்த படத்தில் இருப்பவர் நிகழ்ச்சி தொகுப்பாளர் சுபா ராஜேந்திரன். 'தான் மிஷ்கினின் மகள் இல்லை' என அவரே விளக்கம் அளித்துள்ளார்.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க