YouTurn

ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் இராணுவத்தினரை கொல்லும் காட்சி எனப் பழைய ஐஎஸ்ஐஎஸ் வீடியோவைப் பகிர்ந்த இந்து மக்கள் கட்சி !

ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் இராணுவத்தினரை கொல்லும் காட்சி எனப் பழைய ஐஎஸ்ஐஎஸ் வீடியோவைப் பகிர்ந்த இந்து மக்கள் கட்சி !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

இதனால் தான் ஹமாசை ஐடிஎப் முடிக்க வேண்டும். கிராஃபிக் எச்சரிக்கை: நம் முன்னோர்கள் என்ன செய்திருப்பார்கள் என்று கற்பனை செய்து பாருங்கள். நீங்கள் இன்னும் இந்துவாக இருந்தால் பெருமை கொள்ளுங்கள் ஏனெனில் இவற்றையெல்லாம் மீறியும் நம் முன்னோர்கள் மதம் மாறவில்லை.

Twitter Link | Archive Link

விரிவான விளக்கம்

மனித நேயமற்ற முறையில் நடந்து வரும் இஸ்ரேல்-பாலஸ்தீனப் போரில் இதுவரை இஸ்ரேல் தரப்பிலிருந்து சுமார் 1300க்கு மேற்பட்ட மக்களும், பாலஸ்தீன தரப்பிலிருந்து சுமார் 2300க்கு மேற்பட்ட மக்களும் கொல்லப்பட்டதாக செய்திகளில் வெளியாகி வருகிறது. இந்நிலையில் 'ஹமாஸ் அமைப்பினர் அழிக்கப்படவேண்டும்' என்று கூறி ராணுவ வீரர்கள் இருவர் உயிருடன் எரிக்கப்படுவதைப் போன்ற வீடியோ ஒன்றை இந்து மக்கள் கட்சியினர் உட்பட வலதுசாரிகள் பலரும் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரப்பி வருகின்றனர். 



Archive Link:



Archive Link

உண்மை என்ன ?

பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், இது தொடர்பாக foxnews ஊடகம் கடந்த 2016 டிசம்பர் 23 அன்று "துருக்கிய வீரர்கள் உயிருடன் எரிக்கப்படும் கொடூரமான ISIS வீடியோ காட்சிகள்" என்ற தலைப்புடன் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் "பிடிபட்ட இரண்டு துருக்கி ராணுவ வீரர்கள் உயிருடன் எரிக்கப்படுவது போன்ற கொடூரமான வீடியோவை ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத குழு (ISIS) வெளியிட்டுள்ளது." என்று உள்ளது.



இதே போன்று, alarabiya.net வெளியிட்டுள்ள கட்டுரையிலும், "19 நிமிட காட்சிகளைக் கொண்ட இந்த வீடியோ வடக்கு சிரியாவில் உள்ள ஐஎஸ்ஐஎஸ் அறிவித்துள்ள "அலெப்போ மாகாணத்தில்" படமாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த வீடியோவில் உள்ளவர் துருக்கியில் பேசுகையில், "இரண்டு பேருடைய நாட்டைச் சேர்ந்த துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகனை வாய்மொழியாக தாக்குவதையும், அழிவு விதைக்கப்பட வேண்டும்" என்று அழைப்பு விடுப்பதையும் காண முடிந்தது." என்று இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 



மேலும் படிக்க: ‘இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்’: இந்தியாவில் வலதுசாரிகள் பரப்பிய வதந்திகளின் தொகுப்பு !

இதுவரை இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர் குறித்து, இந்து மக்கள் கட்சியினர் பரப்பியது போன்றே பல்வேறு வலதுசாரிகள் பரப்பிய பொய் செய்திகளையும் தொகுத்து நம் பக்கத்தில் ஒரே கட்டுரையாக வெளியிட்டிருக்கிறோம்.

முடிவு:

நம் தேடலில், ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் இராணுவத்தினரை கொல்லும் காட்சி என இந்து மக்கள் கட்சியினர் உள்ளிட்டோர் சமூக ஊடகங்களில் பரப்பிவரும் வீடியோ, 2016ன் போது ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினரால் எடுக்கப்பட்ட பழைய வீடியோ என்பதை அறிய முடிகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

தவறானது

'மெரினாவில் வைக்கவிருந்த பேனா சிலை அகற்றப்படும் காட்சி' என்று பரவும் செய்தி! உண்மை என்ன?

கடந்த 2023 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பேனா வடிவிலான “முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தி” பயணம் மேற்கொண…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க