YouTurn

பாஜக ஆளும் மாநிலத்தில் போடப்பட்ட சாலையை தமிழ்நாடு எனப் பரப்பும் தமிழக பாஜகவினர் !

பாஜக ஆளும் மாநிலத்தில் போடப்பட்ட சாலையை தமிழ்நாடு எனப் பரப்பும் தமிழக பாஜகவினர் !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

ரோடு போட்டோம்ங்கற பேருல மக்களோட வரி பணத்தை எப்படி எல்லாம் கொள்ளை அடிக்கறாங்க. திராவிட மாடல்.



Archive link 

விரிவான விளக்கம்

கிராமப்புற பகுதியில் சாலை அமைக்கும் போது மரங்களை அகற்றாமல் அல்லது அதை சுற்றி சாலை அமைக்காமல் மரங்களோடு சேர்த்து சாலை அமைக்கப்பட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இது தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் போடப்பட்ட சாலை என தமிழக பாஜக உடைய இளைஞரணி அமைப்பின் செயற்குழு உறுப்பினர் பானு மோகன் ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார். மேலும், பாஜக ஆதரவாளர்கள் பலரும் இப்படத்தை தமிழ்நாட்டைக் குறிப்பிட்டு பரப்பி வருகிறார்கள்.





Archive link 

உண்மை என்ன ? 

தமிழ்நாட்டில் போடப்பட்ட சாலை எனப் பரப்பப்படும் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், சில நாட்களுக்கு முன்பாக Punjabi University Patiala Confessions எனும் முகநூல் பக்கத்தில் இப்புகைப்படம் பதிவிடப்பட்டு இருக்கிறது. 



Facebook link 

இப்புகைப்படம் பஞ்சாப் மாநிலத்தில் எடுக்கப்பட்டதாகவும், ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சியைக் கேலி செய்யும் விதத்திலும் பல்வேறு பதிவுகள் வெளியாகி இருந்ததை நம்மால் பார்க்க முடிந்தது.

ஆகையால், மேற்கொண்டு தேடுகையில், " 2018 டிசம்பரில் ஜாக்ரன், நியூஸ் 18 இந்தி செய்தி இணையதளத்தில் வெளியான செய்தியில் இதே புகைப்படம் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.



செய்தியின்படி, " ஹரியானா மாநிலத்தின் ஃபதேகாபாத் மாவட்டத்தில் ஷேகுபூர் தாதுளி மற்றும் பனவாளி கிராமங்களுக்கு இடையே பொதுப்பணித்துறையால் போடப்பட்ட சாலையானது பல மரங்களை அகற்றாமல் போடப்பட்டதால் சர்ச்சையாகி இருக்கிறது.

சாலை நடுவே மரங்கள் இருப்பதால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும் என புகைப்படங்கள் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது. இதையடுத்து, இச்சம்பவம் பொதுப்பணித்துறையினரின் கவனத்திற்கு சென்றது.



இந்த சாலை அமைப்பதற்கு முன்பாக மரங்களை அகற்றுவது தொடர்பாக வனத்துறைக்கு கடிதம் கொடுக்கப்பட்டு இருந்தது. ஆனால், அதற்கான அனுமதி கிடைக்கும் முன்பாகவே உதவிப் பொறியாளர் மற்றும் ஒப்பந்தாரர் சாலையை அமைத்துள்ளனர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என செயற் பொறியாளர் தெரிவித்து இருந்ததாக " செய்திகளில் வெளியாகி இருக்கிறது.









2018 டிசம்பரில் இச்சம்பவம் குறித்து ஹரியானாவைச் சேர்ந்த பஞ்சாப்கேசரி எனும் இணையதளத்திலும் புகைப்படங்கள் உடன் செய்தி வெளியாகி இருக்கிறது.


ஹரியானாவில் பாஜகவின் ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த 2014ம் ஆண்டில் இருந்து அம்மாநிலத்தின் முதல்வராக மனோகர் லால் கத்தார் இருந்து வருகிறார்.

மேலும் படிக்க : தமிழ்நாடு மது இறக்குமதி வாகனம் அவசரம்.. பழைய ஃபோட்டோஷாப் படத்தை பரப்பும் பாஜக நிர்மல் குமார்!

மேலும் படிக்க :  தங்கை மகளுடன் இருக்கும் ராகுலின் படத்தை தவறாகப் பரப்பிய பாஜகவினர்.. பதிவை நீக்கிய நிர்மல் குமார் !

மேலும் படிக்க : திமுக ஆட்சியில் ஆவின் பொருட்களில் ஹலால் சான்றிதழ் கொண்டு வந்ததாக வதந்தி பரப்பும் பாஜகவினர்

கடந்த சில நாட்களாக, பாஜகவைச் சேர்ந்தவர்கள் பல்வேறு வதந்திகளை பரப்பி உள்ளனர். அதுகுறித்து நாம் பல கட்டுரைகளை வெளியிட்டு இருக்கிறோம்.


முடிவு : 

நம் தேடலில், மரங்களை அகற்றாமல் போடப்பட்ட சாலையானது தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் போடப்பட்ட சாலை என தமிழக பாஜகவினர் பரப்பும் தகவல் வதந்தியே. இந்த சாலை பாஜக ஆளும் ஹரியானாவில் 2018ல் போடப்பட்டது என அறிய முடிகிறது.








ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

கர்நாடகாவில் கல்லூரி மாணவர்களில் 7000 பேருக்கு HIV தொற்று ஏற்பட்டுள்ளதா? தமிழ் ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

கர்நாடகாவில் தற்போது 7000 மாணவர்கள் HIV வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுவது திரிக்கப்பட்ட தவறான செய்தி என்று கர்நாடக AIDS தடுப்பு அமைப்பு விளக்…

தவறானது

தனது பாஸ்போர்ட் முடக்கப்பட்டதால் போலீஸ் காலில் விழுந்து கெஞ்சினாரா CJP தலைவர் அபிஜீத் தீப்கே?

ஜந்தர் மந்தரில் உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்களுக்கு கூடாரங்கள் அமைக்க அனுமதிக்குமாறு டெல்லி போலீஸ் காலில் விழுந்து அபிஜீத் தீப்கே கெஞ்சிய போது எடுக்கப்பட்ட வீட…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் போலீஸ் தாக்குதலால் மாணவி உயிரிழந்தாரா? பரப்பப்படும் போலியான புகைப்படம்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி இறந்துவிட்டதாக AI தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பிவருகிற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க