YouTurn

ஜப்பானைச் சேர்ந்த டோகோ என்பவர் நாயாக மாறினார் எனத் தவறாகச் செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

ஜப்பானைச் சேர்ந்த டோகோ என்பவர் நாயாக மாறினார் எனத் தவறாகச் செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

பரவிய செய்தி

ஜப்பானை சேர்ந்த 'டோகோ' என்ற நபர் சிலமாதங்களுக்கு முன் 12 லட்சம் செலவு செய்து நாயாக மாறினார் தற்போது 'பாண்டா' அல்லது  'நரி' ஆக மாற விரும்புவதாக தெரிவித்துள்ளார்.


X link

விரிவான விளக்கம்

ஜப்பானைச் சேர்ந்த டோகோ என்பவர் ரூ.12 லட்சம் செலவு செய்து தன்னை நாயாக மாற்றிக்கொண்டார் எனத் தந்தி டிவி நியூஸ் கார்டு ஒன்றை வெளியிட்டுள்ளது. 



 










View this post on Instagram























 

A post shared by Thanthi TV (@thanthitv)






உண்மை என்ன?

ஒரு மனிதன் எப்படி நாய் மாதிரியான தோற்றத்தில் முழுமையாக மாற முடியும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இது குறித்த முக்கிய வார்த்தைகளைக் கொண்டு கூகுளில் தேடினோம். ‘Euro News’ என்ற தளத்தில் டோகோ குறித்து 2023 ஆகஸ்ட் மாதம் ஒரு கட்டுரை வெளியாகியுள்ளது. 



அதில், விலங்காக மாற வேண்டும் என்கிற தனது சிறு வயது ஆசையை டோகோ ஒரு ஆடையின் மூலம் நிறைவேற்றிக் கொண்டார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 



மேலும் டோகோ ‘I want to be an animal’ என்கிற பெயரில் ஒரு யூடியூப் சேனலும் வைத்திருப்பதாக அக்கட்டுரையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதில் உள்ள thumbnail பலவற்றில் 'Human' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

டோகோ ‘Rough Collie’ என்ற நாய் இனம் மாதிரியான உடை அணிந்துள்ளார். நாய்கள் சாதாரணமாக நடப்பது, ஓடுவது போன்ற செயல்களில் இருந்து டோகோவின் வீடியோக்களில் உள்ள காட்சிகள் வித்தியாசப்பட்டு இருப்பதையும் கவனிக்க முடிகிறது. 



மேற்கொண்டு டோகோவின் எக்ஸ் பக்கத்தை ஆய்வு செய்ததில், ஜப்பான் மொழியில் செயல்படக்கூடிய ‘Magazine Cainz’ என்ற தளத்தில் அவரை குறித்து சமீபத்தில் வெளியாகி இருந்த கட்டுரையைப் பகிர்ந்திருப்பதைக் காண முடிந்தது.



அக்கட்டுரையை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துப் படித்ததில், இந்த உடை தயாரிக்க சுமார் 2 மில்லியன் யென் செலவானதாகக் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி பாண்டா, நரி, பூனை போன்ற விலங்குகளாக மாறவும் தனக்கு ஆசை இருப்பதாக டோகோ தெரிவித்துள்ளார். 

இவற்றில் இருந்து தன்னை நாயாகக் காண்பித்துக் கொள்ள விரும்பிய ஒருவர் நாய் போன்று ஆடை அணிந்து அவரது ஆசையை நிறைவேற்றிக் கொண்டுள்ளார் என்பதை அறிய முடிகிறது. ஆனால், ஒருவர் அறுவை சிகிச்சைகள் மூலம் முழுமையாக நாயாக மாறியது போல் தவறாகப் புரிந்துகொள்ளும்படி தந்தி டிவி நியூஸ் கார்டு வெளியிட்டுள்ளது.



மனிதர்கள் அறுவை சிகிச்சை, tattoo மூலமாகப் புலி, பூனை, சிறுத்தை  மாதிரியான விலங்குகளைப் போல் தங்களது உடலை மாற்றிக் கொள்வது  உண்டு. ஆனால், ஜப்பானைச் சேர்ந்த டோகோ அவ்வாறு செய்யவில்லை. 

முடிவு: 

ஜப்பானைச் சேர்ந்த டோகோ என்பவர் நாயாக மாறியதாகத் தந்தி டிவி வெளியிட்ட தகவல் தவறானது. விலங்காக மாற வேண்டும் என்கிற தனது சிறு வயது ஆசையை நிறைவேற்றிக்கொள்ளும் வகையில் நாய் மாதிரியான உடையைத்தான் அவர் அணிந்துள்ளார். 
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

தவறானது

'மெரினாவில் வைக்கவிருந்த பேனா சிலை அகற்றப்படும் காட்சி' என்று பரவும் செய்தி! உண்மை என்ன?

கடந்த 2023 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பேனா வடிவிலான “முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தி” பயணம் மேற்கொண…

பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க