
யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் ஊரடங்கு நிலை கடைபிடிக்கும் நேரத்தில் திருப்தி தேசாய் திருட்டுத்தனமாக மது பாட்டில்களை வாங்கிச் செல்லும் பொழுது போலீசார் கைது செய்து உள்ளதாக கீழ்காணும் வீடியோ வைரல் செய்யப்பட்டு வருகிறது. Facebook link | archive link உண்மை என்ன ? 1.37 நிமிடம் கொண்ட வைரலாகும் வீடியோவில்...
பரவிய செய்தி
சபரிமலை புகழ் கம்யூனிஸ்ட் ஏஜென்ட் திருப்த்தி தேசாய் ஊரடங்கு வேளையில் திடுட்டுத்தனமாக மது பாட்டில்கள் வாங்கும்போது பிடிபட்டாள்!

Facebook link | archive link
விரிவான விளக்கம்
Facebook link | archive link
உண்மை என்ன ?
1.37 நிமிடம் கொண்ட வைரலாகும் வீடியோவில், ஓர் கடைக்குள் இருந்து போலீசாரால் அழைத்து வரப்படும் திருப்தி தேசாய் மற்றும் மற்ற பெண்களிடம் இருந்து மது பாட்டில்களை வாங்கிக் கொண்டு அவர்களை வாகனத்தில் ஏற்றி அழைத்து செல்லும் காட்சி பதிவாகி இருக்கிறது. மேலும், வீடியோவின் குவாலிட்டியும் மிகக் குறைவாக இருக்கிறது.

வீடியோவில் திருப்தி தேசாய் கையில் இருக்கும் பாட்டில் மாலை காலி பாட்டில்களாக உள்ளன. ஊரடங்கு நிலை கடைபிடிக்கும் பொழுது பிடிக்கப்பட்டதாக கூறுகிறார்கள், ஆனால் காவலர்கள் யாரும் மாஸ்க் அணிந்து இல்லை. வீடியோவில் வாகனங்கள் தாராளமாக செல்வத்தையும் காண முடிந்தது. ஆகையால், இவ்வீடியோ சமீபத்தில் எடுக்கப்பட்டது அல்ல என்பதை அறிய முடிந்தது.

Youtube link | archive link
திருப்தி தேசாய் போலீசாரால் கைது செய்யப்பட்டாரா என தேடுகையில், 2019 செப்டம்பர் 16-ம் தேதி " Tirupati Desai would welcome the CM with liquor bottles. Pune police take over " என மராத்தி மொழியில்(மொழிமாற்றம் செய்து) வெளியான வீடியோ கிடைத்தது.
#TruptiDesai was detained by Sahakarnagar police around noon after she was attempting to garland the CM @Dev_Fadnavis on his visit in Pune appealing alcohol free state. pic.twitter.com/uaDkGLlkLQ
— Pune Mirror (@ThePuneMirror) September 14, 2019
Twitter link | archived link
2019 செப்டம்பர் 14-ம் தேதி புனே மிரர் உடைய ட்விட்டர் பக்கத்தில், " மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பாட்னாவீஸ் புனேவிற்கு வருகை தந்த பொழுது அம்மாநிலத்தை மது இல்லாத மாநிலமாக அறிவிக்க போராட்டம் செய்த திருப்தி தேசாய் சஹாக்கர்நகர் காவல்துறையால் கைது செய்யப்பட்டு உள்ளார் " என வீடியோ உடன் வெளியாகி இருக்கிறது.
நம் தேடலில் இருந்து, 2019 புனேவில் மது பாட்டில்கள் உடன் மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வர் வருகையின் போது போராட்டம் நடத்த முயன்ற திருப்தி தேசாய் கைது செய்யப்பட்ட வீடியோவே தற்போது தவறான தகவலுடன் வைரல் செய்யப்பட்டு வருகிறது.