YouTurn

தமிழ்நாடு பள்ளி பாடப் புத்தகத்தில் சோழர், பாண்டியர் பற்றிய பாடம் இடம்பெறவில்லை எனப் பரவும் பொய்!

தமிழ்நாடு பள்ளி பாடப் புத்தகத்தில் சோழர், பாண்டியர் பற்றிய பாடம் இடம்பெறவில்லை எனப் பரவும் பொய்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

தமிழ்நாடு மாநில பாடத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சமூக அறிவியல் மற்றும் வரலாறு புத்தகத்தில் சோழர் மற்றும் பாண்டியர் பற்றிய பாடங்கள் இடம்பெற்றுள்ளன.

பரவிய செய்தி

சோழனுக்கும், பாண்டியனுக்கும் இடமில்லா பாடப்புத்தகத்தில் எதுக்கு பாபரும் அக்பரும்? தமிழனுக்கும் அவனுக்கும் என்ன தொடர்பு?

tn school book

Facebook link

விரிவான விளக்கம்

தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தில் கீழ் வழங்கப்படும் பள்ளி பாடப் புத்தகங்களில் தமிழர்களான சோழர் மற்றும் பாண்டிய மன்னர்கள் பற்றிய குறிப்புகள் இடம் பெறவில்லை. ஆனால், இஸ்லாமிய மன்னர்களான பாபர், அக்பர் பற்றிய பாடங்கள் மட்டும் இடம் பெற்றுள்ளதாக வலதுசாரிகளால் சமூக வலைத்தளத்தில் ஒரு தகவல் பரப்பப்படுகிறது.

https://x.com/i/web/status/1836611542810300921

உண்மை என்ன?

தமிழ்நாட்டில் வழங்கக்கூடிய பாடப் புத்தகத்தில் சேர, சோழ, பாண்டியர்கள் பற்றிய குறிப்புகள் இடம் பெற்றுள்ளதா என அரசு வழங்கக்கூடிய பள்ளி பாடப்புத்தகங்களை ஆய்வு செய்தோம். 

7ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் ’தென்னிந்தியப் புதிய அரசுகள்: பிற்காலச் சோழர்களும் பாண்டியர்களும்’ என்ற தலைப்பில் பாடம் இடம்பெற்றுள்ளது (பக்.129)

7th social science

இதேபோல் 9ம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் ’தொடக்கக்கால தமிழ்ச் சமூகமும் பண்பாடும்’ என்ற பாடத்தில் மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டியர் பற்றிய வரலாறு இடம்பெற்றுள்ளது (பக்.42)

9th social science book

11ம் வகுப்பு வரலாறு புத்தகத்திலும் ‘பிற்காலச் சோழர்கள், பாண்டியர்கள்’ என்கிற தலைப்பில் அவர்களின் ஆட்சி நிர்வாகம், பொருளாதாரம், நீர் மேலாண்மை என பல்வேறு விஷயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது (பக்.170)

11th history book

மேலும் ’தென்னிந்தியாவில் சமூக உருவாக்கம்’ என்ற பாடத்திலும் மூவேந்தர்கள் பற்றிய பாடங்கள் உள்ளன (பக்.75,76). இவற்றைத் தவிர்த்து மற்றப்பாடங்களிலும் சோழர், பாண்டியர் பற்றிய குறிப்புகள் உள்ளன. 

இவற்றிலிருந்து தமிழ்நாடு பள்ளி பாடப்புத்தகங்களில் சோழர் மற்றும் பாண்டியர்கள் பற்றிய பாடம் இடம்பெறவில்லை எனப் பரவும் தகவல் தவறானது என்பதை அறிய முடிகிறது. 

முடிவு: 

தமிழ்நாடு பாடப் புத்தகத்தில் சோழர், பாண்டியர் பற்றிய பகுதிகள் இல்லை என்று பரவக் கூடிய தகவல் தவறானது. 7, 9, 11ம் வகுப்பு புத்தகங்களில் அவர்கள் பற்றிய வரலாறு இடம் பெற்றுள்ளது.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.

பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க