
யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி

Facebook link
விரிவான விளக்கம்

கோவில்களில் இருந்து பிராமணர்களை வெளியேற்றுவதாக கோவில் குருக்கள் பேசும் வீடியோ வைரலாகுவதாக ஏசியாநெட் தமிழ் இணையதளம் செய்தி வெளியிட்டு இருந்தது.
உண்மை என்ன ?
வைரல் செய்யப்படும் Bushindia ட்விட்டர் பக்கத்தில் வெளியான ட்வீட் பதிவு குறித்து தேடுகையில், அப்பதிவுகள் நீக்கப்பட்டு இருப்பதை அறிய முடிந்தது. பாஜக உறுப்பினரான அவருடைய ட்விட்டர் பக்கத்தில், " பாதிக்கப்பட்ட குருக்கள்கள் சிவாச்சாரியர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அதன் விசாரணை ஆகஸ்டு 18 விசாரணைக்கு எடுக்கப்படுவதால் அர்ச்சகர்கள் சம்மந்தமான எனது பதிவுகளை நீக்கிவிட்டேன் " எனப் பதிவிட்டு இருக்கிறார்.

Twitter link | Archive link
இதே Bushindia ட்விட்டர் பக்கத்தில் வெளியான மற்றொரு ட்வீட் பதிவில் இடம்பெற்ற புகைப்படம் குறித்து கவிதா முரளிதரன் என்பவர், " இந்த டுவீட்டில் உள்ள புகைப்படம் 3 வருடங்களுக்கு முன்பு வெளியான என் கட்டுரையில் இடம் பெற்றிருந்தது. அர்ச்சகர் பயிற்சி பெற விரும்பிய மாணவர்களுக்கு ஆகம விதிகளை சொல்லி தர முன் வந்ததால் சனாதனவாதிகளால் தாக்குதலுக்கு உள்ளான முதியவர் அவர் " எனப் பதிவிட்டு இருக்கிறார்.
இந்த டுவீட்டில் உள்ள புகைப்படம் 3 வருடங்களுக்கு முன்பு வெளியான என் கட்டுரையில் இடம் பெற்றிருந்தது. அர்ச்சகர் பயிற்சி பெற விரும்பிய மாணவர்களுக்கு ஆகம விதிகளை சொல்லி தர முன் வந்ததால் சனாதனவாதிகளால் தாக்குதலுக்கு உள்ளான முதியவர் அவர்.https://t.co/MhUcPXeiBO pic.twitter.com/8MXmgKo6us
— Kavitha Muralidharan (@kavithamurali) August 16, 2021
Twitter link | Archive link
பதிவுகளில் இடம்பெற்ற புகைப்படங்கள் பழைய மற்றும் சம்பந்தமில்லாத புகைப்படங்கள் என்பதால் உடனே அதை நீக்கி இருக்கிறார். மேலும், பதிவை நீக்கியது குறித்து மற்றொரு விளக்கம் அளித்து இருக்கிறார்.
மலைக்கோட்டை கோவில்களில் பழைய அர்ச்சகர்கள் வெளியேற்றப்பட்டார்களா என தெரிந்து கொள்ள திருச்சி மலைக்கோட்டை அருள்மிகு தாயுமானசுவாமி திருக்கோவிலின் இந்து சமய அறநிலையத்துறையின் உதவி ஆணையரை தொடர்பு கொண்டு பேசுகையில், " மலைக்கோட்டை பகுதியில் அப்படி எந்த சம்பவமும் நிகழவில்லை. காலியாக இருந்த பணியிடங்களிலேயே அவர்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். போலீஸ் உதவியுடன் அர்ச்சகர்களை வெளியேற்றியதாக கூறும் தகவல் தவறானது " எனத் தெரிவித்து இருந்தார்.
#JUSTIN | "அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டம் மூலம் காலிப்பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்படுகிறது; யாரையும் பணியில் இருந்து நீக்கிவிட்டு நியமனங்கள் மேற்கொள்ளப்படுவது இல்லை”
- திமுக எம்.பி கனிமொழிhttps://t.co/WciCN2AH8n | #DMK | @KanimozhiDMK | #PriestOfAllCaste
— News7 Tamil (@news7tamil) August 16, 2021
Twitter link | Archive link
இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தவே திமுக எம்.பிகனிமொழி, " அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டம் மூலம் காலிப்பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்படுகிறது; யாரையும் பணியில் இருந்து நீக்கிவிட்டு நியமனங்கள் மேற்கொள்ளப்படுவது இல்லை” எனக் கூறியுள்ளார்.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, " பழைய அர்ச்சகர்கள் வெளியேற்றப்பட மாட்டார்கள் " என செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்து இருக்கிறார்.
முடிவு :
நம் தேடலில், தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் பணியாற்றி வரும் பழைய அர்ச்சகர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றி விட்டு தமிழ்நாடு அரசு நியமித்த 58 அர்ச்சகர்களை பணியமர்த்தியதாக பரவும் தகவல் தவறானது. புதிய அர்ச்சகர்கள் காலி இடங்களில் நிரப்பப்பட்டு உள்ளதாகவும், பழைய அர்ச்சகர்கள் வெளியேற்றப்பட மாட்டார்கள் என தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பதையும் அறிய முடிகிறது.
கூடுதல் தகவல் :
சமூக வலைதளங்களில் பரவிய தகவல் தொடர்பாக அமைச்சர் சேகர் பாபு செய்தியாளர்களுக்குஅளித்த பேட்டியில் " இந்து சமய அறநிலைத்துறையைப் பொறுத்தவரை, பட்டாச்சார்யார்களையோ, அர்ச்சகர்களையோ திருக்கோவிலில் இருந்து வெளியேற்றும் எண்ணம் இல்லை. புதிதாக பணியமர்த்தப்பட்ட இடங்களில் கூட ஏற்கனவே வயது மூப்பினால் அர்ச்சகராக பணியாற்றி கொண்டிப்பருப்பவர்களும் தொடர்ந்து பணியாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. புதிதாக 58 அர்ச்சகர்கள் நியமிக்கப்பட்டதால் எங்காவது, யாராவது அவருடைய பணி அல்லது வாய்ப்பு நிறுத்தப்பட்டு இருந்தால் உடனடியாக எங்களின் கவனத்திற்கு கொண்டு வாருங்கள் அவர்களுக்கு உடனடியாக மாற்று பணி அளிக்கப்படும் .
நாகநாத சுவாமி கோவில் விவகாரத்தில், அக்கோவிலில் ஒரு அர்ச்சகர் பணியிடம் காலியாக இருந்துள்ளது. இந்த கோவிலில் முத்துகுமார் என்பவர் 2021 ஜூன் 30-ம் தேதி முதல் தற்காலிகப் பணியில் அர்ச்சகராகப் பணியாற்றி வருகிறார். அதேபோல், தாருகாவனேஸ்வரர் கோவிலிலும் அவர் தற்காலிக அர்ச்சகராகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், நாகநாத சுவாமி கோவிலில் உள்ள காலி பணியிடத்திற்கு புதிய அர்ச்சகர் நியமிக்கப்பட்டார். தற்காலிக பணியாளராக இரண்டு கோயில்களில் பணிபுரியும் ஒருவருக்கு ஒரு கோவிலில் பணியாற்ற தந்து விட்டு மற்றொரு கோவிலில் இன்னொருவருக்கு பணியாற்ற வாய்ப்பு தருவது எந்த வகையில் தவறு எனத் தெரியவில்லை " எனப் பேசியுள்ளார்